6.01.2011

அம்மாவின் காதோரம் லோலாக்கு!ருசிகர தகவல்

  கடந்த காலங்களில் நகை கடையாய் காட்சி அளித்த முதல் அமைச்சர் அம்மா அவர்கள் ,சமீப காலமாக (அதாவது 14 வருசமாக )நகை ஏதும் அணியாமல் இருந்தாராம். இப்ப தீடீர்னு முதல்வர் ஆனதும் வைர தோடு அணிந்து காணப்பட்டார் . ஏன் இந்த காதணிகள் என்ற கேள்விக்கு அம்மா அளித்த பதில் இதோ ........

" 1997 பிறகு நான் நகைகள் அணிவது இல்லை ,நான் அணியாமல் இருப்பது என் கட்சியினர்கு (உண்மை சொல்லுங்க சசிகலாவுக்கு தானே ) பிடிக்கவில்லை .என் கட்சியினர் உங்கள் மீது அவதூறு கூறும் கருணாநிதியும் அவர் குடும்பமும் இன்று ஊழல் புகாரில் சிக்கிஉள்ள போது ,நீங்கள் ஏன் இப்படி சாமியார் போல் இருக்க வேண்டும் ( அப்பதானே நாங்களும் எதாவது கைய டேபுளுக்கு கிழே நீட்டலாம் ).தொண்டர்கள் உயிரையும் விடுவேன் என்று மிரட்டியதால் ,யாருடைய மனமும் உயிரும் நோகக்கூடாது என்பதால் மீண்டும் நகை அணிகிறேன் "என்று கூறியுள்ளார்....


வேணாம்ன்னு ஒதுக்கி வைத்தது தங்கங்கள் 
வேணும்ன்னு மாட்டிகிட்டா வைரம் 
என்ன வாழ்க்கை டா இது .


நமக்கெல்லாம் ஏனோ இந்த புகைப்படம் நினைவுக்கு வருவதால் ..மீண்டுமா என்ற பீதி வருவதை தவிர்க்க முடியவில்லை !!!!

அரசு விழாக்கள் எளிமையாக நடத்தப்படும் என்ற ஆறுதல் செய்தி காதில் விழுந்தது....நன்றி 


நண்பர்களே நான் தமிழ் மனதிற்கு புதியவன் உங்கள் ஓட்டும் கருத்தும் என்னை ஊக்குவிக்கும் ....நன்றி 
8 comments:

 1. வாங்க நண்பரே...

  தமிழ் மணத்தில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள்..

  அம்மா மாறுவாங்க ஆனா..

  ReplyDelete
 2. தமிழ் மணத்தில் தங்களுடைய ஓட்டையும் பதிவு செய்யுங்கள்...

  தமியாகத்தான் ஓட்டளிக்க வேண்டும்
  பதிவை இணைக்கும் போதே ஓட்டு பதிவாகாது..

  ReplyDelete
 3. # கவிதை வீதி # சௌந்தர் said...
  தமிழ் மணத்தில் தங்களுடைய ஓட்டையும் பதிவு செய்யுங்கள்...தமியாகத்தான் ஓட்டளிக்க வேண்டும்///
  நன்றி சகோ நீங்க சொல்லித்தான் தெரிந்தது எனக்கு இனிமே ஓட்டை பதிவு செய்கிறேன் . யாரும் கள்ள ஓட்டுன்னு சொல்லபிடாது . நன்றி சகோ

  ReplyDelete
 4. அம்மா விட்டாலும் அடிபொடிகள் விட மாட்டார்கள் போல....தமிழ்மணத்தில் ஒட்டு குத்தியாச்சு நண்பா....

  ReplyDelete
 5. kalyani said...///very good.///NKS.ஹாஜா மைதீன் said...//------------------------------------------//வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

  ReplyDelete
 6. காலத்திற்கேற்ற பதிவு நண்பரே நானும் ஓட்டு போட்டுவிட்டேன் நாலாவது ஓட்டு என்னுடையது

  ReplyDelete
 7. A.R.ராஜகோபாலன் said...///காலத்திற்கேற்ற பதிவு நண்பரே நானும் ஓட்டு போட்டுவிட்டேன் நாலாவது ஓட்டு என்னுடையது//நன்றி நண்பரே ...

  ReplyDelete