6.13.2011

உண்ணாவிரதம் இருந்த பாபா தீடிர் மரணம்

கடந்த நான்கு மாதமாக உண்ணாவிரதம் இருந்து வந்த சுவாமி நிக்மானந்தா இன்று தேஹராடுனில் உள்ள ஹிமாலயன் ஹாஸ்பிட்டலில்  மரணம் அடைந்தார் .இவர் கங்கை நதியில் நடக்கும் சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி19 முதல்  உண்ணாவிரதம் இருந்து வந்தார் .ஏப்ரல் 27அன்று நிலைமை கவலை அளிக்கவே ஹரித்வாரில் உள்ள மருத்துவமனைக்கு வலுக்கட்டையமாக கொண்டு செல்லப்பட்டார் .பின்னர் நிலைமை மிகவும் மோசமடைந்து கோமா நிலையில் ஹிமாலயன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . அங்கு இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் .

சுவாமியின் பக்த்தர்கள் இந்த மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் கூறியுள்ளனர் .

கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்களில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் யோகா குரு பாபா ராம்தேவ். அவரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் சந்தித்ததால் அவரது உண்ணாவிரதம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் கங்கை நதியை காப்பாற்றுமாறு உண்ணாவிரதம் இருந்த நிகாமானந்த் டேராடூனில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






17 comments:

  1. என்னமோ, ஏதோன்னு வந்தா????

    ReplyDelete
  2. என்னமோ, ஏதோன்னு வந்தா????By !* வேடந்தாங்கல் - கருன் *!////////////////////////////வருத்தமான செய்தி ஆசிரியரே

    ReplyDelete
  3. சூப்பர் பங்காளி. அதாவது அரசியல்வியாதிகளுக்கு உண்ணாவிரத்த்தால பிரச்சனை வந்தாலோ அல்லது காரியம் ஆக வேண்டும் என்றாலோ தான் உண்ணாவிரதம் இருக்கும் ஆட்களை கண்டு கொள்வார்கள் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். என்னுடைய சந்தேகம் என்னெவென்றால் இவ்வளவு பெரிய விஷயத்தை ஏன் பத்திரிக்கை காரர்கள் பெரிது படுத்தவில்லை. #டவுட்

    ReplyDelete
  4. என்னுடைய சந்தேகம் என்னெவென்றால் இவ்வளவு பெரிய விஷயத்தை ஏன் பத்திரிக்கை காரர்கள் பெரிது படுத்தவில்லை. #டவுட்
    By ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)///////////////
    அதே அதே இருட்டடிப்பு செய்திகள் பகிரவே இதை போஸ்ட் செய்தேன் .நன்றி நண்பரே

    ReplyDelete
  5. பணம் படைத்தவர்கள் செய்யும் செயல்தான் இங்கு பிரபல படுத்தபடுகிறது...

    இவரிடம் பணவசதி இருக்காது ஆகையால்தான் இவருடைய உண்ணாவிரதம் ஊமையாகி விட்டது..

    ReplyDelete
  6. உண்மையில் என் மனம் வருத்தப்படுகிறது..

    அந்த பாபாவின் ஆத்மா சாந்தியடையட்டும்...

    ReplyDelete
  7. ஊடகங்களின் பார்வையில் பட்டால்தானா நியாயமான போராட்டங்களும் அன்கீஹரிக்கபடும்...,என்னே கொடுமை நண்பா இது நன்றி நீங்களாவது பதிந்ததற்கு

    ReplyDelete
  8. உண்மையில் என் மனம் வருத்தப்படுகிறது.. அந்த பாபாவின் ஆத்மா சாந்தியடையட்டும்...By

    ReplyDelete
  9. பணம் படைத்தவர்கள் செய்யும் செயல்தான் இங்கு பிரபல படுத்தபடுகிறது... இவரிடம் பணவசதி இருக்காது ஆகையால்தான் இவருடைய உண்ணாவிரதம் ஊமையாகி விட்டது..By

    ReplyDelete
  10. பணம் படைத்தவர்கள் செய்யும் செயல்தான் இங்கு பிரபல படுத்தபடுகிறது... இவரிடம் பணவசதி இருக்காது ஆகையால்தான் இவருடைய உண்ணாவிரதம் ஊமையாகி விட்டது..
    By # கவிதை வீதி # சௌந்தர்///////
    உண்மைதான் உங்கள் கருத்து இந்த செய்திய இருட்டடிக்கும் ஊடங்களுக்கு சவுக்கடி

    ReplyDelete
  11. இது வேற பாபாவா?By சென்னை பித்தன்////////////ஆமா நல்ல பாபா போலிருக்கு

    ReplyDelete
  12. ஊடகங்களின் பார்வையில் பட்டால்தானா நியாயமான போராட்டங்களும் .......இது நன்றி நீங்களாவது பதிந்ததற்கு By A.R.ராஜகோபாலன் ///////நன்றி உங்கள் கருத்து இந்த செய்தியை பலரிடம் கொண்டு பொய் சேர்க்க உதவும்

    ReplyDelete
  13. வருத்தமாக இருக்கிறது..அவரது ஆத்மா சாந்தியடையட்டும்..பிரபலமானவர்களுக்குத்தான் ஊடகங்கள் கூட முன்னுரிமை தருகின்றன...

    ReplyDelete
  14. வருத்தமாக இருக்கிறது..அவரது ஆத்மா ............................................முன்னுரிமை தருகின்றன...By ஆர்.கே.சதீஷ்குமார்ஆமாம் சகோ தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. பாஸ்....உள் குத்து வடிவில் பாபாவின் மரணத்த்தை கற்பனையாக்கி ஊடகங்களுக்கு ஒரு சவுக்கடி கொடுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  16. பாஸ்....உள் குத்து வடிவில் பாபாவின் மரணத்த்தை கற்பனையாக்கி ஊடகங்களுக்கு ஒரு சவுக்கடி கொடுத்திருக்கிறீங்க.By நிரூபன் ///////////உள்குத்து ஒண்ணுமில்லை கும்மாங்குத்து தான் ,,,,நன்றி

    ReplyDelete