6.01.2011

சன் டிவி க்கும் குழி பறிக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் !


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அனேகமாக அடுத்த வாரம் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பெயர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற உள்ளது. அவர்கள் அனைவரும் சி.பி.ஐ. வலையில் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
முதல் தலை யார் தெரியுமா .....


தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

 ஏர்செல்  தொலைபேசி நிறுவனத்திற்கு முதலில் மறுக்கப்பட்ட லைசன்ஸ், சன்டிவியின் முக்கிய பங்குதாரரான மாக்சிஸ் நிறவனத்தின் (ஏர்செல்) கைகளுக்கு மாறியவுடன் லைசன்ஸ் வழங்கப்பட்டது எப்படி ?

சன் டிவி பங்குதாராக மாக்சிஸ் நிறவனத்தின் பங்கு தொகை 675 கோடிகள்?(எத்துனை சைபர் பாஸ் )

ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய தொலைதொடர்பு துறையில் முதலீடு செய்யலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டுவந்ததே நம்ம தயாநிதி மாறன் தான் ?

மலேசியா வரை சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி உள்ளதாகவும் விரைவில் பல தலைகள் உருளும் என்பதும் உறுதி .
7 comments:

 1. மாப்பிளை, இன்னைக்கு முதல் 2 ஜி எனக்கா?

  ReplyDelete
 2. ஊழல் எல்லா இடங்களிலும் மலிந்திருக்கிறது என்பதற்கு, அடுத்தகாக் கிளறப்படும் சன் டீவியின் விடயும் சாட்சி.

  ReplyDelete
 3. நிரூபன் said...//------------------// உங்கள் வருகைக்கு ... கருத்திற்கும் நன்றி .

  ReplyDelete
 4. தூண்டில் போட போட மீன்கலா மாட்டுதுங்க...

  பார்க்கலாம் என்னவாகுன்னு....

  ReplyDelete
 5. # கவிதை வீதி # சௌந்தர் said...
  //.........................////
  நீங்க நம்ம நாட்டின் தலையே உங்க பதிவுல இளுதுவிட்டீங்க நான் என் பங்குக்கு ...நன்றி சகோ வருகைக்கும் கருதிற்கும்

  ReplyDelete
 6. எது நடந்தாலும் நல்லது நடந்த சரி ரியாஸ் மக்களின் பணம் இப்படித்தான் அரசியல்வாதிகளால் கொள்ளை அடிக்க படுகிறது

  ReplyDelete
 7. A.R.ராஜகோபாலன் said...//--------------------...//நன்றி மீண்டும் வருக

  ReplyDelete