6.20.2011

214 கோடி எங்கே cbi பதில்


இன்று உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் கனிமொழியின் ஜாமீன்  மனுவை விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பான முழு விவரத்தையும், கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்ற 214 கோடி என்னாச்சு என்றும் விளக்கம் அளிக்க சி.பி.ஐ.,க்கு 20 ம் தேதி வரை அவகாசம் வழங்கியது. இதனையடுத்து சி.பி.ஐ., தாக்கல் செய்த பதில் மனுவில், கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்ற 214 கோடி லஞ்சப்பபணம்தான். இது லோனாக பெறப்பட்டது என போலியான ஆவணஙகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு முக்கிய நிலையில் இருப்பதால் இவருக்கு ஜாமீன் வழங்க கூடாது, மீறி வழங்கினால் வழக்கின் தன்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளனர். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வில்லை ...இது எல்லோறுக்கும் தெரிந்த தகவல் 

கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்ததாக கூறப்படும் கோடி ரூபாய் கடனாக பெற்றது அல்ல என்பதை மட்டும் தான் சிபிஐ நிருபித்துள்ளது.அது லஞ்ச பணம் தான் என்பதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.இந்நிலையில் பல வெளிநாடுகளில் இந்த பணம் தற்போது புழக்கத்தில் இருப்பதாகவும் அதை அங்கிருந்து மீண்டும் எதாவது ஒரு முதலீட்டின் மூலம் வெள்ளை பணமாக(white money) மாற்றி மீட்டு எந்த பினாமியின் பெயரிலாவது பாதுகாப்பது தான் திட்டமாம். சிபிஐ க்கு இவை அனைத்தும் தெரிந்தாலும் எந்த ஆதாரத்தை வைத்து இதை நிருபிக்க போகிறார்கள் என்பதை பொருத்து இருந்து பார்ப்போம். 

உண்மைகளை கண்டறிந்தும் அதை நிருபிக்க போராடி வரும் இந்த அவல நிலையை பார்க்கும் பொது நெஞ்சு பொறுக்குது இல்லையே ....

3 comments:

  1. என்ன செய்யறது நண்பாகண்ணுமுன்னாடியே கொன்னு போட்டவனுக்கும் சாட்சி கேக்குற நாடு இதுநல்ல ஆதங்கம் தான் பதில் தான் யாருகிட்டயும் இல்லை எல்லாத்துலேயும் பிளஸ் ஒரு ஒட்டு போட்டாச்சி

    ReplyDelete