இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள நிலக்கரி சுரகம் தான் நீங்க படத்தில் பார்ப்பது. இங்கு நடக்கும் அவலங்கள் சில உங்கள் பார்வைக்கு கவர்மென்ட் தான் ஒட்டு கம்மியா உள்ள இடங்களை கண்திறந்து பார்க்காது நாமாவது பார்ப்போமே ....
குழந்தை தொழிலாளர் பிரச்சனை எங்கு தான் இல்லை அப்படின்னு தோணுதோ ஆனால் இங்கே ரொம்ப அதிகம்ன்னு இந்த ஊர் பள்ளிகூட ஆசிரியர்கள் சொல்றாங்க .இவங்களை பள்ளி கூட்டி வருவது மிகவும் சிரமமான காரியமாம் .கிட்ட தட்ட 5000 சிறுவர்கள் இங்கே இந்த சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள் .
எந்த வித பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் இந்த மாதிரி சுரங்கன்லில் வேலைபார்ப்பது இங்கே வாடிக்கையாகி விட்டது . போன வாரம் கூட இந்த சிறுவனின் தோழன் வயது 16 .இந்த தொட்டியின் கயிர் அறுந்து விழுந்ததால் உயிர் இழந்தானாம்.
உழைக்கும் கைகள் எந்த நவீன கருவிகளும் இவர்களிடம் இல்லை.மத்திய அரசின் கட்டுபாடுகள் எதையும் இவர்கள் பொருட்படுத்துவதே இல்லை ,சுரங்க முதலாளிகளின் வலது கரமாக மாநில அரசு இருப்பதனால் ...
மோட்டார் சைக்கிள் ஓட்டும் பொது கட்டாயம் ஹெல்மெட் போட சொல்லுறாங்க ஆனா இந்த மனிதனை பாருங்க அறுவது கிலோ வெயிட்டை தூக்கி செல்லும் பாதையை பாருங்கள் . ஏன் ஒதுங்கி நிற்கிறார் தெரியுமா .தீடிர்ன்னு மேலே மலைகளை பாம் வைத்து தகர்பதால் மேலே இருந்து விழும் கற்களிடம் இருந்து தப்புவதற்காக
சுரந்திற்குள் செல்ல பாதுக்கப்பற்ற பயணங்கள்
விளம்பர இடைவேளைக்கு அல்ல மதிய உணவு இடைவேளைக்கு குரல் கொடுக்கிறார் இந்த உழைப்பாளி
இப்படி அரும்பாடுப்பட்டு சம்பாதித்ததை இவர்கள் எல்லாம் குடியிலும் சூதாட்டத்திலும் விபச்சாரத்திலும் இழந்து நிற்ப்பது தனி சோக கதை. இவர்கள் இந்த போதையில் முழ்கி இருந்தால் தானே கேள்வி கேட்க்க மாட்டாங்க
இந்த படங்களை எடுக்க கூட ஏகப்பட்ட கெடுபுடிகள் இருந்ததாம் ,அதுன்னையும் தாண்டி வெளியாகி உள்ள பாடங்கள் இவை BUT யாருக்கு ?
2009மட்டும் இந்தியாவில் நடந்த நிலக்கரி சுரங்க விபத்துக்களில் உயிர் இழந்தவர்கள் 81 பேர் .மேகாலயாவில் எத்துன்னை பேர் மரணித்தார்கள் யாருக்கும் தெரியாது .எந்த விசாரணையும் இல்லை கேள்வியும் இல்லை .
இந்த ஊரில் அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லை .அவசரத்திற்கு ஷில்லாங் தான் போகணுமாம் மூணு மணி நேரம் ஆகுமாம்
இந்த ஊரில் அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லை .அவசரத்திற்கு ஷில்லாங் தான் போகணுமாம் மூணு மணி நேரம் ஆகுமாம்
இத்தன்னை படங்களும் செய்தியும் ஒரு அமெரிக்க நாளிதழில் நான் கண்டவை .நம்ம ஊர் ஊடகங்கள் பொறுப்புடன் இந்த கேள்விகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதே இல்லை. பாவம் அவங்களுக்கு தான் டோனி மனைவி புடைவையில் அழகா இருக்காளா இல்லையான்னு கருத்துக்கணிப்பு நடத்தவே நேரம் பத்தலையே ? சரி நான் பதிவுலகில் இதை பதிவு செய்ய எண்ணி துணிந்தேன் கருமம் என்ன தான் ஆகுதுன்னு பாப்போம் .
இதை எல்லோரும் காபி பேஸ்ட் பண்ணுங்க இந்த உழைப்பாளிகளின் துயர் துடைக்க படவேணும் ..............
Tweet |
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteவட கிழக்கு பிராந்தியங்கள் என்றாலே எந்தக்கட்சியும் கண்டுகொள்வதே இல்லை. ஒரு எம்பி சீட் அல்லது ரெண்டு எம்பி சீட் தானே... என்ற அலட்சியம்..! அதன் நேரடி விளைவு... இந்த மனதை ரணமாக்கும் இக்காட்சிகள் மற்றும் அதிர்ச்சிகர செய்திகள்..!
ஏற்கனேவே அந்த ஏரியாவில் ஐரோம் ஷர்மிளா என்றொருவர் பல வருஷங்களாய் உண்ணாவிரதம் இருந்து போராடி வருகிறார். ஆனால், ராம்தேவின் உண்ணாவிரதம்தான் மீடியாவில் பெரிதுபடுத்தப்படுகிறது. பாவம், அம்மாநிலங்களின் மக்கள். இந்த கொடுமைகளை எல்லாம் இனியும் சகிக்க இயலாது சகோ..!
உண்மைகளை வெளிக்கொண்டுவந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.ரியாஸ் அஹமது.
@ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...//---------------------------//வாங்க சகோ .. நன்றி .வாசலாம்
ReplyDeleteதெரிந்த அவலங்களே இப்படியென்றால் இன்னும் வெளிச்சத்துக் வராத மற்றும் மூடிமறைக்கப்பட்டவை எவ்வளவு இருக்கும் பாருங்கள்...
ReplyDeleteபடங்களை பார்க்கும்போதே மனம் பதறுகிறது...
இது போல நிகழ்வுகள் பல இடங்களில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது .இவற்றை வெளியுலகிற்கு கொண்டுவர தங்களை போல் அனைவரும் முயற்சிக்க வேண்டும் .நன்றி .
ReplyDelete@ கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete//...........///
நன்றி சகோ . மனம் பதறுது தான்
@ koodal bala said...//-----------------//சரியாக சொன்னீர்கள் . முதல் வருகை .நன்றி சகோ
ReplyDeleteமக்களைக் கண்டு கொள்ளாத அரசியல்வாதிகளுக்கு யார் தான் பதில் சொல்லுவாரோ...
ReplyDeleteசகோ, இத்தகைய ஒரு துயரமான ஏழைத் தொழிலாளர்களைப் பற்றிய பகிர்வைத் தந்தமைக்கு நன்றி சகோ.
@நிரூபன் said...//------------------------------/நன்றி சகோ
ReplyDeleteஇது போல் நிறைய இடங்கள் உள்ளது, தொழில்தான் வேறு., யார் கேட்கபோரான்களோ., சினிமாவாக இருந்தா விஜயகாந்த் இந்த நேரம் தட்டி கேட்டிருப்பார்! ச்சே இது நிஜமாகி போனதுதான் தப்ப போச்சு
ReplyDeleteநெஞ்சை பதறவைக்கும் பதிவு நண்பரே , இது போல் நமக்கு தெரியாமல் என்னவெல்லாம் கொடுமைகள் நடக்கின்றனவோ
ReplyDeleteகவர்மென்ட் தான் ஒட்டு கம்மியா உள்ள இடங்களை கண்திறந்து பார்க்காது நாமாவது பார்ப்போமே ....
நெஞ்சில் அறையும் உண்மைகள் சகோதரரே
@ ஷர்புதீன் said...நன்றி மீண்டும் வருக
ReplyDelete@AR.ராஜகோபாலன் said...நன்றி நன்றி ..மீண்டும் வருக
ReplyDeleteகுட் போஸ்ட்
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் said...நன்றி
ReplyDeleteஅட கொடுமையே....
ReplyDeleteஅட கொடுமையே....
ReplyDeleteNKS.ஹாஜா மைதீன் said...//ரொம்ப லேட்டா வந்துட்டு லொள்ள பாரு ரெண்டு வார்த்தை ரெண்டு கம்மெண்டு . நன்றி நண்பா
ReplyDeleteஉணர்வுகளை உறைய செய்கிறது இந்த பதிவின் வாயிலாக அறிந்துகொண்ட பல உண்மைகள் . பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
ReplyDelete@! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...//-----------//உங்கள் வருகை மிகவும் சந்தோசம் அளிக்கிறது.நன்றி மீண்டும் வருக
ReplyDeleteஒன்றும் பண்ண முடியாது. நம் மக்கள் தாமாக திருந்தி குழந்தைகளை பெற்று போடும் மிஷினாக வாழாமல் அக்கபூர்வமாக செயல்பட்டால்தான் இந்தியாவில் மனித உயிர்களுக்கு மதிப்பு இருக்கும். என்றைக்கு நாம் நமது பெருகும் ஜனத் தொகையை நமது பலம் என்று சொல்லாமல் சுமை என்று நினைக்கிறோமோ அன்றுதான் இதற்கெல்லாம் விடிவு.
ReplyDeleteமனதை தொடும் பதிப்பு !
ReplyDelete