6.04.2011

ஊழல் பண்ணுன அரசியல்வாதிக்கு அடி உதை தந்த மக்கள்

 ஊழல் புரிந்ததாக 8 கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இவர்களின் இடுப்பில் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றனர். இச் சம்பவம் மேற்குவங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள சரைகார் கிராமத்தில் நிகழ்ந்தது.


அசிந்தா மோன்டல், ஸ்ரீகாந்த கோஷ் ஆகிய இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழு உறுப்பினர்களாவர். இவர்களுடன் முன்னாள் கிரா பஞ்சாயத்து செயலர் ஜாஹர் கோஷ், அஸ்வினி மோன்டல்,சுகுமார் பிராம்னிக், கார்த்திக் மோன்டல் மற்றும் மூன்று கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், சுநீல் முல்லிக், செயலர் ஊழல் புரிந்ததாகவும் இவர்களை மக்கள் அடித்து உதைத்து இடுப்பில் கட்டி இழுத்துச் சென்றதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் எஸ்.கே. ஜமால் தெரிவித்தார்.
15 தினங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட ரூ. 6 லட்சம் மேம்பாட்டு நிதியை எப்படி செலவிட்டனர் என்று விளக்கம் கோரினர். அதற்கு சனிக்கிழமை விளக்கம் அளிப்பதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் விவரம் அளிக்காததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் இவர்களை அடித்து உதைத்ததாகத் தெரிகிறது.

கிட்ட தட்ட 34வருஷம் ஒரே கட்சி ஆட்சி செய்த மாநிலமும் முன் மாதிரியாக இல்லை ஐஞ்சு வருஷத்திற்கு ஒரு முறை மாற்றம் ஏற்படும் மாநிலங்களும் முன் மாதிரியாக இல்லை, அட சனியனே சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடும் முன்மாதிரியாக இல்லை நாம் என்ன தான் செய்வது .இனி தப்பு எவன் செய்ஞ்சாலும் அடி விளும்கிற பயம் உண்டுபன்னனும் இந்த கிராம மக்கள் செய்ததை எல்லோரும் பின்பற்றலாகுமா ? பின்பற்றினால் தொண்டர்படை கொண்டு நம்மை அடைகிவிடுவார்களே என்ன செய்வது .மிடில் கிளாஸ் மனசாட்சி இப்படி புலம்பி புலம்பியே சாகவேண்டியது தான் போல ...

இறைவா எங்கள் அனைவருக்கும் நல்வழி காட்டுவாயாக ...........


9 comments:

  1. தமிழ்நாட்டிலும் நடக்கும், நடக்கனும்

    ReplyDelete
  2. சி.பி.செந்தில்குமார் said...//------------------------///நன்றி குருவே வருகைக்கு ....தொண்டர்படை சும்மா விடுமா வீடு காட்டுடுவாங்க இல்ல

    ReplyDelete
  3. பரவட்டும் நாடெங்கும் இந்த வேகம்!

    ReplyDelete
  4. மிடில் கிளாஸ் மனசாட்சி இப்படி புலம்பி புலம்பியே சாகவேண்டியது தான் போல ...

    மாற்றம் வரும், வரணும் என்று நினைப்பதை விட
    மாற்றம் நம்மிடத்திலிருந்து தொடங்கினாலே
    எல்லாம் சரியாகும் நண்பரே
    மிக நல்ல பதிவு
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. சென்னை பித்தன் said...//// ஐயா /// நன்றி சரியா வருமா

    ReplyDelete
  6. @A.R.ராஜகோபாலன் said...நன்றி

    ReplyDelete
  7. மேற்கு வங்கத்தில் இடம் பெற்ற புரட்சி, எல்லா மாநிலங்களிற்கும் பரவும் போது தான் ஊழலற்ற வளமான சமூகம் உருவாகும்.

    ReplyDelete
  8. சகோ, இண்ட்லி ஓட்டுப் பட்டையினை உங்கள் தளத்தில் இணைக்கவில்லையா?

    http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

    ReplyDelete
  9. நிரூபன் said...//--------------//நன்றி சகோ. சகோ, இண்ட்லி ஓட்டுப் பட்டை இருக்கிறது சகோ

    ReplyDelete