6.01.2011

அஜித்தின் மங்காத்தா திரைப்பட விமர்சனம் ...

எல்லோரையும் முந்திக்கிட்டு விமர்சனம் எழுதுவது ரொம்ப கஷ்டம் ,நான் என்ன பண்ணுறதுன்னு யோசுச்சதில ,இதுவரைக்கும் பார்த்த படித்த கேட்ட செய்திகளை வைச்சு ஒரு விமர்சனம் எழுதலாம்ன்னு ஐடியா வந்தது.


          பணக்கார பிரபுக்களின்   சூதாட்டத்தில் சிக்கி தனது போலிஸ் அதிகாரி பதவியையே இழக்கும் ஒருவன் ,அதே சூதாட்டத்தில் மிக பெரிய புள்ளியாக உயர்ந்து நிற்பதும் அதற்க்கு அவன் சந்திக்கும் இழப்புகளும் தான் கதை .



இப்படி ஒரு anti ஹீரோ கதாப்பாத்திரம் நாம பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது.இதில் துணிந்து நடித்த அஜித்திற்கு முதலில் ஒரு சபாஷ் .    அஜித்தின் ஒப்பனை மிக கச்சிதம். ஆனால் அதுவே காதல் காட்சிகளில் உறுத்தலாக இருந்தது மைனஸ்.அஜித்தின் உடல்மொழி நடிப்பு மிகவும் ரசிக்கும் படி இருந்தது.மாபியா தலைவன்னாகவும் போலீசாகவும் வரும் காட்சிகளில் மாறுபட்ட நடிப்பை நம் கண்முன் கொண்டுவந்து அட்டகாசம் செய்கிறார் அஜித் .

 வழக்கமான தமிழ்பட ஹீரோ இன் வேலையை செய்து உள்ளார் த்ரிஷா .பணத்தை வேட்டையாட அலையும் இளைஞர்களாக வெங்கட் பிரபுவின் வழக்கமான கூட்டணியில் லக்ஸ்மி ராய் கூடுதல் கவர்ச்சியும் சுவாரசியமும் சேர்த்துள்ளார். பிரேம்ஜி காமெடி அசத்தல் .

அர்ஜுன் மிக சிறிய கதாப்பாத்திரம் ஏற்று இருந்தாலும் மனதில் நிற்கிறார். அஜித்தும் அர்ஜுனுக்கும் நடக்கும் சூடான வாக்குவாதத்திற்கு நடுவில் அஜித் அர்ஜுனை ஆக்க்ஷன் கிங் என்று அழைப்பது நம்ம கனவை கலைப்பது போல் உள்ளது.
சண்டை காட்சிகளில் அபார உழைப்பு தெரிகிறது.

 பாடல்கள் யுவன்ஷங்கர் ராஜா அமர்க்களம் .பின்னணி இசையும் அசத்தல்.ஒளிபதிவு மும்பையை  நம் கண்முன் கொண்டு வந்துள்ளது. எடிட்டிங் துரத்தல் காட்சிகளுக்கு வேகத்தையும் பாடல்களில் இனிமையையும் கூட்டியுள்ளது.

இதுவரை விளையாட்டு பிள்ளையாக இருந்த வெங்கட்பிரபு புதிய களத்தில் கரை சேர்ந்த்விட்டார்.

மொத்தத்தில் மங்காத்தா அஜித் ரசிகர்களுக்கு தல பிரியாணி ,மற்றவர்களுக்கு நல்ல காரமான அளவு சாப்பாடு .

முதல் ஐம்பது ஒட்டு போடுபவர்களில் பத்து பேருக்கு மங்காத்தா திரைப்பட டிக்கெட் குலுக்கல் முறையில் வீடு தேடி வந்து சேரும் ஹி ஹி ...




11 comments:

  1. முதல் ஐம்பது ஒட்டு போடுபவர்களில் பத்து பேருக்கு மங்காத்தா திரைப்பட டிக்கெட் குலுக்கல் முறையில் வீடு தேடி வந்து சேரும் ஹி ஹி ...//

    சுருக்கமான நடையில் ஓர் காமெடி விமர்சனம். அருமை சகோ.

    ReplyDelete
  2. முதல் ஐம்பது ஒட்டு போடுபவர்களில் பத்து பேருக்கு மங்காத்தா திரைப்பட டிக்கெட் குலுக்கல் முறையில் வீடு தேடி வந்து சேரும் ஹி ஹி ...//

    நம்மாளை ஒரு ஓட்டுத் தான் போட முடியும் மாப்பிளை. அவ்...

    ReplyDelete
  3. நிரூபன் said...///...........................///நன்றி சகோ ...உங்களுக்கு தலை பிரியாநியோடு டிக்கெட் வீடு தேடி வரும் நன்றி

    ReplyDelete
  4. இந்த கதையை காப்பி ரைட்ட்ஸ் பண்ணியாச்சா?ஊரே மத தீதியில பத்திகிட்டு எரியுது, இங்கே பாரேன் நம்ம ஆளா?

    ReplyDelete
  5. ஷர்புதீன் said...///''''''''''''''''''''''''//நண்பரே நீங்க வந்ததற்கு நன்றி ..நம்ம வழி அன்பு வழி ரைட்டா ...

    ReplyDelete
  6. படத்தில் திருப்பு முனையாக பிரேம்ஜி அமரன் மிக திறமையாக சீட்டுக்கட்டினை கலைத்து தலைக்கே ஜோக்கர் சீட்டு வருமாறு செய்வது பற்றி கூற மறந்து விட்டீர்களே.

    ReplyDelete
  7. சேக்காளி said...////படத்தில் திருப்பு முனையாக பிரேம்ஜி அமரன் மிக திறமையாக சீட்டுக்கட்டினை ..............///முதல் முறை வருகை தந்துள்ள உங்களை வரவேற்கிறேன் ..எனக்கு அந்த சீன் புடிக்கவில்லை ஹி ஹி. நன்றி .

    ReplyDelete
  8. என்ன ஒரு கலக்கலான விமர்சனம் ரியாஸ் நீங்கள் ஆனந்த விகடன் விமர்சன குழுவில இருந்தீர்களா , அதுவும் கற்பனையில் என்றால் நல்ல தீர்க்கதரிசனம். நல்ல பதிவு நண்பரே

    ReplyDelete
  9. படம் வெளிவரும் முன்பே விமர்சனம் எழுதி சாதனை படைத்த நண்பா ...வாழ்க வாழ்க...

    ReplyDelete
  10. A.R.ராஜகோபாலன் said...////என்ன ஒரு கலக்கலான விமர்சனம் ரியாஸ் நீங்கள் ஆனந்த விகடன் விமர்சன குழுவில இருந்தீர்களா , //நன்றி நண்பரே ஓட்டும் போட்ட இன்னும் சந்தோசம்

    ReplyDelete
  11. NKS.ஹாஜா மைதீன் commented on Blog Post_௦௧////: படம் வெளிவரும் முன்பே விமர்சனம் எழுதி சாதனை படைத்த நண்பா ...வாழ்க வாழ்க...//// நன்றி நண்பா இனி ஒட்டு போடமா போனா பிச்சுபுடுவேன் பிச்சு ஹி ஹி

    ReplyDelete