6.11.2011

கள்ளக்காதல் சினிமாவை மிஞ்சும் நிஜம்


என்னப்பா மனசாட்சி என்ன உன்னை நான் வெளிய விட்டா ஆபத்தாச்சே ஏன் வெளிய வந்தே ?
ஒண்ணுமில்லை டெய்லி ஏடாகூடமா தலைப்பு வைச்சு மக்களை ஏமாத்துறது தப்புஇல்லை?இன்னைக்கு கூட என்ன தலைப்புடா இது ?
இல்லை இது பதிவுலக அரசியல் எல்லோரும் இதை தான் செய்யுறாங்க?ஆனா இன்னிக்கி இது சரியான தலைப்பு தான் ?
அப்புடியா என்ன செய்தி அது?
டெல்லில சோகன் லால் ஒருத்தனை கடந்த வெள்ளிகிழமை போலிஸ் கைது பண்ணினாங்க ?பயபுள்ள தானே செத்துட்ட மாதிரி செட் அப் பண்ணி தான் பொண்டாட்டிய கொலை வழக்குல  மாட்டி விட்டுஇருக்கான்!
அட கொடுமையே .ஏன் அப்படி பண்ணுனான் ?
வேற என்ன கள்ள காதல் தான் .நம்ம சோகன் லால் பொண்டாட்டி சோனுன்னு ஒருத்தனோட ஒரே கிளுமா ஒரே கிளுப்பாவா காதல் பண்ணிக்கிட்டு இருந்திருக்கா.புருஷனுக்கு தெரிஞ்சுரிச்சு. 
அதுக்கு எப்படி தானே செத்த மாத்ரி செட் அப் பண்ணினான் ?
சொல்றேன் கேளு ? இந்த சோகன் லால் ,அவன் தம்பி அப்புறம் அவனோட அப்பா எல்லாம் சேர்ந்து செய்த வேலை இது. ஒரு நாள் குடி போதையில ரோட்டோரத்தில ஒருத்தன் கிடந்ததை பார்த்த சோகன் லால் அவனை கொன்று தன் காரில் ஏற்றிதனது ஐ டி கார்டு ,பர்சு எல்லாத்தையும் அவன் பாக்கெட்ல்ல வைச்சு  ஒரு கால்வாயில் தள்ளி விட்டுட்டான். போலிஸ் விசாரணையில் சோகன் லால் தம்பி இது என் அண்ணன் தான்னு அடையாளம் காட்ட பொண்டாட்டியையும் அவளோடோ கள்ள காதலனையும் போலிஸ் கைது பண்ணிச்சு .
சினிமா கதை மாதிரிதான் இருக்கு?சரி சோகன் லால் என்ன ஆனான் ?
இவ்வளவும் பண்ணிட்டு பார்ட்டி தன் மனைவி கூட ஜல்சா பண்ணுன சோனுவோட தங்கட்சியையே கூட்டிகீட்டு பாதார்பூர் என்கிற ஊரில் குடித்தனம் நடத்தி இருக்கான் .நம்ம போலிஸ் எப்படியோ புடிச்சு உதைச்சு உண்மையை கரந்துருச்சு ....
ஏன்டா அவன் பொண்டாட்டி பண்ணினது கள்ளகாதல்ன்னா இந்த பய பண்ணினது என்னவாம் ?
அது அவன் சோனுவ பழிவாங்க தான் தங்கச்சிய கூட்டிட்டு ஓடுனானாம் ?
அட கண்றாவியே ?என்னடா இன்னைக்கு உனக்கு இந்த மாதிரி செய்திதான் பகிர்வதற்கு கிடைச்சதா ..வேணாம் டா நல்ல பயனுள்ள தகவல் இருந்தா மக்கள்கிட்ட சொல்லு இப்படி இரண்டாம் தர செய்தி சொல்லி என்ன பயன் இருக்கு ...
டேய் டேய் மனசாட்சி வேணாம் ...இவ்வளவு நேரம் நீயும் தானே ஆர்வமா கேட்ட என்னமோ நக்கீரன்ல வர கில்மா கதை எழுதின மாதிரி திட்டுற ...இது செய்தி நான் படித்து உங்கிட்ட சொன்னேன் 
சரி சரி விடு விடு நாளைக்கு நல்லதா  எதாவது சொல்லு .இதுல கூட தப்பு செயஞ்சவன் தப்ப முடியாது , கள்ள காதல் தேவை இல்லை அப்படின்னு நல்ல செய்திகள் இருகிறதா நான் மனசை தேத்திகிரேன் ...ஆனா இந்த புகைப்படம் உறுத்தல் தான் 
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்லை ?
ஏன்டா இந்த வசனம் எழுதுனேன் பாலகுமாரன் கண்ணீர் விடுறார்டா ,போதும் நிறுத்து நான் வரேன் ... 
8 comments:

 1. @@@...kalamaruduranYES ITS TRUE NEWS ..TQ FOR UR VISIT COME AGAIN

  ReplyDelete
 2. @@@@@@@! ♥ வேடந்தாங்கல் ♥ !நன்றி மீண்டும் வருக

  ReplyDelete
 3. காலம் ரொம்ப கெட்டுக்கிடக்கு நண்பரே இது மாதிரியான செயல்கள் தான் நம் கலாச்சாரத்தை நிர்ணயம்செய்கின்றன .காலத்திற்கேற்ற பதிவு

  ReplyDelete
 4. @@@@@A.R.ராஜகோபாலன்நன்றி மீண்டும் வருக ..இது மாதிரி அசிங்கமான செய்தி எழுத பிடிக்காது ஆனால் ஒரு திகில் படம் போல் அரங்கேறி உள்ள நிஜம் என்பதால் எழுதினேன்

  ReplyDelete
 5. கள்ளக் காதல் பற்றிய சமூகத்திற்கு அறிவுரை கூறும் பதிவு அருமை சகோ.

  மனச்சாட்சிக்கு மட்டும் தான் தெரியும்,
  இலகுவில் எடை போட முடியாத எங்கள் மனதின் நிலமை..

  ReplyDelete
 6. @@@@@நிரூபன்உண்மைதான் மனச்சாட்சி எடை போட முடியாது ...நன்றி சகோ

  ReplyDelete