அன்று குற்றஉணர்வில் பார்வை தாழ்த்திக்கொண்டது
சூரியன் இல்லா வானம் போல பொட்டு இழந்து நீ
வாயில்லா சாட்சியான குழந்தையுடன் நான்!
பொட்டு எங்கே என்றேன் நான் ?
பெண்ணா நான் என்றாய் நீ?
உன்னை பிரிந்தபோது அழுத கண்ணீர்
மீண்டும் எட்டி பார்க்க என் குழந்தையின்
பிஞ்சு விரல்கள் கண்ணீர் துடைக்குதடி!
வட்டிக்கும் ரொட்டிக்கும் வேர்வை சிந்துகிறேன்
கண்ட காட்சி மறக்க முடியாமல் கண்ணீர் வடிக்கிறேன்.
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம் போல
என் கண்கள் கண்ணீர் தர மறுத்தால் என்ன ?
எவர் சீர்கெட்டாலும்
சமசீர் வேண்டாம்
என சொல்லும் ஜெயலலிதாவிடம்
மனஉறுதியை கேட்டேன் !
கருணை இல்லாமல் கொன்று குவிக்கும்
ராஜபக்சேவிடம் கல்நெஞ்சை கேட்டேன்
உன் நிலை மறப்பதற்கு ..
உன் நிலை மறப்பதற்கு ..
வீடு மனைவி மக்கள் என வாழ
உன்னை மறப்பதற்கு ....
இவர்களுக்கு வாக்களித்தவர்கள் ஏமாந்ததை போலவே
கேட்டது கிடைக்காமல் நானும் ஏமாந்தேன்!
இவர்கள் ஏமாற்றுவதை போல உன்னை
மறந்ததாய் நானும் ஏமாற்றுகிறேன் !!
-ரியாஸ்
Tweet |
முதல் வரியில் இருந்து தன் குழந்தையின் பிஞ்சு விரல்கள் கண்களின் ஈரத்தை துடைக்கும் வரையில் உள்ள வரிகள் மனதை மிகவும் பாதித்தது.... கிட்ட தட்ட அழுகையும் வர முயற்சித்தது...
ReplyDeleteஅரசியல்வாதி பத்தி பேசுனா கவிதையும் பொழிவிழக்குது (என் கண்ணோட்டம் மட்டும்... மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்):)
ஆமினா said...
ReplyDeleteமுதல் வரியில் இருந்து தன் குழந்தையின் பிஞ்சு விரல்கள் கண்களின் ஈரத்தை துடைக்கும் வரையில் உள்ள வரிகள் மனதை மிகவும் பாதித்தது.... கிட்ட தட்ட அழுகையும் வர முயற்சித்தது...
அரசியல்வாதி பத்தி பேசுனா கவிதையும் பொழிவிழக்குது (என் கண்ணோட்டம் மட்டும்... மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்):)
@@@@@@
இதில் புண்பட என்ன இருக்கு சகோ ....உங்கள் நேர்மை என்னை மெருகேற்றும் ...உடன் வருகைக்கு நன்றி ..நேற்று வரலையே ....தொடர்ந்து வாங்க
அட...வித்தியாசமான பதிவு...நல்லா இருக்குங்க பாஸ்...
ReplyDeleteஒப்பீடுகள் நல்லாய் இருக்கு பாஸ் ..))
ReplyDeleteஅருமையான கவிதை , உவமை சம்பந்த பட்டவர்களுக்கு சாட்டை.
ReplyDeleteதீரா சோகத்தின் நடுவே ஒரு நறுக் .....அருமை !
ReplyDeleteவித்தியாசம்மான பதிவு..
ReplyDeleteகலக்கறீங்க சகோ..
உள்குத்து ன்றது இதுதானா.....அருமை
ReplyDeleteநல்லாத்தான் ஒப்பிட்டிருக்கிறீங்க
ReplyDeleteபழைய காதலி -ஜெயலலிதா-ராஜபக்சே-கலைஞர்!!!
ReplyDeleteஎன் முன்னாள்(ல்) காதலி//
அவ்...அவ்...அவ்..என்ன ஒரு டெரர் தனமான தலைப்பு பாஸ்.
உன்னை பார்த்து பரவசப்பட்டே பழகிய கண்கள்
ReplyDeleteஅன்று குற்றஉணர்வில் பார்வை தாழ்த்திக்கொண்டது
சூரியன் இல்லா வானம் போல பொட்டு இழந்து நீ
வாயில்லா சாட்சியான குழந்தையுடன் நான்//
ஆகா...முதல் பந்தியில் ஜெயலலிதாவைப் போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கியிருக்கிறீங்களே.
பொட்டு எங்கே என்றேன் நான் ?
ReplyDeleteபெண்ணா நான் என்றாய் நீ?//
அம்மாவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் காற்றில் பறக்க விட்டு விட்டீர்களே.
உன்னை பிரிந்தபோது அழுத கண்ணீர்
ReplyDeleteமீண்டும் எட்டி பார்க்க என் குழந்தையின்
பிஞ்சு விரல்கள் கண்ணீர் துடைக்குதடி//
கனி மொழியைப் பிரிந்த கலைஞரின் நிலை.
ஹி...ஹி....
வட்டிக்கும் ரொட்டிக்கும் வேர்வை சிந்துகிறேன்
ReplyDeleteகண்ட காட்சி மறக்க முடியாமல் கண்ணீர் வடிக்கிறேன்.//
ஜெயிலில் உட்கார்ந்து கனியைப் பார்த்துப் பேசும் ராஜாவின் நிலை.
ஹி....ஹி....
செம கடி.
இவர்களுக்கு வாக்களித்தவர்கள் ஏமாந்ததை போலவே
ReplyDeleteகேட்டது கிடைக்காமல் நானும் ஏமாந்தேன்!
இவர்கள் ஏமாற்றுவதை போல உன்னை
மறந்ததாய் நானும் ஏமாற்றுகிறேன் !//
இறுதி வரிகளில் கொஞ்சம் சாட்டையடி கொடுத்திருக்கலாம், ஆனால் மக்களின் நிலையினை மகத்துவமாய் உரைத்திருக்கிறீங்க.
பல பேரின் கபட நாடகங்களை, வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, ஒரு சில அரசியற் பச்சோந்திகளின் நிலையினையும் உங்கள் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது.
மிகவும் ரசித்தேன் நண்பாஒப்பனை இல்லா ஒப்புகைகள்ஒத்திகை பார்க்காமலேயே ஓர் இதய வலியை சொன்ன விதம் அருமை.
ReplyDeleteதம்பீ!
ReplyDeleteஅருமையான கவிதை!
சுவைக்கப் படைத்தீர்
சுவைத்துப் படி(த்)தேன்
காப்பீட்டுத் திட்டம்தான்
காலவதி ஆகிவிட்டது உங்கள்
ஒப்பீட்டுத் திட்டம் உறிதியானது,
உண்மையானது.
இனி மேல் கவிதையே
எழுதுங்கள் நன்றி
புலவர் சா இராமாநுசம்
குணசேகரன்... said...
ReplyDeleteஅட...வித்தியாசமான பதிவு...நல்லா இருக்குங்க பாஸ்...
@@@@
நன்றி நண்பா
கந்தசாமி. said...
ReplyDeleteஒப்பீடுகள் நல்லாய் இருக்கு பாஸ் ..))
@@@
நன்றி நண்பா
M.R said...
ReplyDeleteஅருமையான கவிதை , உவமை சம்பந்த பட்டவர்களுக்கு சாட்டை.
@@@@
நன்றி நண்பா
koodal bala said...
ReplyDeleteதீரா சோகத்தின் நடுவே ஒரு நறுக் .....அருமை !
@@@@
மிக்க நன்றி சகோ
தேவைகளற்றவனின் அடிமை said...
ReplyDeleteஉள்குத்து ன்றது இதுதானா.....அருமை
@@@
நன்றி தொடர்ந்து வாங்க
மதுரன் said...
ReplyDeleteநல்லாத்தான் ஒப்பிட்டிருக்கிறீங்க
@@@@
நன்றி நண்பா
நிரூபன் said...
ReplyDeleteபழைய காதலி -ஜெயலலிதா-ராஜபக்சே-கலைஞர்!!!
என் முன்னாள்(ல்) காதலி//
அவ்...அவ்...அவ்..என்ன ஒரு டெரர் தனமான தலைப்பு பாஸ்.
@@@@
நன்றி நண்பா
நிரூபன் said...
ReplyDeleteஉன்னை பார்த்து பரவசப்பட்டே பழகிய கண்கள்
அன்று குற்றஉணர்வில் பார்வை தாழ்த்திக்கொண்டது
சூரியன் இல்லா வானம் போல பொட்டு இழந்து நீ
வாயில்லா சாட்சியான குழந்தையுடன் நான்//
ஆகா...முதல் பந்தியில் ஜெயலலிதாவைப் போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கியிருக்கிறீங்களே.
@@@@
ஐயோ நண்பா ஏன் கொலை வெறி அவ் வ்வ்வ்வ்
நிரூபன் said...
ReplyDeleteபொட்டு எங்கே என்றேன் நான் ?
பெண்ணா நான் என்றாய் நீ?//
அம்மாவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் காற்றில் பறக்க விட்டு விட்டீர்களே.
@@@@
இப்பவே ஆட்டோ வரும் சத்தம் கேக்குதே
நிரூபன் said...
ReplyDeleteஉன்னை பிரிந்தபோது அழுத கண்ணீர்
மீண்டும் எட்டி பார்க்க என் குழந்தையின்
பிஞ்சு விரல்கள் கண்ணீர் துடைக்குதடி//
கனி மொழியைப் பிரிந்த கலைஞரின் நிலை.
ஹி...ஹி....
@@@@@@@
என்ன வில்லதனமான சிரிப்பு
நிரூபன் said...
ReplyDeleteவட்டிக்கும் ரொட்டிக்கும் வேர்வை சிந்துகிறேன்
கண்ட காட்சி மறக்க முடியாமல் கண்ணீர் வடிக்கிறேன்.//
ஜெயிலில் உட்கார்ந்து கனியைப் பார்த்துப் பேசும் ராஜாவின் நிலை.
ஹி....ஹி....
செம கடி.
@@@@@@@@@@@
முடியலே நண்பா
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteமிகவும் ரசித்தேன் நண்பாஒப்பனை இல்லா ஒப்புகைகள்ஒத்திகை பார்க்காமலேயே ஓர் இதய வலியை சொன்ன விதம் அருமை.
@@@@@
மிக்க நன்றி சகோ
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteதம்பீ!
அருமையான கவிதை!
சுவைக்கப் படைத்தீர்
சுவைத்துப் படி(த்)தேன்
காப்பீட்டுத் திட்டம்தான்
காலவதி ஆகிவிட்டது உங்கள்
ஒப்பீட்டுத் திட்டம் உறிதியானது,
உண்மையானது.
இனி மேல் கவிதையே
எழுதுங்கள் நன்றி
புலவர் சா இராமாநுசம்
@@@@
ஐயா உங்கள் பாராட்டு மிகுந்த சந்தோசம் அளிக்கிறது
//ஆகா...முதல் பந்தியில் ஜெயலலிதாவைப் போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கியிருக்கிறீங்களே.//
ReplyDelete//அம்மாவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் காற்றில் பறக்க விட்டு விட்டீர்களே.//
//கனி மொழியைப் பிரிந்த கலைஞரின் நிலை.
ஹி...ஹி...//
//ஜெயிலில் உட்கார்ந்து கனியைப் பார்த்துப் பேசும் ராஜாவின் நிலை. //
ஆக மொத வரிய இருந்தே உள்குத்து ஆரம்பிக்குதா? :))
ஆமினா said...
ReplyDelete//ஆகா...முதல் பந்தியில் ஜெயலலிதாவைப் போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கியிருக்கிறீங்களே.//
//அம்மாவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் காற்றில் பறக்க விட்டு விட்டீர்களே.//
//கனி மொழியைப் பிரிந்த கலைஞரின் நிலை.
ஹி...ஹி...//
//ஜெயிலில் உட்கார்ந்து கனியைப் பார்த்துப் பேசும் ராஜாவின் நிலை. //
ஆக மொத வரிய இருந்தே உள்குத்து ஆரம்பிக்குதா? :))
@@@@@@@@@
கண்ணை கட்டுதே ...இனிஹிட்டுக்கு தலைப்பு வைச்சாபுட்டுக்குவேனோ ...அவ்வவ்வ்வ்வ்
நல்ல ஒப்பீடு!
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDeleteநல்ல ஒப்பீடு!
@@@@@@
வாங்க நண்பரே முதல் வருகை நன்றி நன்றி இனி தொடர்ந்து வாங்க
அன்பின் ரியாஸ் - அரசியல் பேசும் கவிதை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅரசியல் கவிதையை நன்றாகவே நயம்படவே எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDelete