7.02.2011

அழகு பெண்ணின் கம்பிர படங்கள் !!! அடடா---


2003 முதல்  கடந்த எட்டு வருடங்களில் தொடந்து 418 வெற்றிகளும் அடுத்தடுத்து 107 பட்டங்களுடன் தோல்வியையே சந்திக்காமல் ஓங்கிய தன்மையுடன் விளங்கும் ஒரு விளையாட்டு வீரரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன் ....அவர் ஒரு பெண்மணி நெதர்லாந்து நாட்டவர் எஸ்தர்  வேர்கீர்
(Esther Vergeer )29 வயதான மாற்று திறனாளி அட எதுக்கு இப்படி சொல்லணும் சாதனை நாயகி .

"இந்த சாதனைகளை பற்றியெல்லாம் நான் நினைப்பதே இல்லை ஏனென்றால் குறைந்த பட்சமாக இதை முறியடிப்பது இப்போதைக்கு முடியாது அல்லவா " என கம்பீரம் குறையாமல் சொல்கிறார் இவர் .


இந்த பெண்ணின் எட்டாம் வயதில் முதுகெலும்பு சார்ந்த ஒரு ஆபரேஷன்னுக்கு பிறகு கால்கள் இரண்டும் செயல் இழந்தன.அந்த அறுவை சிகிச்சை உயிரை காத்து காலை வாரிவிட்டது. நெதர்லாந்து அரசாங்கம் இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க விளையாட சக்கரமுள்ள நாற்காலி அளித்து ஊக்குவிப்பது வழக்கம்.அதில் உற்சாகமான எஸ்தர்  வேர்கீர் பள்ளி நாட்களில் கூடைப்பந்து விளையாட்டில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.நாட்டிற்கு விளையாட அழைப்பு கூட வந்தது.ஆனால் டென்னிஸ் மேல் தோன்றிய ஆர்வத்தால் டென்னிஸ் விளையாட்டில் கவனம் செலுத்தினார்.

கூடைப்பந்து விளையாட்டில் தேர்ச்சி பெற்று இருந்ததன் மூலம் எளிதில் நகரும்தன்மை பெற்று இருந்தேன் அது டென்னிஸ் விளையாட்டிற்கு தேவையான ஒன்று என்கிறார் இவர் . 

ஒவ்வொரு கணமும் நான் முன்னேறுகிறேன் என்ற எண்ணம் கொள்ளுதல் மிகவும் அவசியம் என தனது மனோத்தத்துவ பயிற்சியாளரின் வார்த்தைகள் மிகவும் உதவியதாக கூறுகிறார்.

சென்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இவர் அடுத்த வருடம் லண்டனில் நடக்கவிறுக்கும் ஒலிம்பிக்கிலும் விளையாட இருக்கிறார்.அதன் பின்னர் ஒய்வு பெறக்கூடும். 

மேலும் இந்த மாதிரி பாதிக்க பட்ட குழந்தைகளின் நல்வாழ்வுக்காக ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். மாற்று திறனாளிகளுக்கான டென்னிஸ் விளையாடிற்கு தேவையான சக்கரமுள்ள நாற்காலி ஒன்றை புதிதாக வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார். இதன் மூலம் இந்த டென்னிஸ் விளையாட்டில் பெரிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கிறார் எஸ்தர் .


நாமும் இனி ஒவ்வொரு கணமும் நான் முன்னேறுகிறேன் என்ற எண்ணம் 
கொள்வோமே .... 


20 comments:

  1. மனம் தளராமல் ஒவ்வோறு அடியும் முன்னோக்கி வைத்தால் வெற்றித்தான்...


    அதற்க்கு உதாரணம் இந்த பெண்மணி...

    ReplyDelete
  2. மாற்றுத்திறனாளிகளுக்கு இவர் முன்மாதிரி....


    இன்னும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  3. # கவிதை வீதி # சௌந்தர் said...
    மனம் தளராமல் ஒவ்வோறு அடியும் முன்னோக்கி வைத்தால் வெற்றித்தான்...


    அதற்க்கு உதாரணம் இந்த பெண்மணி...
    @@@@@@@@@
    நன்றி நண்பரே ....உங்கள் உடன் வருகை உற்ச்சாகம் அளிகிறது....உண்மைதான்

    ReplyDelete
  4. ஒவ்வொரு கணமும் நாம் முன்னேறுவோம்.. கண்டிப்பாக,,

    ReplyDelete
  5. # கவிதை வீதி # சௌந்தர் said...
    மாற்றுத்திறனாளிகளுக்கு இவர் முன்மாதிரி....
    இன்னும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்..
    @@@@@@@@@@@@@
    நன்றி நண்பரே ....உங்கள் உள்ளத்தில் இருந்து வரும் வாழ்த்து அந்த பெண்ணை மேலும் சாதிக்க செய்யும்

    ReplyDelete
  6. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    வாழ்த்துக்கள் ..
    @@@@@@@@@@@@@@@@@
    நன்றி நண்பரே ....உங்கள் உள்ளத்தில் இருந்து வரும் வாழ்த்து அந்த பெண்ணை மேலும் சாதிக்க செய்யும்

    ReplyDelete
  7. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஒவ்வொரு கணமும் நாம் முன்னேறுவோம்.. கண்டிப்பாக,,
    @@@@@@
    வாழ்த்துக்கள் நண்பரே ...நன்றி நன்றி

    ReplyDelete
  8. தன்னம்பிக்கையே வெற்றியின் சாவி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. எளிதில் மனம் சோர்ந்து போகும் மனிதருக்கெல்லாம் இவர் ஒரு வழிகாட்டி!

    ReplyDelete
  10. கிராமத்து காக்கை said...
    தன்னம்பிக்கையே வெற்றியின் சாவி
    வாழ்த்துக்கள்
    @@@@@@
    நன்றி நன்றி

    ReplyDelete
  11. சென்னை பித்தன் said...
    எளிதில் மனம் சோர்ந்து போகும் மனிதருக்கெல்லாம் இவர் ஒரு வழி///
    @@@@@@
    நன்றி ஐயா ...நன்றி ஐயா .. இந்த பதிவின் நான் சொல்ல நினைத்தது இது தான்

    ReplyDelete
  12. சாதனைப் பெண்ணைப் பற்றிய வியத்தகு தகவல்களையும், பொது வாழ்க்கையில் அவரின் பங்களிப்புக்களையும் பகிர்ந்திருக்க்கிறீங்க. நன்றீ சகோ.

    ReplyDelete
  13. She is very great . . Thanks for share this post

    ReplyDelete
  14. This post really increase our self confidance

    ReplyDelete
  15. எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை , நல்லப் பகிர்வு நண்பாவித்தியாசமான ராஜபாட்டையில் கலக்குங்க நண்பா

    ReplyDelete
  16. நிரூபன் said...
    சாதனைப் பெண்ணைப் பற்றிய வியத்தகு தகவல்களையும், பொது வாழ்க்கையில் அவரின் பங்களிப்புக்களையும் பகிர்ந்திருக்க்கிறீங்க. நன்றீ சகோ.
    @@@@@@
    நன்றி நன்றி சகோ

    ReplyDelete
  17. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    She is very great . . Thanks for share this post
    @@@
    yes she is gr8 that made me ti share dis wit u all.. tq tq tq

    ReplyDelete
  18. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    She is very great . . Thanks for share this post
    @@@@@
    tq bro goal achieved...yes to spread this message i posted this to all ,,,
    tq tq

    ReplyDelete
  19. A.R.ராஜகோபாலன் said...
    எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை , நல்லப் பகிர்வு நண்பாவித்தியாசமான ராஜபாட்டையில் கலக்குங்க நண்பா
    @@@@@
    நன்றி நன்றி

    ReplyDelete