7.09.2011

நடிகர் விஜய்க்கு எதிராக கிளம்பும் புரளிக்கு பதில்

வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களை அடுத்து விஜய்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மழை நேர மழைத்துளி'  என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இப்படத்தில் நடித்தார் என்றால் சீமான் இயக்கத்தில் 'பகலவன்'  எப்போது துவங்கும்  என்ற கேள்வி கோலிவுட்டில்  நிலவியது. இது குறித்து இயக்குனர் சீமானிடம் பேசினோம்

" தம்பி விஜய் இப்போது 'நண்பன்' படப்பிடிப்பில் இருக்கிறார். அப்படம் முடித்தவுடன் எனது இயக்கத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார்.

எனது இயக்கத்தில் தம்பி விஜய் நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் முற்றிலும் தவறானது. படப்பிடிப்பு தொடங்கும் தேதி தெரிந்தவுடன் தான் நாயகி யார், வேறு யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது ஒப்பந்தம் செய்யப்படும்.

தம்பி விஜய்யிக்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமைய இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறினார்.

4 comments:

  1. எல்லா நடிகர்களுக்கும் அவங்க படம் எல்லாமே மைல் கல்தான்!!

    ReplyDelete
  2. பாத்து மைல்கல் அவர் தலைலேயே விழுந்திடப்போவுது.ஹி ஹி ஹி நல்லப் பதிவு நண்பா

    ReplyDelete
  3. விஜயின் படம் பற்றிய அதிரடித் தகவலைத் தந்திருக்கிறீங்க. நன்றி சகோ.

    ReplyDelete