7.24.2011

பிஞ்சிலேயே பளுத்த கலைஞர் வயது 20

தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூர் அண்ணா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் கட்சிக்கு புது தெம்பும், புத்துணர்ச்சியும் அளிக்க புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றனர்.
 
அதற்கு தகுதியானவர் மு.க. ஸ்டாலின்தான். அவர் இக்கட்டான காலகட்டத்தில் சரியாக வழி நடத்தி சென்றுள்ளார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். தொண்டர்களிடம் கண்ணியமான நட்பு வைத்துள்ளார். தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளார். எனவே மு.க. ஸ்டாலினை தலைவராக நியமிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் பேசினர்.
 
இதற்கு பதில் அளித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த வயதிலும் 20 வயது இளைஞர் போல் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார். எனவே தி.மு.க. தலைமை மாற்றம் என்ற பேச்சு இப்போது எழவில்லை. தலைமை மாற்றம் என்பது இப்போது அவசியமில்லை.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
மு.க. ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் என செயற்குழு உறுப்பினர்கள் பேசும்போது மத்திய மந்திரி மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு இருந்தனர். ஆனால் அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி சேர்ந்ததன் மூலம் கடந்த தேர்தலில் தி.மு.க. வுக்கு பெரிய அளவில் எந்த வித பலனும் இல்லை. தவறான கணிப்புகள் மூலம் கூட்டணி அமைத்து தேர்தலில் தோற்றுவிட்டோம் என்று சில செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
 
இலவச திட்டங்களை மட்டுமே நம்பியதால் தேர்தலில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது எனவும் தெரிவித்தனர். தி.மு.க. வை அழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு கட்சியினர் மீது நில அபகரிப்பு வழக்குகளை போட்டு வரும் அ.தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறினார்கள்.
---------------
மாலைமலரில் இந்த செய்தி படித்தவுடன் மனதில் தோன்றிய டவுட்டுதான் தலைப்பு 

6 comments:

 1. வணக்கம் பாஸ்,
  தலைப்பே ஒரு கிக்காக இருக்கே.

  ReplyDelete
 2. அடடா, செம காமெடி இந்த வயதிலும் இருபது வயது இளைஞர் போல்;-))))

  ReplyDelete
 3. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete
 4. எஞ்சியுள்ள ஸ்டாலினை வைத்தாவது, தனது கட்சியினை மீண்டும் புதுப்பிக்கலாம் என்று ஐயா நினைக்கிறார் போல இருக்கே.

  ReplyDelete
 5. நாளைல இருந்து நானும் வீல் சேர் ல சுத்த போறேன் (அப்போதாவது அவர மாதிரி சுறுசுறுப்பா? இருக்கலாம்னுதேன் :)

  ReplyDelete
 6. அடிபுடி சண்டைலாம் நடந்ததா கேள்விபட்டேன்.... ????

  ReplyDelete