7.25.2011

புலிகளுக்கு கிடைத்தது விடுதலையா கண்துடைப்பா

மிருக கடத்தலும் உலகை உலுக்கும் விஷயங்களில் ஒன்று அதற்கு கடத்தல் காரர்கள் அதிகம் பயன்படுத்தும் ட்ரான்சிட் பாயிண்ட் தாய் லாந்து.. இன்று தாய்லாந்து ஏர் போர்ட்டில் பிடிப்பட்ட சில அப்பாவி மிருகங்களின் படங்கள் சில 
மில்லியன் கணக்கில் தாய்பாட்டை (thai bhat) கொடுத்து என் வாயை கட்டி கொண்டுபோறான் பங்களாதேஷில் இருந்து ..ஆ .ராசாவின் வாயை கட்ட முடியலை நாங்க என தப்பு பண்ணுனோம் இப்படி பண்ணுறீங்க 

என்னை ஒரு துபாய்காரன் கடத்திட்டு போக பார்த்தான் ஹி ஹி பயபுள்ள மாட்டிகிச்சு ...அரபு நாட்டு பெண்களை சைட் அடிக்க நினைத்தேன் முடியாதோ ?
என்னையும் அதே துபாய்காரன் தான் பிரேசிலில் இருந்து கடத்திட்டு போறான் ..என் ஆசையிலும் மண் தான் 
நானும் தான் நம்ம பிறந்து மூணு மாசம் தான் ஆகுது அதுக்குள்ளே ஆசையை பாரு அதான் நம்மை கூடுக்குள போட்டு கொல்றாங்க 
காசு இருத்த எதையும் வாங்கலாம்னு நினைக்கும் மனிதர்களே ...நீங்க அழிய போறீங்க என்று சொல்லி சிரிக்கும் கரடி குட்டி.... டி.ஆர் அல்ல 

இந்த சிறுத்தை குட்டி பிறந்து ரெண்டு மாசம் தான் ஆவுது ...நாடு விட்டு நாடு பிழைக்க போகும் மனிதர்களே உங்கள் வீட்டு ஞாபகங்கள் போலவே எனக்கு என் காட்டு ஞாபகங்கள்...என் தாய் மடியில் என்னை சேர்க்க குரல் கொடுங்கள் 
நானும் சிறுத்தை தான் எனக்கு தான் விலை அதிகமாம் ...என் ஓட்டம் ,வீரம் எல்லாம் இனி இந்த கூண்டுக்குள் தான் ...
மயக்க மருந்து கொடுத்து பொம்மைகளோடு பொம்மையாய் கடத்த பட்ட புலிக்குட்டி நான் ...நன்றி காப்பற்றியதர்க்கு ....ஆனா இது விடுதலையா இல்லை கண்துடைப்பா ...மீண்டும் எங்களை காட்டிலா விட போறீங்க ஜூவிலோ அல்லது காப்பகத்திலோ தானே .......

நெஞ்சை தொட்டு சொல்லுங்க கடைசி படம் மனசை ஏதோ பண்ணுது ...

9 comments:

 1. தன் சுயலாபத்திற்காக உயிர்களை வதைக்கும் மனிதர்களுக்கு இறைவன் பாடம் புகட்டுவான்!!!

  ReplyDelete
 2. அரபு நாட்டு பெண்ணை சைட் அடிச்சா என்ன நடக்கும்ன்னு அந்த குரங்குக்கு சொல்லி குடுக்கலியா ?

  ReplyDelete
 3. அன்பு நண்பா வணக்கம்வழமை போலவே அமர்க்களமான பதிவுநீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்மணத்திலும் வாக்கிட்டேன்.

  ReplyDelete
 4. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  PRESENT SIR.,
  @@@@@@
  tq sir

  ReplyDelete
 5. ஆமினா said...
  தன் சுயலாபத்திற்காக உயிர்களை வதைக்கும் மனிதர்களுக்கு இறைவன் பாடம் புகட்டுவான்!!!
  @@@
  நிட்சையம்மாக...

  நன்றி சகோ

  ReplyDelete
 6. koodal bala said...
  அரபு நாட்டு பெண்ணை சைட் அடிச்சா என்ன நடக்கும்ன்னு அந்த குரங்குக்கு சொல்லி குடுக்கலியா ?
  @@@@@
  குரங்கின் சந்தோசத்திலும் கை வைக்குரீன்களே

  ReplyDelete
 7. A.R.ராஜகோபாலன் said...
  அன்பு நண்பா வணக்கம்வழமை போலவே அமர்க்களமான பதிவுநீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்மணத்திலும் வாக்கிட்டேன்.
  @@@@@@@@@@
  நண்பா உங்கள் கருத்து ...படிக்காமல் கை உடைந்தது போல இறுக்கு

  ReplyDelete
 8. போட்டோ கமெண்ட்ஸ்களை, வித்தியாசமான உணர்வோடு, பிராணிகளின் பேச்சு மொழியாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

  மனதைக் கனக்கச் செய்கிறது இறுதிப் படம்.

  ReplyDelete