இன்று சுப்ரிம் கோர்ட்டில் நம்ம ராசா தன பக்க நியாங்களை எடுத்து வைத்தார் ..
அதில் சில முக்கிய டக்கால்டிகள் ....
நான் இந்த முடிவு எடுத்தது அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தெரியும் அவரும் இதற்க்கு அனுமதி அளித்தார் மேலும் இது பிரதமரின் கண்காணிப்பில் நடந்ததே என்கிறார்.
நான் செய்தது தவறு என்றால் எனக்கு முன்பு இந்த துறையில் மந்திரிகளாய் இருந்த அனைவரும் என்னுடன் சிறைக்கு வர வேண்டும் என்றார் ..
(தயாநிதி வருவாரு அதுவரை பொறுமை காக்கவும் )
ப.சிதம்பரம் இதை பற்றி கேட்டதற்கு கருத்து கூறவில்லை ...
பா ஜா க வினர் பிரதமரையும் சிதம்பரத்தையும் பதவி விலக கூச்சல் போடுராங்கோ .....
ஆட்டம் சூடு பிடிக்குது ...மேலும் தெரிந்து கொள்ள வேண்டியவை ..
டி.பி., ரியாலிட்டி, யூனிடெக் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சட்ட ரீதியாக நடந்திருக்கிறது. இது பிரதமருக்கு தெரியும் படியே நடந்தது. இதனை அவர் மறுக்கட்டும், தவறு இருந்திருக்கும பட்சத்தில் பிரதமர் அதனை தடுத்திருக்கலாம், காபினட் கொடுத்த அறிவுரையின் பேரில் ஒதுக்கப்பட இந்த விவகாரத்திற்கு நிதி அமைச்சர் சிதம்பரமும் ஒப்புதல் கொடுத்துள்ளார். பா.ஜ.,வை சேர்ந்த அருண்ஷோரி 26 லைசென்ஸ்களும், தயாநிதி 25 லைசென்ஸ்சுகளும் ஒதுக்கியிருக்கி்ன்றனர். நான் 122 லைசென்ஸ் கொடுத்திருக்கிறேன். இவைகளில் எண்ணிக்கைதான் வித்தியாசம். ஆனால் கொள்கை ஒன்றுதான். இப்படி இருக்கும்பட்சத்தில் என்னிடம் மட்டும் கேள்வி எழுப்பப்படுவது ஏன் ? இதில் எங்கே குற்றம் நடந்திருக்கிறது ? இதில் எங்கே சதி நடந்திருக்கிறது ? நான் குற்றமற்றவன்.
எனது காலத்தில் ஏழைகள் பயன் அடைந்தனர்: எனது அமைச்சர் காலத்தில் மக்களுக்கு சேவை புரிந்துள்ளேன் . நான் அமைச்சராக இருந்தபோது மொபைல் அழைப்பு கட்டணம் மிக குறைந்த அளவிற்கு குறைக்கப்பட்டது. எல்லோரும் மொபைல் போன் பெற வேண்டும் என விரும்பினேன். அதற்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்தது எனது கொள்கை. இதன் காரணமாக நாட்டில் உள்ள ரிக்ஷா தொழிலாளி முதல் அனைத்து ஏழை மக்களும் பயன்அடைந்தனர்.இவ்வாறு அவர் வாதிட்டார். இவ்வாறு வாததுரை நடந்ததாக அவரது வக்கீல் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., கடந்த 21 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை வாதிட்டனர். ராஜாவின் வாதம் இன்று முதல் துவங்கியிருக்கிறது. ராஜா கடந்த பிப்.2 ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
Tweet |
என்ன நடக்குது பாக்கலாம்!(மூன்று ஓட்டு!)
ReplyDeleteRasa adijar appu. . . P.c and pm ku next aappu
ReplyDeleteஎன்ன தான் நடக்குது உலகத்திலே....
ReplyDeleteபத்தவச்சிட்டியே பரட்ட
ReplyDeleteபைசாவ யாருகிட்ட குடுத்து வச்சிருக்காராம் ?
ReplyDeleteபாஸ், ஒரு ஊரையே ஜெயிலாக மாற்றும் ப்ளானில் தான் ராசா ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என நினைக்கின்றேன்,
ReplyDeleteஏன்னா..ஒவ்வோர் நாளும் திஹாருக்குப் போகும் நபர்கள் தொகை சங்கிலித் தொடர் போன்று நீள்கிறதே சகோ.