7.16.2011

ஆட்டம் இழந்த நித்யானந்தா!!

ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை 'குண்டலினி சக்தி'யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது. 


பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, 15.07.2011 அன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

ஆசிரமத்திலுள்ள ஆனந்தேஸ்வரா சன்னிதியின் முன், பஞ்சதபா ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா அமர்ந்திருந்தார். 

இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும், ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார். 

குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய எம்பி யெம்பி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார். 

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சிரித்த நித்யானந்தாவிடம் ஒருவர் சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 


7 comments:

 1. ஆசை யாரை விட்டது. இவனுக்கு ஏன் இந்த வேலை?

  ReplyDelete
 2. குணசேகரன்... said...
  ஆசை யாரை விட்டது. இவனுக்கு ஏன் இந்த வேலை?

  @@@@@@@@@@@@@@

  என்ன நண்பா எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தீங்க ....நன்றி நன்றி

  ReplyDelete
 3. நல்லா கிளப்புறாங்க பீதிய !!!போய்யா , போய் பொழப்ப பாப்பியிளா ! அத விட்டுட்டு...

  ReplyDelete
 4. மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி சஹஸ்ராரத்தை அடையச் செய்வது குண்டலினி யோகம்.அதை இப்படிக் கேலிக் கூத்தாக்கி விட்டார்!

  ReplyDelete
 5. இவனது பித்தலாட்டங்கள் தொடர்கதையாய் போவது வேதனையிலும் வேதனை. மக்கள் இன்னும் இந்த பைத்தியக்காரனை நம்புவது அதைவிட கொடுமை.

  ReplyDelete
 6. பாஸ், வீடியோவைப் பார்த்தால் ஏற்கனவே ப்ளான் பண்ணிச் செய்வது போன்று இருக்கிறதே..

  ஹி....ஹி.....

  ReplyDelete
 7. இவர்களை நம்புகிற கூட்டம் இருக்கும் வரைஇவர்கள் என்ன வேண்ணாலும் சொல்லுவார்கள் செய்வார்கள் நண்பா

  ReplyDelete