நீ என்னத்த கிழிச்சன்னு இப்படி மூணு மூணா எழுதி எங்க உயிரை வாங்குறே என்று கேட்போருக்கு இது என் அருமை நண்பர் A.R.ராஜகோபாலன் அவர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டு எழுதியது ...தொடர் பதிவிற்கு அழைத்த நண்பருக்கு நன்றி கூறி தொடங்குகிறேன் ...
அட வந்திட்டு படிக்காம போகாதிங்க படிங்க படிங்க
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
1.என் தாய்
2.என் மனைவி
3.வரமாய் இறைவன் தரப்போகும் குழந்தை
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1பொய் மற்றும் போலி வேஷங்கள்
2.தற்பெருமை
3.தான் என்னும் அகங்காரம்
3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
1.இறைவன்
2.சாத்தான் -இறைவனின் கட்டளைகளில் இருந்து என்னை தடம்புரள செய்துவிடுவானோ என்று
3.சக மனிதர்கள் -அவர்களை மனம் நோக செய்துவிடுவேனோ என்று
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
1.நிறம் மாறும் மனிதர்கள்
2.மனசாட்சி
3.பெண்கள்
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
1.இறைவனின் வேதம் தமிழாக்கம்
2.இறைவனின் வேதம் ஆங்கில மொழிபெயர்ப்பு
3.கணக்கு வழக்கு நோட் புக்
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
1.சந்திரபாபு முதல் சந்தானம் வரை அனைவரும்
2.கார்டூன்கள்
3.நண்பர்கள்
1.சொந்தமாக ஒரு கடை திறக்க முயற்சி
2.நல்ல பதிவர் ஆக முயற்சி
3.நல்ல மனிதனாய் வாழ முயற்சி
8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
1.கடன்களில் இருந்து மீளுதல்
2.குழந்தைக்கு நல்ல தகப்பன்னாக கடமைகள் செய்ய
3.எனக்கு பின்பும் மனைவி சிறப்பாய் வாழ எதாவது முதலீடு
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
1.பெற்றோரை புனித ஹஜ் யாத்திரைக்கு அனுப்புதல்
2.3.மரணபடுக்கையில் அல்லது ஈசி சேரில் இருக்கும் பொது ஆத்மதிருப்தியுடன் விடைபெற முடியனும்
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.இழப்புகள்
2.கெட்ட வார்த்தைகள்
3.பட்ட பெயர் சொல்லி அழைப்பதை
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
1.இறைவேதத்தை அரபு மொழியில் ஓத
2.மலேசியாவில் குப்பை கொட்ட சரளமாக மலாய் மொழி
3.கார் ஓட்டுவதற்கு
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
1.பெரியம்மா செய்யும் பிரியாணி
2.எங்கள் வீட்டில் செய்யும் கட்டி சோறு (புளியோதரை )
3.சாம்பார் சாதம் (யாருப்பா என்னை சம்பாரன்னு சொலுறது )
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
1.மேகம் கருக்குது மழை வர -ஆனந்தாராகம் பட பாடல் (என்றும் முணுமுணுக்கும் பாடல் )
2.தேவதை போலொரு பெண் இங்கு -கோபுர வாசலிலே பட பாடல்
3.இப்போ சமிபத்தில் முனுமுனுப்பது
எனோமோ ஏதோ -கோ பட பாடல் - அதிலும் இந்த வரி மனதை தொட்டது
"அழைக்காதே பெண்ணே என் அச்சங்கள் அச்சாகும் "
14) பிடித்த மூன்று படங்கள்?
1.நெஞ்சம் மறப்பதில்லை
2.ஹேராம்
3.அன்பே சிவம்
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
1.நண்பர்கள்
2.விகடன் (நானும் விகடனும் எழுத என்னை கூப்பிடுவாங்களா ஹி ஹி )
3.சுயமரியாதை
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
என் நன்றியை தெரிவிக்கும் வகையில் (சுயநலமாய் கூட தெரியலாம்) இந்த மூவரை அழைக்கிறேன்....
1.பதிவுலகை அறிமுகம் செய்த அன்பர் கஸாலி -அரசர்குளதான்
2.வலைசரத்தில் அறிமுகம் செய்த சகோ சௌந்தர் -கவிதை வீதி
3.வலைசரத்தில் அறிமுகம் செய்த நண்பர் ராஜா -ராஜப்பாட்டை
Tweet |
முதலில் என் நன்றியை சொல்லி தொடங்குகிறேன் நண்பா .., தாயிலிருந்து தொடங்கி சுய மரியாதையுடன் முடித்திருக்கும் பாங்கு அருமை, வாழ்வை முழுதாய் மட்டுமில்லாமல் நிறைவாய் வாழ நினைக்கும் உங்களின் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு மனம் நிறைய சந்தோஷம்
முத்தான மூன்று விடயங்களைப் பற்றிய கலக்கலான தொகுப்பினை எழுதி முடித்திருக்கிறீங்க.
ReplyDeleteசாதிக்க விரும்பும் மூன்று விடயங்களும் வெகு விரைவில் நிறைவேற வாழ்த்துகிறேன்.
தொளிவா படிச்சிட்டு வருகிறேன்...
ReplyDeleteகொஞ்சம் லேட்டா வருகிறேன்..
இப்போ ஓட்டு...... ஈவனிங் கமென்ட்
ReplyDeleteOk friend . . I will try to post this matter tomorrow . . .
ReplyDeleteYour post very super . .
ReplyDeleteஉங்களை பற்றி வெளிப்படையாக பகிந்துள்ளது அருமை ....நன்றி
ReplyDeleteஅப்பாவாக போகும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteகண்டிப்பாக வருகிறேன்...
ReplyDeleteஇந்த வாரம் வேலை என்பதால் கண்டிப்பாக திங்கள் வெளிவரும் பதில் என் மூன்று முகங்களை வெளியிடுகிறேன்...
அழைத்ததற்க்கு நன்றி ரியாஸ்...
முதல் தரம்தான்.
ReplyDeleteவரப்போகும் வரத்துக்கு வாழ்த்துகள்!
முத்துகள் மூன்று-மேலும்
ReplyDeleteசுத்துதே நன்று
புலவர் சா இராமாநுசம்
முத்துக்கள் மூன்றும் நல்ல கலக்கல்...
ReplyDeleteஅது சரி பொண்ணுங்களை இதுகளுக்க சேர்க்காட்டி ஆம்பிளைங்களுக்கு நித்திரையே வராது.....ஹிஹிஹி...
வாழ்த்துக்கள்,,,,
///புரியாத மூன்று விஷயங்கள்/// ரொம்பவே உண்மை
ReplyDelete