8.14.2011

நடிகர் விஜய்யின் அரசியலுக்கு தேவையான பாடம்முதலில் இந்த வீடியோ பாருங்கள்..ஏற்கனவே பார்த்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம் ..

ஒரு பிரஸ் மீட்டில் நடிகர் விஜய் இந்த மாதிரி கோப பட்டார்.ஏன் தனது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் தான் இப்படி பொறுமை இழந்தார். இத்துணைக்கும் இந்த தோல்விகளால் விஜய்க்கு எந்த பொருளாதார பிரச்சனைகளும் இல்லை, இருந்தும் பொறுமை இழந்தார்.

அப்ப சாமானிய மிடில் கிளாஸ் மக்கள் சந்திக்கும் பொருளாதார பிரட்சைனைகளால் விரக்தி அடைவதும் தடுமாறி தடம் மாறி ஏன் தற்கொலை வரை செல்வதிலும் என்ன ஆச்சிரியம் இருக்கு. 

சரி இந்த நிலை மாற என்ன செய்யலாம்.உலகில் அனைவரையும் சமமாக அம்பானிகள் ஆக்கலாமா. சாத்தியமா இது .சாத்தியமில்லை அப்படியே சாத்தியம் என்றாலும் உலகம் இயங்குமா ? 

அட கொஞ்சம் பொறுமையா படிங்க பாஸ். அதுதான் அதே தான் மனிதனின் இந்த பொறுமை தான் நடிகர் விஜய்க்கும் நம்ம எல்லோருக்கும் தேவையான 
குணம்.இதை நான் சொல்லலை இறைவனின் வேதத்தில் எழுவதிற்கும் மேற்ப்பட்ட இடங்களில் பொறுமையை வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது 

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
அல்-குரான் 2-155 

 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.
அல்-குரான் 2-156 

 (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
அல்-குரான் 11-115

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது ? நான் தொட்டது ஏதும் தொலைங்க மாட்டேன்குதே ? இந்த மாதிரி கேள்விகளை தவிர்த்து விட்டு இது நமக்கு இறைவனின் சோதனை இதில் பொறுமை காத்தால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி நிச்சயம் தானே.

 இன்னொரு செய்தி இப்படி பொறுமையை வலியுறுத்தும் மார்க்கத்திற்கு இன்று சில மீடியாக்கள் தீவிரவாத முத்திரை குத்த பார்ப்பது கொடுமை அல்லவா? அதையும் இறைவன் போதித்த பொறுமையுடன் சகித்துகொள்வோம் ,ஒரு நாள் திரை விலகி விடியட்டும் அவர்களுக்கு ..

அட தலைபிற்கு வருவோம்.இப்ப உள்ளாட்சி தேர்தலை சந்திக்க விரும்பும் நடிகர் விஜய்.பொது வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டிய குணம் பொறுமை என்பது சரிதானே..

நீங்க இந்த பதிவை முழுசா பொறுமையா படிச்சிங்களா இல்லையா ? வாக்களித்து உறுதி செய்யவும்.பொறுமை பற்றி உங்களுக்கு தெரிந்த குறள்கள்,பழமொழிகள் என அனைத்தும் பின்னூட்டத்தில் கூறி இந்த பதிவுக்கு வலுசேருங்கள்.

28 comments:

 1. பொறுமையே காலச்சிறந்தது..பொறுமை கடலினினும் பெரிது... பொறுமையுடையார் உலகை ஆள்வது மட்டுமல்ல தன்னையே ஆள்வார்... தன்னை ஆள்பவன் மட்டுமே உலகை ஆள்வதை விட உயர்ந்த ஆளுமையுடையவனாகிறான்.... இதை இந்த பதிவில் அழகாக சொல்லி அசத்தியுள்ளீர்கள் நண்பா... நன்றியுடன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. த ம 2, மற்றதில் ஊமக்குத்து

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரா,
  தாங்கள் நலமா?
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. மறை நூலில் பொதிந்துள்ள கருத்துக்களை, சம காலத்தில் பொறுமையற்றுக் கர்ச்சித்த விஜயின் வாழ்க்கைப் பாடத்தோடு ஒப்பீட்டு, அனைவருக்கும் இலகுவில் புரியும்படி பகிர்ந்திருக்கிறீங்க.

  ReplyDelete
 5. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

  வாக்களித்தேன்

  ReplyDelete
 6. "எவன் ஒருவன் தன்னை ஆளும் மனதை தானாளக்
  கற்றுக்கொள்கின்றானோ அவனே எல்லா நலனும் பெறுவான்".....
  இது புரட்சிப் பெண்ணின் வாசகம்.இவளது சிந்தனைத் துளியில்
  வெளிவந்த தகவல்.எங்கள் நபிகள் நாயகத்தின் வாரிசு என்று
  சொல்லிக் கொல்லக்கூடாது சரியா...மீண்டும் வலைத்தளதிற்கு
  வந்துவிட்டேன் சகோ...நன்றி அனுதாபச் செய்திக்கு.

  ReplyDelete
 7. பொறுத்தார் பூமி ஆழ்வார்.

  ReplyDelete
 8. :)

  சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சகோ

  பொறுமையா இருங்கோ

  ReplyDelete
 9. TO மாய உலகம் said...

  ரொம்ப நன்றி நண்பா

  ReplyDelete
 10. TO மாய உலகம் said...

  TQ VERY MUCH

  ReplyDelete
 11. TO நிரூபன் said...

  நலம் சகோ ...வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. TO நிரூபன் said...

  கருத்திற்கு மகிழ்ச்சி நன்றி நன்றி

  ReplyDelete
 13. TO M.R said...


  ரொம்ப நன்றி நண்பா

  ReplyDelete
 14. TO அம்பாளடியாள் said...


  நன்றி நன்றி

  ReplyDelete
 15. TO காந்தி பனங்கூர் said...

  வாங்க வாங்க சரியா சொனீங்க

  ReplyDelete
 16. ஆமினா said...

  சரி சகோ பொறுமையா இருக்கேன் நன்றி

  ReplyDelete
 17. கோவம் தன்னை அழிக்கும் ஆயுதம்..
  என்று அவர் உணர்வார்...

  ReplyDelete
 18. இப்பத்தான் பாக்கிறேன் விஜயை இந்த கோலத்தில்.......

  ReplyDelete
 19. சகோதரர் ரியாஸ் அஹமது,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  அருமையான குர்ஆன் வசனங்களை நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி சகோதரர்...

  நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்: சண்டையில் பிறரை வீழ்த்துபவன் வீரன் அல்லன்; கோபத்தை அடக்குபவனே வீரன்.

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 20. பொருத்தார் பூமி ஆழ்வார். . .

  ReplyDelete
 21. சொன்ன விதம் அழகு..

  ReplyDelete
 22. ஒன்றை காரணமாகவைத்து மிக உயர்ந்த
  அழகிய விஷயங்களை அறியக் கொடுத்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. to # கவிதை வீதி # சௌந்தர் said...


  வாங்க நன்றி சகோ

  ReplyDelete
 24. to koodal bala said...

  அப்படியா நண்பா இது ஒரிஜினல் முகம் ...நன்றி நண்பா

  ReplyDelete
 25. சகோதரர் ஆஷிக் அஹ்மத் அ

  வா அலைக்கும் சலாம்

  உங்கள் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி அளிக்கிறது
  அல்ஹம்துரில்லாஹ்

  ReplyDelete
 26. to பிரணவன் said...


  சரியா சொனீங்க

  நன்றி சகோ

  ReplyDelete
 27. to Ramani said...


  உங்கள் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி அளிக்கிறது

  நன்றி சகோ

  ReplyDelete