நண்பர்களே
சகோதர சகோதரிகளே
உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் இந்த மாதம் விரதம் இருப்பது உங்கள் நண்பர்கள் அண்டை வீட்டார்கள் மூலம் அறிந்து இருப்பீர்கள்.
அவங்க ஏன் இப்படி பட்டினி கிடக்கனும்?
ராத்திரி பூரா FULL கட்டு கட்டிட்டு காலையில விரதமா நல்ல கதை ?
இப்படி பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம் அதை எடுத்து சொல்லி
நன்மையை கொள்ளை அடிக்க சித்தம் இன்று ...
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறைவனின் கட்டளையின் அடிபடையில தான் முஸ்லிம்கள் விரதம் இருக்கிறார்கலாம் .அதாவது சூரியன் உதயாமாகியது முதல் (அட தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு எல்லாம் வரலை நல்லா படிங்க ) உண்ணாமல் பருகாமல் இருப்பார்கள் சூரியன் அஸ்தமனம் ஆகும் வரை.சரி அப்ப ராத்திரியில FULL கட்டு கட்டிட்டு கவுந்து படுத்துருவாங்கலான்னா ? இல்லையாம் .. இந்த மாதம் முடிந்த வரை தூங்காமல் விழித்து இருந்து தொழுகையில் ஈடுபடுவான்கலாம் .
ஏன் ?
இந்த மனித வாழ்க்கை ஒரு பரிட்ச்சை என்றும் அதில் பாஸ் பண்ணுனா சுவர்க்கம் பெயில் ஆனா நரகம் என்றும் முஸ்லிம்கள் நம்புறாங்க.பாஸ் பண்ணுறதுக்கு நம்மை படைத்த இறைவன் ஒருவனே என்றும் அவனோட வேதம் உண்மைன்னும் நம்பி தன் விருப்பங்களை இறைவனிடம் சமர்பிக்கணும் நல்லவனா வாழனும் பொய் சொல்லாம , திருடாமல், அளவு நிறுவைகளில் வியாபாரத்தில் நேர்மையா இருந்து ,அடுத்தவுங்க சொத்தை அபகரிக்காமல்,எந்த அப்பாவி உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழனும்.இறைவனை தொழுது வணங்கி வரணும் அப்ப தான் நீங்க பாஸ்
இப்படி செய்ய சொல்லுறதுல அவங்க அல்லாவுக்கு என்ன பயன் ?
நம்முடைய வணக்கங்கள் விரதங்கள் மூலம் இறைவனுக்கு ஒரு பயனும் இல்லையாம் .ஆனா இது மனிதனுக்கு ஒரு பயிற்சியாம் ஒரு வருடத்திற்கு ஒழுக்கமாய் இறைவனின் கட்டளைகளை பின்பற்றி வாழ ஒரு மாத பயிற்சியாம்,அதுக்கும் நமக்கு அதிகமான பலன்களை அள்ளி தருகிறானாம் இறைவன்.
நம்முடைய வணக்கங்கள் விரதங்கள் மூலம் இறைவனுக்கு ஒரு பயனும் இல்லையாம் .ஆனா இது மனிதனுக்கு ஒரு பயிற்சியாம் ஒரு வருடத்திற்கு ஒழுக்கமாய் இறைவனின் கட்டளைகளை பின்பற்றி வாழ ஒரு மாத பயிற்சியாம்,அதுக்கும் நமக்கு அதிகமான பலன்களை அள்ளி தருகிறானாம் இறைவன்.
ஒரு நாளின் ஒழுக்கத்திற்கு ஐந்து வேலை தொழுகையும்,அடுத்து வரும் ஒரு வருட ஒழுக்கமான வாழ்வுக்கு இந்த நோன்பும் மனிதனுக்கு பெரிய உதவி செய்யுறதா மனோத்தத்துவ ஆய்வுகள் கூறுதாம்.
இப்படி நல்லதே போதிக்குற மார்க்கத்துக்கு சில கருப்பு ஆடுகளால் கெட்ட பேர் ,அவங்க கூட இந்த ரமலான் மாசத்தை பயன் படுத்தி திருந்தி வாழ இது ஒரு வாய்ப்பாம்.
எப்படி ?
இப்போ சில புகை பிடிக்கும் நபர்கள் கூட இந்த ஒரு மாத நேரத்தில் பக்தி முத்தி புகை பிடிபிப்பதை நிறுத்திடு வாங்க ,அதை அப்படியே தொடர்ந்தால் யாருக்கு நல்லது யோசிச்சு பாருங்க. இப்படி எல்லா கெட்ட பழக்கத்துக்கும் குட் பை சொல்லாமாம் ..
பொதுவா ஒரு மொபைல் போன் சார்ஜ் இல்லாமல் போறமாதிரி மனுசனுக்கும் தன் ஆன்மிகத்தில் சார்ஜ் குறைய வாய்ப்பு உண்டு அதில் இருந்து மீண்டு கொஞ்சம் சார்ஜ் இப்படி வருசா வருஷம் எத்திக்கலாமாம் ...
பொதுவா ஒரு மொபைல் போன் சார்ஜ் இல்லாமல் போறமாதிரி மனுசனுக்கும் தன் ஆன்மிகத்தில் சார்ஜ் குறைய வாய்ப்பு உண்டு அதில் இருந்து மீண்டு கொஞ்சம் சார்ஜ் இப்படி வருசா வருஷம் எத்திக்கலாமாம் ...
அப்படின்னா இந்த பயிற்சி காலத்தில இருக்குற எல்லா நண்பர்களும் நோன்பு நோற்று அதன் பயனை முழுமையா பெறுவதற்கு வாழ்த்துக்கள் கூறிட்டு ஆபீட்டு ஆயிடுவோம் சரியா
கடைசியா ஒரு பிட்டு :
உங்களுக்கு இந்த இனிய மார்க்கம் பற்றிய சந்தேகங்கள் ஏதும் இருந்தால் என்னை மாதிரி அரைவேக்காடு கிட்ட கேக்காம , நீங்க வேணும்னா இந்த வலைப்பக்கம் போய் உங்கள் எல்லா சந்தேக்களையும் தெரிந்து கொள்ளலாம்,ஏன் பட்டமே கூட வாங்கலாம் எல்லாம் இலவசமே.
உலகத்துலேயே அதிகமான மக்கள் தப்பா புரிந்து கொண்ட ஒரு மார்க்கம் இஸ்லாம் அதை மாற்றுவோம் வாங்க
Tweet |
Nice.,
ReplyDeleteMobilil comment poduvathaal template comment thaan. sorry.
தகவல்களுக்கு நன்றி !
ReplyDeleteநோன்பிருத்தல் உடலை செம்மைப் படுத்த .ஓயாது உழைக்கும் உடல் உறுப்புகளுக்கு சிறிது ஒய்வு கொடுக்க.
ReplyDeleteபுத்தி சீராக பணிபுரிய
இக்கருத்தில்
பிழையிருந்தால் பொறுக்கவும்
வணக்கம் பாஸ்,
ReplyDeleteநோன்பு அனுஷ்டிப்பதன் முக்கியத்துவத்தினையும், அதன் பயனினையும், எவ்வாறு நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அழகு தமிழில் பதிவிட்டிருக்கிறீங்க.
நன்றி பாஸ்.
* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteNice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.
@@
DUN B SORRY ...
HAPPY WIT UR PRESENCE TQ TQ
யாழினி said...
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி !
@@@@
வருகைக்கு நன்றி
M.R said...
ReplyDeleteநோன்பிருத்தல் உடலை செம்மைப் படுத்த .ஓயாது உழைக்கும் உடல் உறுப்புகளுக்கு சிறிது ஒய்வு கொடுக்க.
புத்தி சீராக பணிபுரிய
இக்கருத்தில்
பிழையிருந்தால் பொறுக்கவும்
@@@@
நன்றி சகோ மிக்க நன்றி ...
நான் சொல்ல விட்டதை நீங்க சொல்லி இருக்கீங்க
நன்றி நன்றி
நிரூபன் said...
ReplyDeleteவணக்கம் பாஸ்,
நோன்பு அனுஷ்டிப்பதன் முக்கியத்துவத்தினையும், அதன் பயனினையும், எவ்வாறு நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அழகு தமிழில் பதிவிட்டிருக்கிறீங்க.
நன்றி பாஸ்.
@@@@
நன்றி சகோ வருகைக்கு மிக்க நன்றி ...
தமிழ் மனம் 4
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ.ரியாஸ்,
சரியாகச்சொன்னீர்கள்.
"ஒருவருட இறையச்ச வாழ்க்கைக்கு ஒரு மாத பயிற்சி--நோன்பு"(அதுவும் ஒரு நற்செயலுக்கு பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்கு நன்மைகள் எனும் அதிரடி சலுகை வெகுமதிகளுடன்..!)--என்று..!
இதுதான் நோக்கம்.
கீழ்க்காண்பவை மக்களிடம் உள்ள தவறான எண்ணங்கள்/நம்பிக்கைகள்.
1-நோன்பின் மூலம் செல்வந்தர்கள் ஏழைகளின் பசியின் கொடுமையை அறிந்து தர்மம் செய்வார்கள்:-தவறு.
ஏனென்றால்...
நோன்பு ஏழைகளுக்கும் கடமையல்லவா..!?
2-நோன்பின் மூலம் உடல் நலம் பெறுகிறது:-தவறு.
ஏனென்றால்... பிரயாணம் செய்வோருக்கு அவர்களின் சிரமம் காரணமாக தற்காலிக விலக்கு உள்ளதே..?!
வயோதிகர்களுக்கும் கடும் நோயாளிகளுக்கும் நோன்பிலிருந்து நிரந்தர விலக்கு உள்ளதே..?!
ஆகவே....
உலக ரீதியான பல காரணங்கள் மக்களால், மருத்துவர்களால் சொல்லப்பட்டாலும், நோன்பின் நோக்கத்தைப்பற்றி இறைவன் சொல்வதே இங்கு நம் சிந்தையில் கொள்ளத்தக்கதாகும்.
நீங்கள் சுட்டிக்காட்டிய இறைவசனம்...
//நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக...// என்று தெளிவாக கூறி விடுகிறது..!
இதற்கு மேலும் வேறு நோக்கங்கள் இருந்தால் அதை இறைவனோ அல்லது இறைத்தூதரோதான் அறிவிக்க வேண்டும்..!
அருமையான அவசியமான சிறந்த பதிவு சகோ.ரியாஸ். மிக்க நன்றி சகோ.
தங்களின் நற்செயல்கள் மூலம் பன்மடங்கு நன்மைகளை இந்த அருட்கொடை மாதமான ரமலானின் மூலம் இறைவனிடம் பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்.
M.R said...
ReplyDeleteதமிழ் மனம் 4
@@@@@
நன்றி சகோ ....
TO முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
ReplyDeleteவாலைக்கும் சலாம் நன்றி சகோ .... மாஷா அல்லா மிக்க நன்றி சகோ ...அல்ஹம்துரில்லா ..எல்லா புகழும் இறைவனுக்கே ..உங்கள் பாராட்டு மெய்சிலிர்க்க வைக்குது ..உங்கள் வருகையும் ஆச்சர்யம் அளிக்குது நன்றி சகோ
சில நல்ல பழக்கங்களை கடவுள் பெயரால்தான் மனிதனை செய்ய வைக்கவேண்டியுள்ளது ....அநேக மதங்களில் இது போன்ற வழக்கங்கள் உள்ளன ...நல்ல பதிவு மாப்ள !
ReplyDeleteஆஹா... நல்ல விதமாக சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்களுடன் நன்றி
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல விளக்கம்.வாழ்த்துகள்.(நோன்புக் கஞ்சி சாப்பிட்டீங்களா?)
ReplyDeleteவணக்கம் அன்பு இஸ்லாமிய நண்பரே உங்களுக்கு எனது பெருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇஸ்லாமிய நண்பர்கள் மனக்கட்டுப்பாட்டுடன் விரதம் இருப்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன்
இப்படி இடக்கு முடக்க கேள்வி கேட்டே இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டோம் பல்கலைக்கழகத்தில்
koodal bala said...
ReplyDeleteசில நல்ல பழக்கங்களை கடவுள் பெயரால்தான் மனிதனை செய்ய வைக்கவேண்டியுள்ளது ....அநேக மதங்களில் இது போன்ற வழக்கங்கள் உள்ளன ...நல்ல பதிவு மாப்ள !
@@@@@@@
நன்றி சகோ
மாய உலகம் said...
ReplyDeleteஆஹா... நல்ல விதமாக சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்களுடன் நன்றி
@@@@
நன்றி சகோ
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள்
@@@
நன்றி சகோ
கவி அழகன் said...
ReplyDeleteவணக்கம் அன்பு இஸ்லாமிய நண்பரே உங்களுக்கு எனது பெருநாள் வாழ்த்துக்கள்
@@@
நன்றி சகோ
சென்னை பித்தன் said...
ReplyDeleteநல்ல விளக்கம்.வாழ்த்துகள்.(நோன்புக் கஞ்சி சாப்பிட்டீங்களா?)
@@@@
நன்றி ஐயா குடித்தேன் ....உங்களுக்கு பிடிக்குமா ?
to வாஞ்சையுடன் வாஞ்சூர் said...
ReplyDeleteவாஞ்சையுடன் நன்றி
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
ReplyDeleteஅருமையாக எழுதி இருக்கீரகள்.
இந்த ரமலான் மாதத்தின் எல்லா நன்மைகளையும் எல்லா வல்ல இறைவனிடம் கொள்ளை அடிக்க துஆ செயக்கிறேன்.
அழகிய விவரிப்பு ரியாஸ்
ReplyDeleteஆயிஷா அபுல். said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் சகோ
அருமையாக எழுதி இருக்கீரகள்.
@@@@@@@@
வா அலைக்கும் சலாம் நன்றி சகோ ...உங்களுக்கும் இறைவன் நன்மைகளை வாரி வழங்கட்டும்
ஸாதிகா said...
ReplyDeleteஅழகிய விவரிப்பு ரியாஸ்
@@@
நன்றி சகோ