மறைந்த ஷம்மி கப்பூர் விரைவில் வெளிவரபோகும் ராக் ஸ்டார் என்னும் கடைசி படத்தில்
பிரபல இந்தி நடிகர் ஷம்மி கப்பூர் சிறுநீரக கோளாரினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 14 அதிகாலையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்து விட்டார்.அவரது மறைவிற்கு பலர் வருத்தம் தெரிவித்து கொண்டு இருக்கையில்,தன் வாழ்க்கையே ஷம்மி கப்பூர் போட்ட பிச்சை என்கிறார் அமெரிக்காவில் வாழும் இந்தியர் ஒருவர்.இது ஷம்மி கப்பூருகே தெரியாத செய்தி.
இவர் தான் பாபி க்ஹோஷ் டைம் பத்திரிக்கையில் பணியாற்றுகிறார்.2003 ஆம் ஆண்டு இராக்கில் போர் காலத்தில் பணியாற்றி கொண்டு இருக்கையில் ,சதாம் உசைனுக்கு ஆதரவான கிராமத்தில் பலரை பேட்டி எடுத்து கொண்டு இருக்கையில் அந்த கிராமத்தின் தலைவன் இவரை அழைக்க அங்கே செல்கிறார்.அதுவரை இவரை இந்தியாவில் இருந்து வந்துள்ள நிருபர் என்றே இவரின் மொழிபெயர்ப்பாளர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அது தெரியாத நம்ம பாபி க்ஹோஷ் அந்த கிராமத்தின் தலைவன் நீ யாருக்கு வேலை செய்கிறாய் என கேட்க்க டைம் பத்திரிக்கைக்கு என்கிறார்.
லண்டனை சேர்ந்த டைம் பத்திரிக்கையா என்கிறார் ?
நம்ம ஆளு ரொம்ப கூலா இல்ல அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை என்கிறார்
சட்டென்று கோபம் கொண்ட தலைவன் துப்பாக்கியை எடுத்து நெற்றியில் வைத்து நீ அமெரிக்கனா நீ சாகனும் என்கிறான்
இல்லை இல்லை நான் இந்தியன் என்கிறார் பாபி ,நம்ப மறுக்கிறான்
மொழிபெயர்ப்பாளர் இவரும் என்னை போல இந்தியன் தான் என்கிறார்,நம்ப மறுக்கிறான்
நீ அமெரிக்கன் நீ சாகனும் என்கிறான்
அப்போ பயத்தில் நானும் ஷம்மி கப்பூர் போல இந்தியன் என்கிறார் பாபி
என்ன சொன்ன ஷம்மி கப்பூரா ? அவரை உனக்கு எப்படி தெரியும்
அவரு எங்க நாட்டுல பெரிய நடிகர் எங்க எல்லோருக்கும் தெரியும்
துப்பாக்கி கிழே இறக்க படுது..தன் சந்தேகம் தீர அவர் சொல்லும் பஞ்ச டைலாக் என்ன? என கேக்கிறான்
யாஹு என பதில் சொல்லி தப்பிகிறார் .
நீ அமெரிக்கான இருந்து இருந்தா இந்த நேரம் பிணம்,ஆனாலும் நீ அமெரிக்கா பத்திரிக்கைக்கு வேலை செய்யுற அதனால உடனே எங்கள் கிராமத்தை விட்டு வெளியே போய்விடு என உத்தரவு இடுகிறார் .
அமாங்க இந்தி திரைப்படங்கள் அரபு நாடுகளில் 60,70 களில் இருந்தே பிரபலமாக இருந்தது. அதிலும் ஷம்மி கப்பூர் அங்கே ஒரு உயிரை காக்கும் அளவுக்கு புகழுடன் இருந்து இருக்கார் .
இந்த செய்தியை தனது சொந்த ப்ளோகில் பாபி க்ஹோஷ் பதிவிட்டு இருக்கார்.
|
முதல் வருகை..
ReplyDeleteநல்ல தகவல் ...
ReplyDeleteநன்றி மறப்பது நன்றன்று என்பதை உணர்ந்தவர்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....
ReplyDeleteஅபூர்வத் தகவல்பதிவிட்டமைக்கு நன்றிதொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஎங்க இருந்துதான் இப்பிடி புது புது தகவல் எல்லாம் தேடி பிடிக்கிறீங்க
ReplyDeleteஉண்மைதான் மாப்பிள்ளை இங்கு என்னுடன் வேலை செய்யும் மோரோக்கோ நாடவர் பார்க்காத இந்தி படம் கிடையாது... அமிதாப்பச்னின் தீவிர இரசிகர்.. என்னிடம் இந்தி படப்பாடல்களை பாடி நீயெல்லாம் இது தெரியாமல் இந்தியனாய் இருக்கின்றாயே என கேலிபேசுவார்.. அவரை பொருத்தவரை நாமெல்லோம் இந்தியர்களே....!!!!???
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்
அடடே.... அப்படியா.........
ReplyDeleteநெகிழ்ச்சியான கதை :)
ReplyDeleteநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதமிழ் மணம் 9
ReplyDeleteஅரிய புதிய தகவல்!
ReplyDeleteஷம்மி ஒரு சகாப்தம்!
நல்லதொரு தகவல் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி .
ReplyDeleteஎன் தளத்தில் இதற்காக ஒரு விருந்து காத்திருக்கின்றது .
வந்து தவறாமல் உங்கள் கருத்து மழையைப் பொழியுங்கள்
சகோ........
நல்ல தகவல் நன்றி சகா. . .
ReplyDeleteஷம்மி கபூரால் தப்பித்திருக்கிறார் என்றும் அவரை அவரால் மறக்க இயலாது... பதிவுகள் என்றும் நீடிக்கட்டும்...வாழ்த்துக்கள் நண்பா
ReplyDelete