1.10.2013

இசை ஆர்வமுண்டோ ?வாங்க நீங்களும் பாடலாம் !


A.R ரஹ்மான் இசையில் ஒன் டூ கா பௌர் (ONE 2 KA 4)என்ற திரைபடத்தில் இடம்பெற்ற மிக சிறந்த காதல் பாடல் இது .இதை தமிழில் பாட ஆசைப்பட்டேன் . வார்த்தைகளை கோர்த்தேன் ராகத்தோடு ,அவை கானோளியோடும் ஒத்துபோக வேண்டுமென்றும் சிரத்தை கொண்டேன் . பாடி பாருங்கள் பிடித்து இருந்தால் வாக்களித்து கருத்து சொல்லுங்கள் நன்றி 

பல்லவி :
பெண் :   முதல் பார்வையில் காமம் கண்டேன் 
                ரெண்டாம் பார்வையில் பயம் கண்டேன் 
                காதலை சொல்லிடு நானும் உன் பின் வருவேனடா 


பெண் :   முதல் பார்வையில் காமம் கண்டேன் 
                ரெண்டாம் பார்வையில் பயம் கண்டேன் 
                காதலை சொல்லிடு நானும் உன் பின் வருவேனடா 
                மூன்றாம்  பார்வையில் காதல் கண்டேன் 
                நான்காம் பார்வையில் தயக்கம் ஏனோ  
                காதலை சொல்லிடு நானும் உன் பின் வருவேனடா

ஆண் :     ஆம்..................
                 அழகை கண்டேன் உண்மை தான் 
                 அச்சம் கொண்டேன் நிஜம் தான் 
                 காதல் சொல்ல வார்த்தை தேடி தோற்தேனடி      
                 உண்மை அறிவாயே நீ !

பெண் :   முதல் பார்வை
                  நான்காம் பார்வை 
                 தயக்கம் ஏனோ  தோற்தேனடி
                 காதலை சொல்லு 
                 தோற்தேனடி
                 காதலை சொல்லிடு நானும் உன் பின் வருவேனடா 
                 உண்மை அறிவாயே நீ !


சரணம் 1:
பெண் :     காதல் சொல்ல வார்த்தை வேண்டாம் 
                 கண்களாலே சொல்லிவிடு !
                 கவிதை வேண்டாம் மௌனம் போதும் 
                 ஒருமுறை நீ சொல்லிவிடு !

ஆண் :     மௌனமே சம்மதம் புரிந்தது தோழியே !
                 இருந்தும் எனக்கு கவிஞனாக
                ஆசை உண்டு தோழியே !

பெண் :    உந்தன் பெயரே கவிதை எனக்கு 
                 காதில் சொல் மன்மதா 
                 உன் கண்ணை மிஞ்சும் கவிதை 
                 உலகில் ஏதும் ஏதும் உள்ளதா !

ஆண் :     அடி கள்ளி வென்றாய் என்னை 
                 என் காதலை கண்ணில் பார் !

பெண் :      கண்டேன் காதலை .....
                   கண்டேன் காதலை கண்ணில் தான் 
                   காதல் கொண்டேன் உன் மேல் தான் 

ஆண் :      அட காதல் கொண்டேன் நானும் தான் 
                  எந்தன் தேவி நீயே தான்   
                  உலகம் வியக்கும் காதல் செய்வோம் வா உயிரே
                 
                                                
சரணம் 2:

ஆண் :   ஒ ,,,,,,ஒ ....
               கள்ள பார்வை எதற்கு பெண்ணே 
               என்ன வேண்டும் சொல்லிவிடு 
               கள்ள பார்வையை தாங்கும் இதயம் 
               எனக்கு இல்லை புரிந்துகொள் !

பெண் :    காதல் சொன்ன காதலா 
                 இதயம் சொல்வதை செய்திடு !
                 கண்ணில் ஏதும் கள்ளமில்லை 
                 உள்ளத்தில் ஆசைகள் உள்ளது !

ஆண் :    கூந்தல் அழகை எண்ணி எண்ணி 
                முத்தங்கள் நான் தந்திடவா !
                முத்தம் முதலீடு என்று சொல்லி  
                வட்டி கேட்டால் பாவமா !

பெண் :   கண்கள் மூடி காத்திருக்கேன் 
                கணக்கை பாரு காதலா 

ஆண் :     நீண்ட நாட்கள் பாக்கி உதட்டில் ......
                 தேனீ போல பருகவா  !
கோரஸ் :   
                    காதல் வெல்லும் 
                   காலம் வந்தது !
                   கைகூடும் ......
                   நேரம் வந்தது ! உங்களுக்கு ....
                   
                    மௌனம் போதும் வார்த்தை எதற்கு ?
                    முத்தம் போதும் கவிதை எதற்கு ?  

                     மௌனம் போதும் வார்த்தை எதற்கு ?
                     முத்தம் போதும் கவிதை எதற்கு ? 


                     மாலை சூடும் வேளை வந்தது 
                     மங்கள இசைதான் எங்கும் முழங்குது 


                     மாலை சூடும் வேளை வந்தது 
                     மங்கள இசைதான் எங்கும் முழங்குது 


--------------------------------------------------------------------------நன்றி 


இரண்டாவது சரணம்  கானோளியோடு  மிகவும் பொருந்தி வருவது போல் எனக்கு ஒரு மாயை . இது பரிட்சார்த்த முயற்சி நான் பாஸா பெயிலா ???!!
குறை நிறை சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன் .............

வலைச்சரத்தில் ....



16 comments:

  1. அருமையான முயற்சி ..ரசிக்கவைத்தது ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப மகிழ்ச்சி நன்றி நன்றி

      Delete
  2. தாங்கள் என்னையும், எனது வலைபூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ! இதன் மூலம் உங்களையும், உங்கள் பதிவை படித்தால் இன்னும் சிலரையும் இன்று நண்பர்களாக பெற்றேன் ! பதிவு தொடர வாழ்த்துக்கள்....... இன்றிலிருந்து தங்கள் பதிவுகளை தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப மகிழ்ச்சி நன்றி நன்றி

      Delete
  3. மிகவும் அழகாகவே எழுதியிருக்கிறீர்கள், நண்பரே. நல்லதொரு முயற்சி இது. மனதாரப்பாராட்டுகிறேன்.

    >>>>>



    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா ...ரொம்ப ரொம்ப நன்றி .........

      Delete
  4. என்னைச் சொக்க வைத்த வரிகள் இதோ>>>>


    ஆண்:

    1] மௌனமே சம்மதம் புரிந்தது தோழியே !

    2] அட காதல் கொண்டேன் நானும் தான்
    *எ ந் த ன் தே வி நீ யே தா ன்*
    உலகம் வியக்கும் காதல் செய்வோம் வா உயிரே

    3] முத்தம் *மு த லீ டு* என்று சொல்லி
    *வ ட் டி* கே ட் டா ல் பாவமா !

    4] நீண்ட நாட்கள் பாக்கி உதட்டில் ......
    தேனீ போல பருகவா

    >>>>>> !

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ பின்னுட்டத்தில் கூட உங்கள் தனித்துவம் தெரிகிறது ஐயா ....ரொம்ப நன்றி நன்றி

      Delete
  5. என்னைச் சொக்க வைத்த வரிகள் தொடர்ச்சி இதோ >>>>

    பெண்:

    1] உந்தன் பெயரே கவிதை எனக்கு
    காதில் சொல் மன்மதா
    உன் கண்ணை மிஞ்சும் கவிதை
    உலகில் ஏதும் ஏதும் உள்ளதா ! [சூப்பரோ சூப்பர்]

    2] காதல் சொல்ல வார்த்தை வேண்டாம்
    கண்களாலே சொல்லிவிடு !
    கவிதை வேண்டாம் மௌனம் போதும்
    ஒருமுறை நீ சொல்லிவிடு !


    3] கண்கள் மூடி காத்திருக்கேன்
    கணக்கை பாரு காதலா

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனம் கவர்ந்தது மிக பெரிய சாதனை ...மிக்க நன்றி ஐயா

      Delete
  6. கோரஸ் வரிகளில் என் மனம் கவர்ந்தவை:

    1] மௌனம் போதும் வார்த்தை எதற்கு ?
    முத்தம் போதும் கவிதை எதற்கு ?

    2] மாலை சூடும் வேளை வந்தது
    மங்கள இசைதான் எங்கும் முழங்குது


    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. அழகாக பிரித்து ரசித்து சொன்ன உங்களின் கைகளை முத்தமிட்டு நன்றி சொல்ல தோன்றுது நன்றி நன்றி

      Delete
  7. காணொளியில் கண்ட காதல் காட்சிகளும் அருமை.

    இசையுடன் கூடிய அந்தப்பாடல் அதைவிட அருமை.

    தங்களின் கற்பனை கலந்த தமிழ் பாடல் வரிகள் அத்தனையும் அருமையோ அருமை.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ஒரு படத்தைப் பார்த்து அதற்கேற்ற கதைகள் எழுதச்சொல்லி போட்டி வைப்பார்கள். அதில் பங்கேற்று பரிசும் பெற்ற அனுபவம் எனக்கு உண்டு.

    படக்கதைப்போட்டி:

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html

    தலைப்பு: ”என் உயிர்த்தோழி”

    தாங்கள் ஒரு ஹிந்திப்பட பாடல் காட்சிகளை வைத்து, கற்பனை செய்து அதே இசைக்கு ஏற்றாற்போல, ஒரு தமிழ் பாடல் எழுதியிருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை தான்.

    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. //////////பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்//////

      “போதும்டீ, அதையெல்லாம் நனைச்சு, அலசி, பிழிஞ்சு, ஒனத்தி (உலர்த்தி) காயவச்சு, மடிச்சு (மடித்து) கட்டறதுக்குள் (உடம்பில் அணிவதற்குள்) பிராணன் போயிடுது போ;


      அவசரமா பாத்ரூம் போய் வருவதற்குள்ள தலைப்புக் கச்சமெல்லாம் கசங்கி, அவிழ்ந்து, தரையெல்லாம் பெருக்கிண்டு வருதுடீ” என்று சொல்லி பாட்டி அலுத்துக்கொண்டதைக் கேட்டதும் உஷாவுக்குச் சிரிப்பு தாங்க முடியலே.//////////////
      ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து எழுதுவதே கடினம் ,நீங்கள் வயதான பாட்டியின் நிலையில் கதாபாத்திரம் படைத்தது எழுதி இருப்பது அருமை அருமை ...அருமை .... உங்களுக்கு பரிசு தந்து தினமலர் பிறவி பயன் அடைந்துவிட்டது என்றே சொல்ல தோணுது ..நன்றி ஐயா

      Delete
  8. //இரண்டாவது சரணம் கானோளியோடு மிகவும் பொருந்தி வருவது போல் எனக்கு ஒரு மாயை.//

    மாயை அல்ல நண்பரே! அது தான் உண்மை.

    //இது பரிட்சார்த்த முயற்சி நான் பாஸா பெயிலா ???!!//

    PASS மட்டுமல்ல BOSS. செண்டம் மார்க் வாங்கி ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துள்ளீர்கள், அதுவும் பரிட்சார்த்த முயற்சியிலேயே. அன்பு வாழ்த்துகள்.

    //குறை நிறை சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன் .............//

    ”குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!”

    நிறையோ நிறைதான் நிறையவே உள்ளன.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.........

      நன்றி என்ற சொல்லே உள்ளத்து உணர்வை சொல்லமுடியாமல் இயலாமையில் தவிக்குது ..என்று வலைச்சரத்தில் அறிமுகமாகி உள்ள ஒரு பதிவர் சொல்லி இருந்தார் ... அந்த வார்த்தைகளை என்னால் முழுமையாக உணரவும் மதிக்கவும் முடிகிறது ..உங்கள் வாழ்த்துக்களால் நானும் அதே நிலையில் இருப்பதால் ..
      கோடான கோடி நன்றிகள் ஐயா

      Delete