12.19.2012

கவிஞர் வாலி மீது வழக்கு பாயுமா !!!
கவிஞர் வாலி ஐயா அவர்கள் , சமகால அரசியல் நிகழ்வுகளை காதல் அல்லது காமெடி பாடல்களில் சுவைபட  திணித்து ருசி கூட்டுவதில் வல்லவர். அதில் மிக சமிபத்தில் வெளியான எதிர் நீச்சல் என்னும் படத்தில் மின்வெட்டு பற்றி சொல்லி அசத்தி இருக்கிறார். முகநூல் ட்விட்டர் என்ற பல வலைதளங்களில் மின்வெட்டு பிரச்னை பற்றி பல நகைச்சுவை துணுக்குகள் வந்துள்ளது . ஆனால் அனுபவமிக்க கவிஞர் ஐயா அவர்களின் இந்த பாடல் வரிகள் கவனம் ஈர்க்க தவறவே இல்லை .....

சிவா கார்த்திகேயன் நடிக்கும் படம் தான் இந்த எதிர் நீச்சல்,இது நடிகர் தனுஷ் தயாரித்து இருக்கிறார் ,இதற்க்கு கொலைவெறி இசை அனிருத் !

நானும் இப்படி ஒரு நாள் என் முகநூளில் எழுதி இருந்தேன் ....

மின்சாரம் இல்லாத இரவுகளில் கூட
மின்னுகிறது உன் முகம் !
எனக்கு ஒளியாய் நீ
உனக்கு விசிறியாய் நான் !!

மின்சாரம் இல்லாமல் வாடும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் இந்த (காதல் )ஆறுதல் 

---------------------------------------------riyaz


4 comments:

 1. கவிதை சூப்பர் சகோ....

  ReplyDelete
 2. கவிதை சூப்பர்..
  பாடலும் சூப்பர் அனிருத்தின் இசையும் சூப்பர் என்னு முகநூலெல்லாம் ஒரே எதிர்நீச்சல்தான்

  ReplyDelete
 3. கவிதை நல்லா இருக்கு.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete