7.26.2012

சிகரம் தொட்டது யாரு ?ராஜாவா A.R.ரஹ்மானா ?சிவாஜி- எம்.ஜி.ஆர்,ரஜினி-கமல்,விஜய்-அஜித்,சிம்பு-தனுஷ்...இப்படி நீளும் ரசிகர்களின் யுத்தங்களில் மேலே குறிபிடப்பட்டுள்ள எல்லா நடிகர்களும் குளிர் காயிந்து இருக்கிறார்கள்.அதிலும் இப்ப சமீப கால நடிகர்கள் இதை ஒரு வியாபார  தந்திரமாகவே பயன்படுத்துறாங்க.பாவம் அது அவர்களுக்கு தேவைபடுது.

ஆனால் திரைக்கு பின்னால் ஜொலிக்கும் ரெண்டு ஜாம்பவான்கலான இளையராஜா மற்றும் ரஹ்மான் இந்த ரெண்டு பேருக்குமே இப்படி ரசிகர்களிடம்   யுத்தம் நடத்தி அதில் குளிர் காயவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஏனோ அந்த யுத்தம் முடிந்தபாடில்லை. தொடரும் இந்த சலசலப்புக்கு என்னை ஊத்துவது என் நோக்கம அல்ல.


இளையராஜா அவர்கள் ஒரு சகாப்பதம். அவர் அறிமுகமான அன்னக்கிளி முதல் 90களின் தொடக்கம் வரை தமிழகம் முழவதும் அவர் கொண்டிருந்த இசை ஆளுமையை குறைத்து பேசினால் அது அபத்தம் . ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து பல விருதுகள் வாங்கி குவித்து மிக முக்கியமாக
பாமர மக்களின் சுக துக்கங்களில் கூட ராஜாவின் இசை ஒரு அங்கம் ஆக இருந்தது. இதை மெய்ப்பிக்கும் வண்ணமாகவே சமிபத்தில் அரங்கேறிய நீயா நானா நிகழ்ச்சி அமைந்ததிருந்தது.

மீண்டும் ரசிகர்களின் யுத்தத்திற்கு வருவோம். இளையாராஜா ரசிகரோ ரஹ்மான்  ரசிகரோ இல்லை இப்போ வந்துள்ள அனிர்ருத்துடைய ரசிகரோ நீங்கள் நல்ல இசை எங்கு கேட்டாலும் ரசிப்பீர்கள். அதுவே உங்கள் ரசனைக்கும் நீங்கள் ரசிக்கும் அவருக்கும் பெருமையான விஷயம். மற்றவர் மீது சேற்றை வாரி இறைப்பதால் உங்கள் ரசனையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடங்கி விடுகிறது , நீங்கள் ரசிப்பதாக சொல்பவருக்கும் சொல்லடிகள் (அவர் காதில் விழாது என்றாலும் கூட ) வாங்கி தருகிறது.

நல்ல இசை என்பது இளையராஜா மட்டும் தந்தார் என்று சொல்வதன் மூலம் ஒரு  மிக பெரிய இசை வரலாற்றையே டி .வி .டிக்குள் மறைக்கிரோமே இது தப்பில்லையா ??
எஸ்.ராஜேஸ்வர ராவ் ,எஸ்.வீ .வெங்கட்ராமன்,ஜி.ராமநாதன்,கே .வீ .மகாதேவன் ,விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்கள் எல்லாம் காலத்தால் அழிக்க  முடியாத பல பாடல்களை தந்து இருக்கிறார்களே ?மேலும் இந்தி எதிர்ப்பு கடுமையாக இருந்த நேரத்தில்லும் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் பரவி கிடந்த இந்தி பாடல்களும் மறக்க முடியாதவையே ? அந்த இசையை தந்த  நௌசாத், மதன்மோகன், S.D.பர்மன் , R.Dபர்மன்,லக்ஸ்மிகாந்த்-ப்யாரிலால் அவர்களையும் குறைத்து மதிப்பிடுவது தவறு இல்லையா?


அதே போல் மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள் அதற்கிணங்க அடுத்த தலைமுறை இசையை தொடங்கி வைத்தது ரஹ்மான்.அவர் இசை அமைத்தது மிக சொற்பமான படங்களே அதிலும் பல தோல்வி படங்கள் சில இசைக்காக மட்டுமே வெற்றி பெற்ற படங்கள் இதையெல்லாம் மீறி இந்திய திரை இசைக்கு உலக அங்கீகாரம் கிடைக்க முக்கிய காரணமாக விளங்குபவர். இவரையும் குறைத்து மதிப்பிட கூடாது.நம்ம சங்க காலங்கள் தொட்டே மிகைபடுத்துதல் என்பது நம் காலச்சாரதுடன் பிண்ணி பிணைந்து உள்ளது. ஏன் நாம் நம் குழந்தைகளை கொஞ்சும் போது கூட   மிகைபடுத்தி கொஞ்சுவதே வழக்கம். அதே போல தான் ரசிகர்களின் அன்பும் அவரவர் ரசித்ததை மிகைத்து பேசுகிறார்கள். ஆனால் தாங்கள் ரசித்தது மட்டும் தான் சிறந்தது என்று கூறும்போதும் அவர்கள் ரசிக்கும் ஒருவர் செய்யும் தவறுகளையும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அபத்தம் இல்லையா ?

நல்ல மனிதனாக வாழ்வதற்கும்  பரப்பரப்பான  வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து இளைப்பாறுவதர்க்கும் நமக்கு உதவுவது ரசிப்புத்திறன் அதையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்து பார்த்து நம்மை மேலும் சிறுமைப்படுத்தி கொள்வானேன்.

பல மேதைகளை கடந்து இளையராஜா வந்தது போல் இன்று ரஹ்மான் நாளை யாரோ ? இதில் உயர் வென்றும் தாழ்வென்றும் ஏதும் இல்லை என்பதே நிஜம் !!!!

                                            எதுவும் கடந்து போகும் !!!!
19 comments:

 1. நல்ல மனிதனாக வாழ்வதற்கும் பரப்பரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து இளைப்பாறுவதர்க்கும் நமக்கு உதவுவது ரசிப்புத்திறன் அதையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்து பார்த்து நம்மை மேலும் சிறுமைப்படுத்தி கொள்வானேன்.//

  மிக மிக அருமையான கருத்து
  நம்மை உணர்வுகடந்த உச்சத்திற்கு கொண்டு செல்லும்
  இசை பிரம்மாக்கள் ஒருவருக்கொருவர்
  உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சகோ உங்கள் வருகையும் வாக்கும் எனக்கு ரொம்ப பொறுப்பு அதிகரிகரிகுறது ..நன்றி நன்றி

   Delete
 2. Replies
  1. சகோ உங்கள் வருகையும் வாக்கும் எனக்கு ரொம்ப பொறுப்பு அதிகரிகரிகுறது ..நன்றி நன்றி

   Delete
 3. நடுநிலைமையோடு எழுதப்பட்ட ஒரு சரியான பதிவு. சில கிணற்றுத்தவளைகள் இளையராஜாவோடு இசை ஆரம்பித்து இளையராஜாவோடு அது முடிந்து விட்டது என்று மார் தட்டிகொள்வார்கள். இசை என்றால் அது ராஜாதான் என்று டிபிக்கலாக உளறுவார்கள். அற்புத இசை கொடுத்த பல மேதைகள் இருந்த இடம் தமிழ் திரை இசை. அதில் ஒருவர் மட்டுமே இமாலய சாதனை செய்தவர் மற்றவர்கள் எல்லாம் சும்மா என்பது போன்ற பதிவுகளே இங்கு அதிகம். அப்படி எழுதுபவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் விசிறிகளே. நல்ல வேலையாக நீங்களும் அதே தவறை செய்யவில்லை.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் சரி சகோ ...நன்றி ..

   Delete
  2. அது மட்டுமல்ல சில குட்டை தவளைகளும் AR ரஹ்மான் இசை தான் உலக இசை மற்றவர்கள் எல்லாம் குப்பை (ராஜா உட்பட) எழுதிவருகிறார்கள்.
   அது மட்டுமல்ல சில குட்டை தவளைகளும் AR ரஹ்மான் இசை தான் உலக இசை மற்றவர்கள் எல்லாம் குப்பை (ராஜா உட்பட) எழுதிவருகிறார்கள்.

   "அப்படி எழுதுபவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் விசிறிகளே" இக்கருத்தை மறுக்கிறேன். இவ்விடயத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. YOUTUBE இவ்விடயத்தை தெளிவாக பார்க்கலாம். அது மட்டுமல்ல ராஜா அவர்களின் ஜாதியை வைத்து திட்டி எழுதிய பதிவுகளையும் (மறு மொழிகள்) நான் பார்த்திருக்கிறேன்.
   ரஹ்மான் விசிறிகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தமது பதிவுகளையும் ராஜா வை திட்டியும் பதிடிடுவார்கள். ராஜா விசிறிகள் பெரும்பாலும் தமிழில் தமது பதிவுகளையும் விமர்சனங்களையும் இடுவார்கள். ரஹ்மான் விசிறிகளின் தாக்குதலுக்கு யுவன் உட்படுவார். அதேபோல் ஹரிஸ் ன் விசிறிகள் ரகுமானையும் தாக்குவார்கள் ஆனால் ராஜாவை பெரும்பாலும் தாக்க மாட்டார்கள்.

   Delete
  3. அப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் ..இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவின் நோக்கம் .. நன்றி சகோ

   Delete
 4. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 5. இரட்டை சிகரங்கள்...

  இவர்கள் தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷங்கள்...

  ReplyDelete
 6. அது மட்டுமல்ல சில குட்டை தவளைகளும் AR ரஹ்மான் இசை தான் உலக இசை மற்றவர்கள் எல்லாம் குப்பை (ராஜா உட்பட) எழுதிவருகிறார்கள்.
  அது மட்டுமல்ல சில குட்டை தவளைகளும் AR ரஹ்மான் இசை தான் உலக இசை மற்றவர்கள் எல்லாம் குப்பை (ராஜா உட்பட) எழுதிவருகிறார்கள்.

  "அப்படி எழுதுபவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் விசிறிகளே" இக்கருத்தை மறுக்கிறேன். இவ்விடயத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. YOUTUBE இவ்விடயத்தை தெளிவாக பார்க்கலாம். அது மட்டுமல்ல ராஜா அவர்களின் ஜாதியை வைத்து திட்டி எழுதிய பதிவுகளையும் (மறு மொழிகள்) நான் பார்த்திருக்கிறேன்.
  ரஹ்மான் விசிறிகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தமது பதிவுகளையும் ராஜா வை திட்டியும் பதிடிடுவார்கள். ராஜா விசிறிகள் பெரும்பாலும் தமிழில் தமது பதிவுகளையும் விமர்சனங்களையும் இடுவார்கள். ரஹ்மான் விசிறிகளின் தாக்குதலுக்கு யுவன் உட்படுவார். அதேபோல் ஹரிஸ் ன் விசிறிகள் ரகுமானையும் தாக்குவார்கள் ஆனால் ராஜாவை பெரும்பாலும் தாக்க மாட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள் ..இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவின் நோக்கம் .. நன்றி சகோ

   Delete
 7. நீங்கள் சொல்லும் இதே கருத்துக்களுக்காகத்தான் பதிவுலகில் நானும் மாய்ந்து மாய்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறேன். இளையராஜா மீதோ ரகுமான் மீதோ இன்றைய ஹாரிஸ் மீதோ தனிப்பட்ட அபிமானம் இருக்கலாம். அதனால் மற்றவர்கள் அத்தனைப்பேரையும் குறைத்து மதிப்பிடும் மனப்போக்கு ஆரோக்கியமானது அல்ல. தவிர இவர்கள் செய்ததைவிடவும் பலமடங்கு அதிகம் முன்னோர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. அபிமானத்தில் வேறுபாடுகள் இருக்கலாம். சரித்திரம் மாற்றி எழுதப்படக்கூடாது.தங்கள் பதிவிற்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பரே உங்கள் வருகை பெருமை அளிக்கிறது.தொடர்ந்து வாங்கல் நண்பா

   Delete
 8. ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனான உன்னிடமிருந்து இப்படி ஒரு அலசலை எதிர்பார்க்கவில்லை நான். மிக அருமையான நடுநிலையான அலசல் இது. பட்டென்று முடிந்துவிட்டதை போல ஒரு உணர்வு....இன்னும் கொஞ்சம் விரிவாக அலசியிருக்கலாம் என்பது என் கருத்து.

  ReplyDelete