7.15.2012

ஆணின் வக்கிரமும் பெண் மனமும்!!!


அலங்காரம் அதிகமானால்
விலை வைத்துவிடுகிறார்கள்
அலங்காரமே இல்லை என்றால்
விலைபோவதில்லை நான்!வியர்வை துடைத்து,அளவாய் சிரித்து
ஆண்களை எதிர்கொள்ளும் போதெல்லாம்
என் ஐம்புலனும் தன்னிச்சையாய்              
உடையை சரிசெய்து கொள்ள பழகிவிட்டது
நிச்சயமாய் கவனம் ஈர்ப்பதற்கு அல்ல!


பெண்ணியம் பேசும் பல
கண்ணியவான்கள் கண்கள் கூட
மத்தியில் நிலைத்து விடுகிறது .
தடுமாறும் வக்கிரத்தால்
நான் தடம் மாறாமல் இருக்க உதவும்
தலையங்கி,துப்பட்டா மட்டுமல்ல 
ரசம் போன கண்ணாடிகள் கூட
எங்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷமே !
14 comments:

 1. நல்லாத்தான் இருக்கு

  ReplyDelete
 2. மிகவும் அழகான அற்புதமான படைப்பு.

  //என் ஐம்புலனும் தன்னிச்சையாய்
  உடையை சரிசெய்து கொள்ள பழகிவிட்டது//

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  இதுபோல சிறப்பாக படைக்கும் ஆற்றல் தங்களுக்கும்

  // இறைவன் தந்த பொக்கிஷமே !// ;)))))

  அன்புடன்
  vgk

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் படித்ததே பெருமை ஐயா! நன்றி நன்றி

   Delete
 3. பெண்ணியம் பேசும் பல
  கண்ணியவான்கள் கண்கள் கூட
  மத்தியில் நிலைத்து விடுகிறது .
  தடுமாறும் வக்கிரத்தால்
  நான் தடம் மாறாமல் இருக்க உதவும்
  தலையங்கி,துப்பட்டா மட்டுமல்ல
  ரசம் போன கண்ணாடிகள் கூட
  எங்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷமே //

  நிச்சயமாக பொக்கிஷங்கள்தான்
  அருமையான சிந்தனை
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. Replies
  1. வாக்கிற்கு சிறப்பு நன்றிகள்

   Delete
 5. Replies
  1. நன்றி சகோ ...அடிக்கடி வாங்க

   Delete
 6. /* பெண்ணியம் பேசும் பல
  கண்ணியவான்கள் கண்கள் கூட
  மத்தியில் நிலைத்து விடுகிறது . */

  உண்மை..உண்மை..உண்மை....
  எவ்வளவு மறுத்தாலும் இது உண்மை..உண்மை..உண்மை...

  ReplyDelete
 7. கவி நடையில்
  நர்த்தனமாடுகிறது
  வலி சொல்லும்
  வலிமையான வார்த்தைகள்
  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ மிக்க நன்றி
   அடிக்கடி வாங்க சகோ

   Delete