7.15.2012

இயக்குனர் ஷங்கரின் ஐ போஸ்டர்

அந்நியன்' கூட்டணி மீண்டும் இணைகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ், ஷங்கர், விக்ரம் இணையும் இப்படத்திற்கு தலைப்பு 'ஐ'.


முதல் முறையாக ஷங்கர் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் நாயகனாக நடிக்க, சமந்தா நாயகியாக நடிக்க இருக்கிறார். சந்தானம், சுரேஷ் கோபி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும்   நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், பிரபுவின் அண்ணனுமான 'சிவாஜி பிலிம்ஸ்' ராம்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

'ஐ' என்றால் அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை மற்றும் இளி என்னும் இசையின் எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளது.


இந்த படத்தின் படபிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது அதனையொட்டி, ஐ படத்த்தின் போஸ்டர் இன்று வெளியானது ...

2 comments:

 1. இப்படத்தில் முதன் முறையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், பிரபுவின் அண்ணனுமான 'சிவாஜி பிலிம்ஸ்' ராம்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.//////
  தவறான தகவல் தரவேண்டாம். ஏற்கனவே ஜி.எம்.குமார் இயக்கத்தில் சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரித்த அறுவடை நாள் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ,அந்த தவறை திருத்தி விட்டேன்

   Delete