7.24.2012

ராமதாஸ் ஐயாவுக்கு அரசியல் செய்ய ஒரு டிப்ஸ்


இப்ப உள்ள அரசியல் கட்சிகளில் மதுவிலக்கு பற்றி தில்லா அறிக்கை மட்டும் விட்டு பரபரப்பு செய்வது நமது பா.ம.க மட்டுமே. அதற்க்கு முதலில் பாராட்டுகள். மேலும் எரியுற தீயில எண்ணெய் விடுவது போல நான் ஒரு செய்தி இல்லை இல்லை டிப்ஸ் என்றே வைத்துக்கொள்வோமே..

இப்ப வருகிற சினிமாக்கள் எல்லாத்திலும் மது அருந்துவது உடலுக்கும் குடும்பத்திற்கும் கேடு என்று கவனிக்க முடியாத படி ஒரு CAPTION  கொடுத்துவிட்டு குடியையும் விபாச்சரத்தையும் ஊக்குவிக்கும் பாடல்களும் காமெடிகளும் அதிகம் வருகின்றன. அதிலும் மிஸ்கின் மற்றும் சந்தானம்  என்னோமோ டாஸ்மார்க் கடை பிராண்ட் அம்பாசிடர் மாதிரி செயல் படுறாங்க.

ஆகவே ராமதாஸ் ஐயா அவர்களே ரஜினிகாந்த்,கமல்ஹாசன் பண்ணினா மட்டும் எதிர்த்து அரசியல் பண்ணலாம் என்பதை தாண்டி யார் செய்தாலும் தப்பு  என்று மீண்டும் குரல் கொடுங்கள். இதில் உறுதியா இருந்தா தாய்குலங்களின் ஆதரவு உங்களுக்கு பெருகும்.

எப்படி ஆரம்பிப்பது என்று யோசனை வேண்டாம். இதோ  விரைவில் தமிழில் வரப்போகும் சூப்பர் ஹீரோ திரைப்படமான முகமூடியில் குடி வாழ்த்து என்று பாடல் வருது. அதை தடை செய்ய சொல்லி போராட்டம் செய்யுங்கள் ஐயா.

இந்த மாதிரி திரை படங்களுக்கு குழந்தைகள் அதிகம் வருவாங்க இல்லையா அப்ப அந்த பிஞ்சு மனசுல நஞ்சை விதைக்குற மாதிரி இல்லை இந்த பாடல் இருக்கும்.

நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்னு சொல்லுவாங்க நான் பத்த வச்சுட்டேன் ,இனிமேல் இதை யார் வேணாலும் ஊதி பெருசாக்குங்க .. இந்த சினிமாக்காரங்க திருந்தும் வரை ...

அந்த பாட்டு இது தான் இதை மிஸ்கின் எழுதி பாடி வேற இருக்காரு ... சமுக அக்கறை உள்ள கலையே காலம் கடந்து நிற்கும் என்பதை ஏன் இந்த வியாபார வக்கிர மனங்களுக்கு புரிவதில்லை ...

12 comments:

 1. நல்ல பிரச்சனையை கையில்
  எடுத்துள்ளீர்கள்
  நல்லது நடக்கிறதா பார்ப்போம்
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி!உடன் வருகை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

   Delete
 2. Replies
  1. ரைட்டா ..நன்றி ..ஆசிரியரே நம்ம பிள்ளைகளின் நலம் கருதி தான் சொனேன் சகோ...
   நீங்களும் உங்கள் ஸ்டைல்ல ஒரு பதிவு இதே மாதிரி போடலாமே ..நன்றி

   Delete
 3. salaam,

  கிண்டுரதுபோல கிண்டி நல்ல விசயங்களையும் சொல்லியுலீர்கள் சகோ...உங்க பாணி ரொம்ப நல்ல இருக்கு

  புதிய வரவுகள்:இந்தியன்னு சொல்லவே கேவலமா இருக்கு,குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?-www.tvpmuslim.blogspot.com

  ReplyDelete
 4. வ.சலாம் நன்றி சகோ .. அவசியம் வருகிறேன்

  ReplyDelete
 5. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 6. சொல்லிட்டீங்க இல்ல! வெடிச்சிடும்!

  ReplyDelete