7.12.2012

தமிழ் மீது கோபம் !! தமிழர்கள் கொதிப்புதேவதை என பாடிவிட்டார்கள்
இராட்சசி  எனவும்  பாடிவிட்டார்கள்
ஐயோ! இனி உன்னை எப்படி நான் பாடுவேன் !


வார்த்தை தேடி தோற்கும் கவிஞன் நான்
கம்பனுக்கு உதவிய தமிழே தமிழே
எனக்கு வார்த்தை தர மறுப்பதால்
உன் மீது கோபமே !

உன் பார்வை கடக்கும் போதெல்லாம்
தோற்று போகிறேன் நான் !
தமிழின் ஆயுள் நீடித்திருப்பதற்கு
என் போன்று தோற்றுப்போனவர்கள்
கூட காரணமாய் இருக்கலாம்
இதை நினைக்கையிலே உன் மீது
காதல் இன்னும் பொங்குதடி!

மீண்டும் ஒரு தரிசனம் தா
மீண்டும் ஒரு பார்வை பார்
நான் முழு கவிஞன் ஆகவேண்டும் !!

-ரியாஸ்

இப்படி கவிதை சொல்லி உங்களை என் கிறுக்கல்களை படிக்க வைத்தால் தமிழர்கள் கொதிக்க தானே செய்வார்கள் ...


6 comments:

 1. ரியாஸ்...

  கவிதை உங்களுக்கு அருமையாகவே வருகிறது...
  என் தம்பி இப்படி எழுதுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது...

  எந்த பதிவு போட்டாலும் FB ல மறக்காம லிங்க தந்திடுங்கள்..

  ReplyDelete
 2. செந்தமிழும் நாப்பழக்கம்!
  எழுதுங்கள்

  ReplyDelete