7.08.2012

உன் கண்ணில் கண்ட வலி !!!


அப்பாவின் கடன்
அம்மாவின் தாலி                                        
அக்காளின்  பிரசவம்
தங்கையின் திருமணம்
இதற்க்கு உழைப்பதே
பிறவிபயன் என நான் !


தேனொழுக பேசி
வந்தவரை லாபம்
விழிக்கும் வரை
புடுங்குவோம் என உறவுகள்.


 ஐந்தறிவு ஒட்டகம் கூட
தாகத்திற்கு தண்ணீரை
தனக்குள்ளே  சேமித்துக்கொள்ளும்
நானோ அத்துனையும் பகிர்ந்தேன்
சொன்னதெல்லாம் செய்தேன் .


குடும்பத்திற்கு செய்வதெல்லாம் 
கடமை என்றும் 
பெருமை என்றும் 
பொறுமையாய் செய்த 
எனக்கு ஒருநாள் 
வலித்ததும் விழித்துக்கொண்டேன்
அட என்ன கொடுமை
அவர்கள்  கண்களை மூடிக்கொண்டார்கள்.
கறிவேப்பிள்ளை  தானோ  நான்.

 
வலியும் வேதனையும் நான்
மட்டுமே அனுபவிக்கிறேன் !
வால் அறுந்த  பல்லிபோல்
துடித்து நடித்து திசையெட்டும் 
திட்டுவதோ அவர்கள்.


சுமைகள் சுமந்து சுமந்து 
நன்மையை ஏவி ஏவி 
தவறான உதாரணமாகி 
தூக்கமிழந்து வாடும்போது 
ஆறுதலாய் இருப்பதெல்லாம் 
பின்வரும் சத்தியமே!

 


இழந்தவை எல்லாம் 
இழப்புகள் அல்ல
என் இறைவன் வாக்களித்த 
பரிசுக்கு முதலீடே !



-மீண்டு(ம்)  ரியாஸ் 




18 comments:

  1. வலிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்பார்கள் - உன்னால முடிகிறது
    வலிகளுடன் ரசித்தேன்

    ReplyDelete
  2. சில நேரங்களில் உறவுகள் காகிதச் சங்கிலிகளாகி விடுவதுதான் வேதனை.
    நன்று ரியாஸ்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்அது வேதனை அளிக்கிறது .நன்றி ஐயா

      Delete
  3. ஐந்தறிவு ஒட்டகம் கூட
    தாகத்திற்கு தண்ணீரை
    தனக்குள்ளே சேமித்துக்கொள்ளும்

    நானோ அத்துனையும் பகிர்ந்தேன்
    சொன்னதெல்லாம் செய்தேன் .

    வார்த்தைகளில் தெறிக்கும் வலி
    மனத்தின் ரணாத்தை
    மரணம் போல பட்டவர்த்தனமாக சொன்னது
    அருமை நண்பா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ..நன்றி சகோ

      Delete
  4. இழந்தவை எல்லாம்
    இழப்புகள் அல்ல
    என் இறைவன் வாக்களித்த
    பரிசுக்கு முதலீடே !
    வலி மிகும் வரிகள். இயல்பாக சொல்லிவிட்டீர்கள். எங்களால் முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை நன்றி சகோ .. இது பலரின் வலி போல இருக்கே .நன்றி

      Delete
  5. ரியாஸ்,

    கவிதை அருமை... கற்பனைல உதிச்சதா?? உணர்ந்து எழுதினியா???

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.. என் அண்ணனின் வலியை உணர்ந்து எழுதியது

      Delete
  6. சுமைதாங்கி .வீட்டுக்கு ஒருவரேனும் கண்டிப்பாக இருப்பாங்க .இந்த வெளிநாட்டு வாழ்வில் இன்னும் கொடுமை அது .அருமையாக எழுதி இருக்கின்றாய் ரியாஸ்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ...ஏழாவது ஒட்டு ரொம்ப ஸ்பெஷல்

      Delete
  7. செத்தவன் சுமையெல்லாம் சுமந்தவன் தலைமீது என்பார்கள்! உங்கள் கவிதையே என் வாழ்வின் முற்பகுதி ஆகும்! அருமை அன்ப!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குமா ஐயா இந்த வலி ....வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி

      Delete
  8. இன்றைய யதார்த்த நிலையைச் சொல்லிப்போகும்
    பதிவு அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி

      Delete