வங்கியில் பணம் செலுத்தி
மடியில் கணம் குறைந்ததை எண்ணி
மகிழ்ச்சியுடன் வரும் என்னை நோக்கி
பாய்ந்தன முரட்டு கைகள்
தோலில் வலி உணரும்போதே
செவிக்கும் வசைமொழி விருந்தானது
முரண்டு பிடித்த அந்த கணத்தில்
பளபளவென ஒரு கத்தி
காற்றில் மிதந்தபடி வந்து
வயிற்றில் பாய்ந்தது !
என்னிடம் ஏதும் இல்லாததால்
அவர்களுக்கு இது தோல்வி !
கோபம் அதிகரிக்க சுருண்டு
விழுந்து கிடக்கும் எனக்கு
இலவச இணைப்பாக முகத்தில்
ஓங்கி ஒரு மிதி !
என்னை குத்திய திருடர்கள்
நிச்சயம் கஞ்சர்களே - சொருகிய
கத்தியையும் விட்டு வைக்காமல்
பிடுங்கி செல்கின்றனர் !
வயிற்றில் வழியும் இரத்தத்தை காண
தைரியம் இல்லை ஆனால் கைகளில்
உணர்கிறேன்- என் ஐம்புலனும்
சிவந்திருப்பதையும் சிந்தை உணர்த்துகிறது!
பற்களை கடித்துகொண்டு வலியை
பொறுத்துக்கொண்டு இப்படியே என்னை
மாய்த்துகொள்ள விரும்புகிறேன்.
இது தற்கொலை அல்ல, மரணிக்க
கிடைத்த நுழைவு சீட்டு இதையாவது
சரியாக பயன்படுத்த நாடினேன்.
ஆள் நடமாட்டம் அதிகமில்லை
நானும் சத்தமிடவில்லை
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில்
முயற்சி செய்துகொன்டிருக்கும் எனக்கு
இது நிரந்தர தோல்வி அவ்வளவே !
தோற்றவர் ஏமாந்தோருக்கு கூட
ஞானிகள் என்று பட்டம் தந்து மகிழ்கிறோம் !
முயற்சிக்கும் என் போன்றோருக்கு
வெறுமையும் விரக்தியும் பரிசானால்
மரணமே மோட்சம் !
மனைவியின் காதலும்
மழலையின் மொழியும்
கண்களில் காட்சிகள் மங்கி
மறையும் கணத்தில் வாழவேண்டும்
என்ற ஆசை தீயை பற்றவைகிறது !
வேண்டாம் நான் இல்லாமல் போனால்
என் உலகம் இன்னும் அழகாக வாய்ப்பிருக்கிறது !
அதை கெடுக்க மனமின்றி கண்மூடி போகிறேன் !
நிச்சயம் கண்விழிப்பேன் பெரும் பாவம்
செய்யாததால் அது சொர்க்கமாகவே இருக்கும் !
மெல்ல மெல்ல கண் விழிக்கிறேன்
என்னை பார்த்ததும் கதறி மண்டியிட்டு
இறைவனுக்கு நன்றி சொல்கிறாள் மனைவி
வரவேற்கும் வண்ணம் மழலையின் சிரிப்பை
கண்டதும் அன்பும் அறனும் நினைவுக்கு வர
மீண்டும் சிறைப்பட்டேன் !
Tweet |
வித்தியாசமான சிந்தனை
ReplyDeleteஅருமையான பதிவு
இறுதி வரிகள் மிகச் சிறப்பு
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரொம்ப நாளா வரலையே சகோ ... தொடர்ந்து வாங்க நிறை குறை சொல்லுங்க நன்றி
Deletetha.ma 1
ReplyDeleteநீங்க அளித்த வாக்குக்கும் நன்றி நன்றி
Delete#என்னை குத்திய திருடர்கள்
ReplyDeleteநிச்சயம் கஞ்சர்களே - சொருகிய
கத்தியையும் விட்டு வைக்காமல்
பிடுங்கி செல்கின்றனர் !#
சூப்பர்..அருமை....
இப்படி ரசித்ததை குறிபிட்டு சொல்லும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு .. நன்றி சகோ
Deleteஅருமை.....அருமை
ReplyDeleteஅருமையா இருக்கு ரியாஸ்... வித்தியாசமான முயற்ச்சி...
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி சகோ ... ரொம்ப மகிழ்ச்சி .. இந்த அளவிற்கு உங்க மனசை தொட்டதே மாஷா அல்லா போதும்
Deleteசிறப்பான மாறுபட்ட சிந்தனை.
ReplyDeleteஉங்கள் தொடர் வருகை பெருமை அளிக்கிறது ...நன்றி நன்றி ...மீண்டும் மீண்டும் வாங்க ஐயா
Deleteசூப்பர் சகோ..!
ReplyDeletetq சகோ..!
Deleteவித்தியாசமான சிந்தனை வரிகள்... அருமை...
ReplyDeletetm9
வாங்க வாங்க ரொம்ப லேட்டு நீங்க ...ஹி ஹி .. வாழ்த்துக்கும் வாக்கிற்கும் நன்றி நன்றி
Deleteஅன்பின் ரியாஸ் அஹமது - சிந்தனை அருமை - கவிதை நன்றி - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete