11.04.2012

ar ரஹ்மான் செஞ்சது நியாயமா ?

ரெகார்ட் டான்ஸ்,குத்து பாடகளின்  இசை வெளியிடுகளே மிக பிரமாண்டமாக, காதுகூசும் அளவுக்கு பெருமை பேச்சுக்களுடன் அரங்கேறும் நாட்களில் ஒரு அழகிய தமிழ் கவிதைக்கு இசையையும் கவிதையாகவே படைத்துவிட்டு   வழமை போலவே அமைதிகாக்கிறார் ரஹ்மான் .. நெஞ்சை வருடும் பாடல்
 


கடல்- முதல் பாடல்

மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ முதல் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார். காதுக்கு இனிமையான பாடல் இதோ உங்கள் கண்களுக்கும்.
‘வைரமுத்து கவிதைகள்’ என்ற என் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மௌனத்தின் புதைந்த கவிதைகள்(பக்கம் 706) என்ற கவிதைதான் பாடலாகியுள்ளது.

பல்லவி

நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் 
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான் 
அப்பறமாக் குனியலையே! குனியலையே!
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க 
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

சரணம்-1

பச்சி ஒறங்கிருச்சு
பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு

காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க 
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?

சரணம்-2

ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே!

ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே!

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்!- இங்க 
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ ?
-------------------------------------------------------------------------------------------------

10 comments:

  1. வரிகள் மிகவும் அருமை...

    நன்றி...
    tm2

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ ...நன்றி மீண்டும் வருக

      Delete
  2. //ar ரஹ்மான் செஞ்சது நியாயமா ? //

    அது கெடக்கட்டும், நீங்க செஞ்சது நியாயமா?

    :D :D :D

    ReplyDelete
    Replies
    1. சரியா தவறா ? சரி என்றால் சரி ! தப்பு என்றால் தப்பு !
      :D :D :D

      Delete
  3. Song is decent. But why so much build-up? The power of branding?

    ReplyDelete
    Replies
    1. sir .. if u call this as a build up or hype,then what you will say about the recent audio release functions which r simply promoting bgrade double meaning songs.As u mentioned song decent and also everything surrounding it.

      Delete
  4. இப்படி ஒரு தலைப்பை வைத்து நீ செய்தது மட்டும் சரியா தம்பி?.. இருந்தாலும் வரிகளை தேடிக்கண்டு பிடித்து போட்டதற்காக உன்னை மன்னிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி .. அண்ணன் தலைப்பு தப்பு தான் .. ஆனா பாட்டு பின்னுதே கவிதையும் தான் ... தேடி எல்லாம் எடுத்து போடலை வைரமுத்து ட்விட்டர்ல என் பிரெண்டு (ஹி ஹி ஹி ) ட்வீட் பண்ணி இருந்தாரு அப்படியே சுட்டு போட்டேன் ...நன்றி நன்றி

      Delete
  5. பாடுறவங்க யாரு..?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ ... சக்திஸ்ரீ கோபாலன் என்னும் பாடகி பாடி இருக்காங்க சகோ ...நல்ல எதிர்காலம் இருக்கு அந்த பெண்ணுக்கு .. நன்றி சகோ

      Delete