11.06.2012

விண்ணை தாண்டி வருவாயா!

உன் முகத்தை மேகம் மறைத்தாலும்
தீயிட்டு கொளுத்தி பார்க்க ஆவல் வரும் 
இங்கு உன் முகம் மறைப்பதோ 
என் சிகரெட் புகை ! புகையை 
கைகளால் விரட்டியபடியே முழுநிலவின் 
தரிசனம் கண்டேன் ! அப்படியே உன் 
கவனமும் ஈர்க்கிறேன்,கண்டும் காணாமல் 
கடந்து போகிறாய் காதலில் 
நான் உறைந்து போகிறேன்!


நீ கடந்து போவதை வேடிக்கை 
பார்ப்பதே என் வாடிக்கையாகிவிட்டது!
நண்பர்கள் தவிர்த்து சிகரெட் மறைத்து 
காத்திருக்கும் குட்டி சுவரே சொர்கமானது!
கண்ணோடு கண் பார்கிறேன்-நீ 
காணாத கணம் பார்கிறேன் 
அனைத்திலும் பவுர்ணமி நிலவானாய் !
நீ வாராத நாட்கள் அமாவாசை எனக்கு 
என் விண்வெளியிலும், அது அபசகுனம் தான்  !


வெறுப்பாய் ஒரு முறை கூட 
நீ கடந்ததில்லை என்னை !
அந்த தைரியத்தில் காதலை 
கடிதமாக மிக துரிதமாக 
தந்துவிட்டு காத்திருக்கிறேன்!
பல நாட்கள் மண் பார்த்தே செல்கிறாய் 
பதில் ஏதும் சொல்லாமல்!

உன் கொலுசின் ஓசையிலேயே 
கலவரம் அடையும் என் மனம் 
இன்று நீ வெட்கத்துடன் நெருங்கி 
வரும் போது ஏதோ சிந்தனையில்!

பிடித்திருக்கிறது என்கிறாய் !
எரிமலையாய் வெடித்து உன்னை 
திட்டி தீர்க்கிறேன்! துடித்து அழுது 
ஓடி மறைகிறாய், உயிர் பிரிவதை 
முதன் முதலாக பார்த்தவனாக நானும்,
அந்த சாலையையே மறந்து போகிறேன் !

நான் உனக்காக காத்திருந்த போதெல்லாம் 
கண்ணியம் காத்தாய் ,அதுவே உன் 
எதிர்காலம் காத்தது தோழியே!
ஆம் அன்று  சிகரெட் புகை -உன் 
முகம் மட்டும் மறைக்கவில்லை !என் 
காதலையும் மறைத்து விட்டது போ!
மருத்துவர் தேதி குறித்துவிட்டார் 
இனி உன்னை தேடி என்ன பயன்!
நீ என்னை நாடி என்ன பலன்!

அழுத என்னவளின் கண்ணீரை
துடைக்க கைகள் நீளவே விரும்புகிறது
மனதை கல்லாக்கி பொறுத்துக்கொள்கிறேன் !
மனம் கல்லாக இருந்திருந்தால் தான்
நான் காதலித்து இருப்பேனே!


உன் வானில் நீ சிறகுகளுடன் 
சந்தோசமாய் வாழவே பிராத்திக்கிறேன் 
அதற்கே ஆசைப்பட்டு 
ரகசியம் காத்து விரைவில் 
மண்ணோடு மண்ணாக போகிறேன்!
உறக்கமின்றி அலைபாயும் மனம் 
இன்றும் கேட்க்கும் ஒரே கேள்வி 
விண்ணை தாண்டி வருவாயா ??!!

நாளை நான் இல்லாதுபோனபின்
என் நிலை நீ புரிந்துகொண்டு
எனக்காக கண்ணீர் விட்டால்
எரிந்து கருகிய என் மனதில்
அப்போதும் மழை பெய்யும்!


5 comments:

 1. // கண்ணோடு கண் பார்கிறேன்-நீ
  காணாத கணம் பார்கிறேன் //

  அருமை ரியாஸ்.. கவிதை ரொம்ப இயல்பாவே வருது உங்களுக்கு... இதை நான் என் வாலில் சேர் பண்றேன்...டீக்கடை வேணாம்... சண்டைக்கு வந்தாலும் வருவாங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 2. நிறைந்த மனதுடன் வாழ்த்திய அண்ணனுக்கு ஜெ !
  ரொம்ப thanks அண்ணே....

  //இதை நான் என் வாலில் சேர் பண்றேன்..///
  உங்கள் வாலில் தீ பிடித்திட போகுது அவ்வவ ..நன்றி

  ReplyDelete
 3. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 4. கலக்கிட்டீங்க ரியாஸ்

  ReplyDelete
 5. காதல் வரிகள் சொட்ட சொட்ட பதிவு... சூப்பர்

  ReplyDelete