11.07.2012

பெருமை கொள்ளாதே கொல்லும் !




பணம் பந்தியில் என்கிறாய் - அது
குப்பையிலும் சிரிக்கத்தான் செய்யும்.
பார்க்கும் நம் வயிறு தான் எரியும்!


பணம் பத்தும் செய்யும் என்கிறாய் - அது
ஒன்றும் செய்யாது மனிதரின் மனமே 
தடுமாரும் தாறுமாறாய் தரம்கெட்டு !


விரலுக்கு ஏற்ற வீக்கம் என கூறி 
விரலே உனக்கு அதிகம் என
ஏளனம் செய்கிறாய்! நீ வெற்றிகளை 
சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு 
என் தோளில் தோல்விகளை ஏன் 
சுமக்க செய்கிறாய் !




படிக்கட்டுகளில் இருக்கும் எனக்கு 
உன் பகட்டால் கீறல்கள் பல 
இருப்பினும் நன்றி சொல்வேன் உனக்கு ,
வெற்றிகளை கொண்டாடுவது தான் 
தோல்வி என்ற பாடம் புகட்டியதர்க்கு!

கனரக வாகன ஓட்டுனரின் தோள்களுக்கு 
வாகனத்தின் சுமை தெரியாதிருப்பதை போல 
வெற்றிகளை சுமக்காதிருக்கும் பக்குவம்
எனக்கு வரும்வரை வெற்றி 
வேண்டவே வேண்டாம் பரம்பொருளே !!

13 comments:

  1. அருமையான கவிதை.

    இந்தக் கவிதையை இன்றைய வலைச்சர அறிமுகத்துக்குத் நன்றியுடன் தேர்வுசெய்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோ பாராட்டுக்கும் அறிமுகத்திற்கும் நன்றி ! மகிழ்ச்சி ! முதல் வருகை தொடர்ந்து வாங்க !!

      Delete
  2. ””கனரக வாகன ஓட்டுனரின் தோள்களுக்கு
    வாகனத்தின் சுமை தெரியாதிருப்பதை போல
    வெற்றிகளை சுமக்காதிருக்கும் பக்குவம்
    எனக்கு வரும்வரை வெற்றி
    வேண்டவே வேண்டாம் பரம்பொருளே !!””

    திணிக்கப்படும் தோள்வியும், பறிக்கபடும் வெற்றியுமே வாழ்வாகிப்போன வாழ்வியல் விதியை விமர்சித்தவிதம் அருமை,சகோ மெருகேறிய வார்த்தைகளில் உருகிப்போனேன்.

    ReplyDelete
  3. தவறுக்கு மன்னிக்கவும்
    தோள்வி அல்ல தோல்வி.

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பு எதற்கு நண்பா ? இதெல்லாம் நமக்கு ஜகஜம் அவ்வவ்

      Delete
  4. வெற்றிகளை சுமக்காதிருக்கும் பக்குவம்
    எனக்கு வரும்வரை வெற்றி
    வேண்டவே வேண்டாம் பரம்பொருளே !!
    சிந்திக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவேளைக்கு பின் உங்கள் வருகை மகிழ்ச்சி !நன்றி சகோ

      Delete
  5. சிந்திக்க வேண்டிய வரிகள்...

    வலைச்சர வாழ்த்துக்கள்... (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html)

    நன்றி...
    tm2

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ .. மிக்க நன்றி

      Delete
  6. கவிதையின் ஒவ்வொரு வரிகளும் ஆழமான கருத்துக்களை சொல்கின்றன. அதிலும் இறுதி அய்ந்து வரிகள் மிக மிக அழகான, சிந்தனையை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை சகோ ... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ,...தொடர்ந்து வாங்க நிறை குறை சொல்லுங்க

      Delete

  7. வணக்கம்,

    ரியாஸ் அஹமது மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் உங்களின் தளத்துக்கு நான் புதியவன் உங்களின் கவிதையை வலைச்சரம் வலைப்பூவில் பகிரப்பட்டுள்ளது (2012-11-08)அன்று தொடர்ந்து பயணியுங்கள் எழுத்து துறையில் மேலும் வெற்றிகள் கிடைக்க வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete