ஜன்னல் ஓர இருக்கைக்காக பிராத்தனைகள் செய்ததுண்டு !
இன்று முதல் விமான பயணம்
சற்றே கூடுதலான பிராத்தனையுடன்
இருக்கை தேடின கண்கள் ,ஏமாற்றமே !
ஆனால் கொஞ்சமும் வருத்தமில்லை !
ஆம் ஜன்னல் ஓரத்தில் அழகிய இளம் பெண்
அவள் அருகில் நிலவில் கால்பதித்த சந்தோசத்துடன் நான் !
பொய் சொல்லி வர்ணிக்க வேண்டிய அவசியமில்லா அழகு !
கண்ணியமான உடையில் புத்தக புழுவாய் அவள் !
என் குளியலை நானே சந்தேகத்துடன் நினைத்துபார்க்க வைத்தது
அவள் கூந்தல்,காற்றில் தெளித்த வாசனை !
இறுக்கமாக மூடப்பட்டுள்ள ஜன்னல் வழியே
காற்று வர வழியே இல்லை !
யாரின் பாடலுக்கு உன் கூந்தல் நடனமாடுதோ !
ஓ .. தலைக்கு மேலே குளிறுட்டி !!
முதல் விமான பயணத்தின் நடுக்கம் மறைத்து
கதாநாயகனாய் முயற்சிக்கும் எனக்கு,
ஒவ்வொரு கணமும் பரிட்சையாகி விட்டதே!
ஆமாம் எந்த பரீட்சைக்கு நீ இப்படி படிக்கிறாய்!!
உணவு வருகிறது வேண்டாம் என்கிறாய்
உன் குரலும் இனிமை ! உணவை
வாங்கி உண்ணாமல் தவிக்கையில்
என்னை அன்புடன் சாப்பிடுங்கள் என்று அனுமதி தருகிறாய் !
வரபோகும் மனைவி ஊட்டிவிடவேண்டும் என கனவுகள் உண்டு ,
அது நிறைவேறியாதகவே தோன்றுதடி!
உண்ட நான் தெளிவாய் இருக்க
மயக்கத்தில் அவள் புத்தகத்தில்
முகம் புதைத்து தூங்கிபோனாள்!
இதுவரை ஓரக்கண்ணில் பார்த்துவந்த எனக்கு
முழுதாய் முகம் பார்க்க ஆவல்!
அந்த புத்தகத்தை என்னை போல்,
வேறு எவரும் சபித்திருக்க மாட்டார்கள் !!
பயணம் இனிதே நிறைவடந்தாம்!!!
விமானம் தரை இறங்கியது .
என் பயனதட்டுமுட்டுகளை சேகரித்த பின்
அவள் பக்கம் திரும்பினேன்!
யாருக்கோ காத்திருக்கிறாள்
பணிப்பெண் நான்கு சக்கரநாற்காலியுடன் வர
அதில் நன்றியுடன் அமர்கிறாள் என்னவள் !
பின்பு ஒரு நாள் ...,
விழி ஈரத்தோடு நல்ல துணையின்றி
என்னால் நகரக்கூட முடியாது என்கிறாய் ?!
நானும் நல்ல துணையே என வாக்களித்தேன் .
உன்னிடம் காதல் சொன்ன
அந்த கணம் மட்டுமே
நானும் வீரன் என சொல்லிக்கொள்ள உதவும் !
ஈர்ப்பு தான் காதலா?
பரிதாபம் தான் காதலா?
அவள் நிலைதெரியாமல் அணுஅணுவாய்
ரசித்த குற்றஉணர்வு தான் காதலா?
என்ற கேள்விகளுடன் நான் இருக்கையில்
என் தியாகமே காதல் என்று நன்றியுடன் அவள் !
என் கேள்விகளோடு காதலும்
நிலைதிருப்ப்பதால் இன்றும்
வானிலேயே மிதக்கிறோம் !
Tweet |
"பொய் சொல்லி வர்ணிக்க வேண்டிய அவசியமில்லா அழகு "
ReplyDeleteஇது உங்களின் கவிதைக்கும் அழகாக பொருந்தும் நண்பா...........
அசத்தலான க(ரு)விதை
மிக்க நன்றி நண்பா ...
Deleteபயணம் வரை இனிதே இருந்தது...
ReplyDeleteபிறகு உங்களின் கேள்விகள் என் மனதிலும் எழுந்தது...
நல்லதொரு கவிதை...
நன்றி...
tm4
மிக்க நன்றி நண்பா ..
Delete#என் குளியலை நானே சந்தேகத்துடன் நினைத்துபார்க்க வைத்தது
ReplyDeleteஅவள் கூந்தல்,காற்றில் தெளித்த வாசனை !#
சில்லிட வைக்கும் வரிகள்...
அப்ப சில்லுன்னு ஒரு காதல் ~~~நன்றி சகோ
Deleteஒரு மூன்றுமணிநேர பயணமும் அதன் ஊடே வரும் காதலும் அருமை அழகு ரியாஸ்
ReplyDeleteமிக்க நன்றி சகோ ... மிக்க நன்றி
Deleteஇப்பதான் முதல் முறையாக உங்க தளத்துக்கு வந்து இருக்கேன் அப்படியே ஒரு ரவுண்ட் அடித்துட்டு வருகிறேன்
ReplyDeleteஇன்னுமா ரவுண்டு பண்ணுறீங்க ... முதல் வருகை நன்றி ...மீண்டும் வாங்க
Deleteநல்ல கவிதை அருமை
ReplyDeleteஉங்கள் தொடர் வருகை ..மிகுந்த மகிழ்ச்சி தருது ...மிக்க நன்றி
Deleteஅருமை தோழரே.... தொடரவும்
ReplyDeleteஎதிர்பார்ப்புகள் இல்லாமல் கிடைக்கும் .. பாராட்டுகள் சுகமே தனி ..நன்றி சகோ ..
Deleteகவிதை ரொம்ப நல்லாயிருக்கு.. சில வார்த்தை பிரயோகங்கள் கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
ReplyDeleteமுதல் வருகை மிகுந்த மகிழ்ச்சி தருகிறது ... மீண்டும் மீண்டும் வாங்க ... நிறை குறை சொல்லுங்க ...tq tq tq
Deleteஇது கற்பனைக்கதையா அல்லது உண்மையா ரியாஸ்???
ReplyDeleteகற்பனையே நம்புங்கள் ... ஹி ஹி ... உங்க திட்டமெல்லாம் தெரியும் ... உங்க சகோதரிக்கு தமிழ் தெரியாது அந்த தைரியத்தில் தான் இப்படி ஹி ஹி
ReplyDelete