11.23.2011

பெற்றதும் -பெயர் பெற்றதும்

இறைவன் அருளால் ,எங்களுக்கு இன்று பெண்குழந்தை பிறந்துள்ளது !


படத்தில் உள்ளது மாடல் குழந்தை 

என் மகளை கொஞ்சும் நேரம் குறைந்து விடுமோ
என்ற அச்சத்தில் பெண்குழந்தை சுக பிரசவம்
இரண்டே வார்த்தையில்  பதிலளித்தேன்
அனைவருக்கும்  தொலைபேசியில் !

இக்ரா முனாஜா (IQRA MUNAZZAH )
என பெயர் வைத்துள்ளோம் ...

இக்ரா என்னும் அரபு வார்த்தையில் இருந்து தான் குரான் என்னும் பெயர் வந்தது ....

மேலும் நபிகள் நாயகம் அவர்களுக்கு முதன் முதலில் ஓதி காட்ட பட்ட இறைவசனம் இக்ரா என்னும் வார்த்தையில் இருந்தே தொடங்கும்

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக . அல் -குரான் 96-1 

எனவே இக்ரா !!, இக்ரா  என்றால் படி/ஓது என்று பொருள் ...

எதை படிக்க சொல்லுறது சரி நிலையானதை/நீதியானத்தை/புனிதமானதை படிக்க சொல்லுவோம் என முனாஜா என பெயர் வைத்தோம் ...

ஆம் MUNAZZAH என்றால் நிலையான/புனிதமான/நீதி தவறாத என்று பொருள்.

கவிதையாய் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன் ...ஆனால் என் மகிழ்ச்சியில் தமிழ் தாய் கூட ஆனந்த கண்ணீர் தான் தந்தாள் வார்த்தைகள் தரவில்லை ...

19 comments:

 1. பெற்றோருக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)களும் பூந்தளிருக்கு மனம் நிறைந்த ஆசிகளும்.

  ReplyDelete
 2. இனிய வாழ்த்துகள் .....

  ReplyDelete
 3. மழழை செல்வம் மகத்தானது என்று தொடர்பதிவு வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகியிருக்கிறாய். வாழ்த்துக்கள்
  இக்ரா முனாஜாவிற்கு இந்த மாமனின் அன்பு முத்தங்கள். இனிமே நாம் இருவரும் சம்பந்தி..என்ன டீல் ஓக்கேயா?

  ReplyDelete
 4. இக்ரா முனாஜா அர்த்தமுள்ள பெயர் அழகாகவுள்ளது.. குழந்தை நல்ல முறையில் வளர அல்லாஹ் துணையிருப்பனாக..ஆமீன்

  ReplyDelete
 5. வாழ்த்துகள் ரியாஸ்.
  இக்ரா முனாஜா வுக்கு என் ஆசிகள்!

  ReplyDelete
 6. இனிய வாழ்த்துகள்... சகோ...

  ReplyDelete
 7. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 8. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  அல்ஹம்துலில்லாஹ்... சந்தோஷம் சகோ .வாழ்த்தக்கள்.மார்க்க அடிப்படையில் வளர என் துஆக்கள்.


  இக்ரா முனாஜா அர்த்தமுள்ள அருமையான பெயர்.

  ReplyDelete
 10. ஸலாம் சகோ.ரியாஸ்,
  அல்ஹம்துலில்லாஹ்.
  மகிழ்ச்சியான செய்தி.
  மாஷாஅல்லாஹ்.
  அர்த்தமுள்ள அழகிய பெயர். வாழ்த்துக்கள்.

  // இனிமே நாம் இருவரும் சம்பந்தி..என்ன டீல் ஓக்கேயா?//---இதென்ன..? பின்னூட்டத்திலேயே நிச்சயதார்த்தம் போல அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் ஆரம்பிக்குதே..?

  இன்ஷாஅல்லாஹ், நடக்கட்டும்...நடக்கட்டும்... :-)

  ReplyDelete
 11. வணக்கம் சகோதரா!
   என் இனிய நல் வாழ்த்துக்கள்!! 

  ReplyDelete
 12. தங்களுக்கும் தங்கள் பெண்
  குழந்தைக்கும் என் உளங்கனிந்த
  வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. பெற்றோருக்கும் புது குழந்தைக்கும் வாழ்த்துக்கள் ஆசிகள்.

  ReplyDelete
 14. வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல பல .... வலைக்கும் சலம் சகோதரர்களே

  ReplyDelete
 15. எங்களது மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. பெற்றோருக்கு இனிய வாழ்த்துகளும்

  மழ்லைக்கு மனம் நிறைந்த ஆசிகளும்.


  நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

  அன்பின் ரியாஸ்,

  அல்ஹம்துலில்லாஹ்.

  இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.


  வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் சகோ .உங்கள் செல்வ மகள் சீரும் சிறப்பும் பெற்று பார் போற்ற நீடுழி வாழ அவள் வருகையைக் கண்டு மனம் குளிர வாழ்த்துகின்றோம் .
  மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete