Tweet |
“ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்!” - கவிஞர் வாலி
8.29.2011
8.27.2011
அப்போது 'அப்பா’ என்று கலைஞரை அழைத்த அதே வாயால், இப்போது
கழுகார் பதில்கள் from விகடன்
அப்போதுக்கும் இப்போதுக்கும் இடையில் வந்த தேர்தல்தான் காரணம். இதற்குப் பெயர்தான் அரசியலப்பா
விரைவில் மீண்டும் வருகிறேன் அதை சொல்லவே
இப்படி அதிரடி தலைப்பும் காபியும் ...ஹி ஹி
Tweet |
8.19.2011
இன்றைய சூழ்நிலையில் தி.மு.க-வுக்கு நண்பன் யார் !!
எங்கெங்கோ படித்ததில் என் நெஞ்சை சுட்டவை ,அதனால் நான் சுட்டவை....
ஒரு கணிப்பு!
இந்தியாவில் இருக்கும் முக்கியமான தலித் சிந்தனையாளர்களில் ஒருவரான ஆனந்த் டெல்டும்ப்டே, 'அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்’ என்ற புத்தகம் எழுதி உள்ளார்.
'சுரண்டலற்ற, அநீதியற்ற, மோசடியில்லாத மனித சமூகத்தை உருவாக்குவதற்கு வழிவகை காணவேண்டும் என்ற அம்பேத்கரின் கனவு தற்போதைய தலித் இயக்கங்களில் அபூர்வமாகவே பிரதிபலிக்கிறது’ என்பதும் அவரது கணிப்பு!
ஷீலா மசூத்!ஓர் அதிர்ச்சி!
சுதந்திர தினத்துக்கு அடுத்த நாள் அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப் புறப்பட்ட சமூகப் போராளி ஷீலாவை, அவரது காரில் வைத்தே சுட்டுக் கொன்றுவிட்டார்கள். மத்திய பிரதேசத்தில் சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் சுரங்கத்தை எதிர்த்துப் போராடிய காரணத்தால் இவர் கொலை செய்யப்பட்டார் என்பது வெளிப்படையாகவே தெரிந்தாலும், 'கொலைக்கான காரணம் தெரியவில்லை’ என்று கை விரிக்கிறது, போலீஸ். இத்தனைக்கும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸில் ஏற்கெனவே புகார் தெரிவித்து இருக்கிறார். காடு, நீர்நிலைகளையும் லஞ்சத்தில் இருந்து நாட்டையும் காப்பாற்றப் புறப்பட்ட ஷீலாவைக் காப்பாற்ற நம் ஜனநாயகத்தால் முடியவில்லை. இந்தியாவெங்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு அநியாயத்தை எதிர்த்துப் போராடியவர்களில், 12-வது மரணம் ஷீலாவுடையது என்பது மேலும் அதிர்ச்சி!
வேதனையான நகைச்சுவை ..
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை எப்போது பார்த்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஐ.நா. சபைக்கு பேசப் போனவர் தான் படிக்க வேண்டியதை விட்டுவிட்டு இன்னொரு நாட்டு அமைச்சரது பேச்சைப் படித்தார். கடந்தவாரத்திலும் இலங்கை தொடர்பாக ஒரு அறிக்கையை இவர் தாக்கல் செய்ய வேண்டும். சபாநாயர் அழைத்தபிறகும் ரொம்ம்ம்ப நேரத்துக்கு அதையே தேடிக் கொண்டிருந்தார். 'சபையை அமைச்சர் அவமரியாதை செய்கிறார்’ என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிடும் அளவுக்கு தேடிக் கொண்டே இருந்தார். இதேமாதிரி அடுத்த சம்பவம்...
'பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் ராஜஸ்தான் சிறையில் இருக்கிறார். 80 வயதான அவரை விடுவிக்க வேண்டும்’ என்று ஒரு உறுப்பினர் கேட்டார். 'பாகிஸ்தான் சிறையில் இருக்கும் அவரை...’ என்று கிருஷ்ணா எதையோ சொல்ல ... குழம்பிப் போனார் கேள்வி கேட்டவர். மறுபடியும் அவர் கேட்க... இவர் சொன்னதையே திருப்பிச் சொல்ல கிடுகிடுத்துப் போனது சபை. மன்மோகன்தான் தலையிட்டு கிருஷ்ணா தலையைக் காப்பாற்றினார்.
இன்றைய சூழ்நிலையில் தி.மு.க-வுக்கு நண்பன் யார் !!
நல்ல வக்கீல்கள்!
Tweet |
8.17.2011
பிறந்த நாள் பரிசு சங்கு ஊஊஊ ....
ரஷ்யாவில் நடந்த உண்மை சம்பவம்.லயல டுபிகொவ (LYAYA TUPIKOVA) என்னும் பெண்ணுக்கு அன்று பிறந்த நாள்.எல்லா பெண்களை போலவே தன் கணவன் தன்னை முதலில் வாழ்த்த வேண்டும் அவன் கையில் இருந்து ஒரு ரோஜா பூவாவது பரிசாக கிடைக்க வேண்டும் என்று ஏங்கி காத்திருக்கிறாள் .
கணவன் வந்தவுடன் அவனுக்கு ஆச்சர்யம் கொடுக்க காண்டல் லைட் டின்னெர் (CANDLE LIGHT DINNER) {சத்தியமா இதை தமிழில் எப்படி சொல்லுறதுன்னு தெரியலை }கூட தயாராகிவிட்டது.
கணவன் கஹ்ல்பிக் (KHALPIK) என்ன காரணமோ தன் மனைவியின் பிறந்த நாளை மறந்து எதுவும் வாங்கி வராமல் வந்து சேருகிறார் வீட்டுக்கு.குளித்து விட்டு பசியுடன் உணவுக்கு காத்திருக்கையில்,தன் பிறந்த நாளை மறந்த கணவன் மீது ஆத்திரம் கொண்ட மனைவி அடுப்படியில் இருந்த பெரிய கத்தியுடன் வந்து நெஞ்சின் மேல் சதக் சதக் என குத்த அந்த இடத்திலேயே உயிர் பிரிகிறது.
கணவனுக்கு பிறந்த நாளில் சங்கு ஊதிவிட்டு கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார் மனைவி.
என்ன கொடுமை சார் இது ...
இது தேவையா ..பிறந்த நாள் என்பது நாம் மரணத்தை நெருங்கி விட்டோம் என்பதை நமக்கு ஞாபக படுத்தும் நாள்.அதில் எதுக்கு கொண்டாட்டம் ..இன்னைக்கு எத்துனை பேர் வீட்டுல பிறந்த நாளை கணவன் அல்லது மனைவி மறந்து விட்டதை எண்ணி வருந்துறோம் சலித்துகொல்கிறோம். அந்த நாளில் கொண்டாட்டங்களை தவிர்த்து நான் மரணத்தை மிகவும் நெருங்கிவிட்டேன் என எண்ணி நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பார்க்கும் ஒரு நாளாக மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே
இந்த செய்தி படித்ததும் தோணியது இது...
நான் மரணத்தை நெருங்கிவிட்டதை
கை தட்டி பாட்டு பாடி கேக் வெட்டி
கொண்டாடுகிறார்கள்,கேட்டால்
பிறந்தநாளாம் என்னை பெற்றவள்
மறுபிறவி எடுத்த நாள் அவளுக்கு
செய்ய வேண்டிய மரியாதைகள்
அத்துணையும் இன்று எனக்கு எதற்கு ?
அவள் முதியோர் இல்லத்தில் வாடையிலே!!
-ரியாஸ்
Tweet |
8.15.2011
துப்பாக்கி முனையில் யாஹு காப்பாற்றியது
Tweet |
8.14.2011
நடிகர் விஜய்யின் அரசியலுக்கு தேவையான பாடம்
முதலில் இந்த வீடியோ பாருங்கள்..ஏற்கனவே பார்த்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம் ..
ஒரு பிரஸ் மீட்டில் நடிகர் விஜய் இந்த மாதிரி கோப பட்டார்.ஏன் தனது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் தான் இப்படி பொறுமை இழந்தார். இத்துணைக்கும் இந்த தோல்விகளால் விஜய்க்கு எந்த பொருளாதார பிரச்சனைகளும் இல்லை, இருந்தும் பொறுமை இழந்தார்.
அப்ப சாமானிய மிடில் கிளாஸ் மக்கள் சந்திக்கும் பொருளாதார பிரட்சைனைகளால் விரக்தி அடைவதும் தடுமாறி தடம் மாறி ஏன் தற்கொலை வரை செல்வதிலும் என்ன ஆச்சிரியம் இருக்கு.
சரி இந்த நிலை மாற என்ன செய்யலாம்.உலகில் அனைவரையும் சமமாக அம்பானிகள் ஆக்கலாமா. சாத்தியமா இது .சாத்தியமில்லை அப்படியே சாத்தியம் என்றாலும் உலகம் இயங்குமா ?
அட கொஞ்சம் பொறுமையா படிங்க பாஸ். அதுதான் அதே தான் மனிதனின் இந்த பொறுமை தான் நடிகர் விஜய்க்கும் நம்ம எல்லோருக்கும் தேவையான
குணம்.இதை நான் சொல்லலை இறைவனின் வேதத்தில் எழுவதிற்கும் மேற்ப்பட்ட இடங்களில் பொறுமையை வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
அல்-குரான் 2-155
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.
அல்-குரான் 2-156
(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
அல்-குரான் 11-115
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது ? நான் தொட்டது ஏதும் தொலைங்க மாட்டேன்குதே ? இந்த மாதிரி கேள்விகளை தவிர்த்து விட்டு இது நமக்கு இறைவனின் சோதனை இதில் பொறுமை காத்தால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி நிச்சயம் தானே.
இன்னொரு செய்தி இப்படி பொறுமையை வலியுறுத்தும் மார்க்கத்திற்கு இன்று சில மீடியாக்கள் தீவிரவாத முத்திரை குத்த பார்ப்பது கொடுமை அல்லவா? அதையும் இறைவன் போதித்த பொறுமையுடன் சகித்துகொள்வோம் ,ஒரு நாள் திரை விலகி விடியட்டும் அவர்களுக்கு ..
அல்-குரான் 11-115
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது ? நான் தொட்டது ஏதும் தொலைங்க மாட்டேன்குதே ? இந்த மாதிரி கேள்விகளை தவிர்த்து விட்டு இது நமக்கு இறைவனின் சோதனை இதில் பொறுமை காத்தால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி நிச்சயம் தானே.
இன்னொரு செய்தி இப்படி பொறுமையை வலியுறுத்தும் மார்க்கத்திற்கு இன்று சில மீடியாக்கள் தீவிரவாத முத்திரை குத்த பார்ப்பது கொடுமை அல்லவா? அதையும் இறைவன் போதித்த பொறுமையுடன் சகித்துகொள்வோம் ,ஒரு நாள் திரை விலகி விடியட்டும் அவர்களுக்கு ..
அட தலைபிற்கு வருவோம்.இப்ப உள்ளாட்சி தேர்தலை சந்திக்க விரும்பும் நடிகர் விஜய்.பொது வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டிய குணம் பொறுமை என்பது சரிதானே..
நீங்க இந்த பதிவை முழுசா பொறுமையா படிச்சிங்களா இல்லையா ? வாக்களித்து உறுதி செய்யவும்.பொறுமை பற்றி உங்களுக்கு தெரிந்த குறள்கள்,பழமொழிகள் என அனைத்தும் பின்னூட்டத்தில் கூறி இந்த பதிவுக்கு வலுசேருங்கள்.
Tweet |
8.13.2011
கேட்டது ஆனா கேக்காதது , கேட்டவர்கள்
இந்த வீடியோ மூன்று மாதங்களுக்கு முன் என் கண்ணில் பட்டது.கேட்டதும் மிகவும் ரசித்தேன்.நாம் பல முறை கேட்ட வந்தே மாதிரம் பாடல் தான் இது ஆனா எந்த வித வாத்தியங்களின் துணையும் இல்லாமல் அசத்தலான கோரஸ் மற்றும் வசீகரமான ரஹ்மானின் குரல் என கண்ணில் ஆனந்த கண்ணீர் வர செய்யும் பாடலாக இதோ தவறாமல் கேளுங்க ...இறுதியில் மட்டும் தான் ரஹ்மான் பியானோ வாசிப்பார் அதை சொல்லி என்னை திட்ட கூடாது |
அனைவருக்கும் சுகந்திர தின அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ...
சுகந்திர நாளில் பகிர பத்திரமாய் பாதுகாத்த வீடியோ கருத்தும் வோட்டும் எனக்கே எனக்கு !!!!!
இந்த பாட்டு கேட்டது ஆனா கேக்காதது ,ஏற்கனவே கேட்டவர்கள் மன்னிக்கவும் ஹி ஹி, நீங்க மன்னித்ததை ஒட்டு போட்டு உறுதிசெய்யவும்
Tweet |
8.12.2011
வாய்மையே வெல்லும் -வெல்லுமா AR. ரஹ்மான்

A.R .ரஹ்மான் சூப்பர் கேவி என்னும் ஆல்பத்தில் பல சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து பாடியுள்ள ஒரு பாடல் சத்யமேவ ஜெயதே என்பதாகும்.அதன் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் ..
ரெண்டு நாள் முன்னாடி ரேடியோ மிர்ச்சியில் இந்த முழு பாடல் ஒலிபரப்ப பட்டதாமே யாரவது கேட்டீங்களா நல்லா இருந்ததா ...வாய்மையே வெல்லும் என்று ஹை பிட்சுல சொல்லுறாரே ரஹ்மான் இந்த பாடல் வெல்லுமா ???
Tweet |
8.11.2011
எட்டாவது வள்ளல் -(அரவணைப்போம்- 1)
ஜகாத் = தானங்கள்
“இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:110)
நீங்கள் தான் இவருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதில்லை. என்னைப் போல இந்தத் தகவலை பகிர்ந்தாலே போதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவராவது உதவக்கூடும்.
இணையத்தில் எத்தனை மணித்தியாலங்களைச் செலவழிக்கிறோம் சில நிமிடங்களை இதற்கும் செலவழியுங்களேன். ஒவ்வொருத்தரும் 10 பேருக்காவது பகிர்ந்தாலே போதும். நீங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவரானால் மாதத்தில் ஒரு வேளை தேநீரை இவர்களுக்குக் கொடுத்தாலே போதும் உறவுகளே...
இந்தத் திட்டத்தில் இதுவரை 5 பேர் பயன்பெற்றிருப்பது மிகவும் சந்தோசமான சேய்தியாகும்.
பெயர்- தியாகராசா சந்திரகுமார்
பிறப்பு- 01.02.1967
முகவரி- 18 a/2 முத்து விநாயகபுரம்,
முத்தையன்கட்டு,
ஒட்டிசுட்டான்
குடும்பம்- மணமானவர்
இரண்டு பிள்ளைகள் உண்டு
லதுசியா (9 வயது)
தனுப்பிரியன் (5 வயது)
குடும்ப வருமானம்- தோட்டம் (மனைவி மூலம்)
பாதிப்பு- முள்ளந்தண்டில் ஏற்பட்ட காயம் (2006 ல்) காரணமாக இடுப்பின் கீழ் இயங்கா நிலையும். அதனால் எற்பட்டுள்ள பெரும் படுக்கைப் புண்ணும் ஆகும்.
தற்போதைய இவர் செலவுகள்-
மாதந்த மருத்துவச் செலவு (12,000 விற்கு மேல்)
குடும்பச் செலவு 12,000
பரிந்துரைப்பது- மருத்துவச் செலவிற்கான வசதியின்மையால் தீவீர நோய்த் தொற்றுக்க அளாகி அவதிப்படகிறார். இவருக்கான மருத்தவச் செலவையொ அல்லத குடும்பச் செலவையோ பகுதியாகவென்றாலும் ஒரு குழு பொறுப்பேற்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.
Name- Thiyakaraja santhirakumar
Date of birth- 01/02/1977
Address- 18a/2 muththu vinayagarpuram,
Muththaijankaddu,
Oddisuddan.
Married person and 2 children
Name- lathusiya 9 years old.
Thanuprijan 5 years old.
Family incoming – wife is a farmer.
Affect- injury on spinal cord. (2006)
Medical treatment -12000/=
family budget - 12000/=
suggest for this perso- he's dont take the treatment. so many affected by infection of bedsore.
இது ஒரு சிறிய சமூக சேவையாகும் இதற்கு அரசியல் ரீதியாக எந்தவித அழுத்தமும் இருக்காது காரணம் இது தனிப்பட்ட மனிதரின் நடவடிக்கையாகும். அதே போல் இங்கு முதலில் அவர்களின் தொலை பேசி இலக்கம் வழங்கப்படமாட்டாது காரணம் தவறான பயன்பாட்டுக்கு ஆளாக்கலாம் அதனால் உதவ முன்வருவோருக்கு மட்டுமே அழிக்கப்படும். அதே போல் அவர்களுக்கான தேவையை நாம் பகிரங்கமாக அறிவிப்போம் நீங்கள் முடிந்ததை செய்யலாம் எவ்வளவு செய்கிறோம் என எமக்கு தெரியத்தரத் தேவையில்லை ஆனால் கட்டாயமான விடயம் என்ன வென்றால் யாருக்குச் செய்கிறோம் என்பதை அறியத் தரவும் காரணம் உதவிகள் எல்லோருக்கும் சமனாகக்கிடைக்க வேண்டும்.
தொடர்புக்கு- mathisutha56@gmail.com
எழுத்து வழித் தொடர்புகளே பெரிதும் விரும்பப்படுகிறது.
நன்றிச் செதுக்கலுடன்..
அன்புச் சகோதரன்.
ம.தி.சுதா
நன்றி - நண்பர் ம.தி.சுதா அவர்கள்
Tweet |
1,78,10,00,00,000!!!!!!!!!!!!!???????
''2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விவகாரத்தில், அனைத்துத் தகவல்களையும் விசாரணை அமைப்புகளிடம் கூறிவிட்டோம். தூசு மற்றும் புழுதி அடங்கிய பிறகு, உண்மை தெளிவாக வெளிப்படும்!''
(டவுட்டு :மீண்டும் எவ்வளவு கொடுத்து இருக்கீங்க)
- ரத்தன் டாடா
''தி.மு.க. ஆட்சியில் நாம் கொடுத்த தொல்லை தாங்காமல் கருணாநிதி, தொலைந்து போ என்றதால், வெளியேறினோம்!''
(டவுட்டு:ஹி ஹி ... அவருக்கும் புத்தியில்லை,உமக்கும் வேலையில்ல )
- ராமதாஸ்
''நாக்கு வழிக்கக்கூடப் பயன்படாத பதவி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி!''
(டவுட்டு: அந்த அளவுக்கா வருமானம் குறைந்து போச்சு )
- திருமாவளவன்
''தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேவை இல்லாமல் என்னைப்பற்றி விமர்சித்துவருகிறார். உடனே நிறுத்திக்கொள்ளவில்லை என்றால், காங்கிரஸாரே அவர் மீது நில அபகரிப்புப் புகார் கொடுப்பார்கள்!''
(டவுட்டு: அட ஆசிட் ,ஆட்டோ இப்ப இதுவா பேஷ் பேஷ்)
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
''சமச்சீர்க் கல்விப் பிரச்னையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கோபமும் அ.தி.மு.க. அரசின் மீது திரும்பி உள்ளதை முதல்வர் உணரவில்லை. அரசின் வீண் பிடிவாதம் தொடர்வதையே, நிதிநிலை அறிக்கை காட்டுகிறது!''
(சுனாபானா அப்படியே மெயின்டையின் பண்ணு நாலு பேரு இன்னும் நம்புறான் )
- வைகோ
1,78,10,00,00,000ரூபாய் வருவாய் எதிர்பார்க்கபடுகிறது டாஸ்மாக் மதுபான விற்பனையின் மூலம் .....
டவுட்டு:இது காந்தி பிறந்த மண் தானே
Tweet |
8.09.2011
ரஜினி கமல் சேர்ந்து நடிக்க போகும் கதை.
எந்த ஒரு படைப்புக்கும் ஒரு இன்ஸ்பிரேசன் இருப்பது தவறு இல்லை அப்பட்டமாக ஈ அடிச்சான் காப்பி தான் தவறு.அந்த அடிப்படையில் மிக சிறிய இன்ஸ்பிரேசனில் என்னிடம் ஒரு கதை இருக்கு. நான் ஆங்கில படங்கள் பார்ப்பது மிக மிக அரிது இது நிச்சயம் தழுவல் அல்ல நண்பர்களே நம்புங்க ...
சினிமா மரபுகள் படி இரண்டு கில்லாடியான சி பி ஐ ஆபிசர்கள். இருவருக்கும் ஒரு மைனஸ் பாயிண்ட் இருக்கு அது என்னான்னா ஒருத்தருக்கு ஞாபக மறதி அது தான் சூப்பர் ஸ்டார் (தர்மத்தின் தலைவன் ) மற்றவர் கொஞ்சம் பெண்கள் விசயத்தில் வீக் (இதை வீக்நெஸ்ன்னு எவன்யா சொன்னது ) அது தான் நம்ம உலக நாயகன்.
நம்ம நாட்டுக்கு எல்லைதாண்டிய எதிரிகளில் முக்கியமான சீனா இந்தியாவில் ஒரு மிக பெரிய நாச வேலையை செய்ய திட்டம் தீட்டுது அதற்க்கு துணையா
நம்ம எதிரி நாடுகள் எல்லாம் கை கொர்குது. இதை தலைமை ஏற்று செய்ய
போறது ஒரு இந்தியன் தான். அவன் யார் ? அவர்களின் திட்டம் என்ன ? என்பதை கண்டுபிடிக்க ரஜினியும் கமலும் நியமிக்க படுறாங்க.
![]() |
எனக்கு இந்த காமெடி சீன் ரொம்ப பிடிச்சிருக்கு |
நம்ம சிபி அண்ணன் கிட்ட பல்பு வாங்கதா அளவுக்கு விறு விறு திரைக்கதை ரெடி.கதையில் காமேடிக்ன்னு தனி ட்ராக் கிடையாது ஆனால் அதற்க்கு பஞ்சமும் இருக்காது அதை மேலே சொன்ன நாயகர்களின் வீக்நெஸ் மூலமா சமன் செய்துடுறோம் .
படத்தில் ஒவ்வொரு பிரமிளும் ரஜினி கமல் இருவரும் இருப்பார்கள்.ஒரே ஒரு
பாடல் அதில் இருவரின் ரசிகர்களும் துள்ளி மகிழ்வார்கள்.
வில்லன் இறுதியில் அதாவது கிளைமாக்சில் தான் முகம் காட்டுவார் அது மிரட்டலான காட்சியாக இருக்கும்.அந்த வில்லன் வேடம் அமிதாப் பச்சன் நடிக்க விரும்பினால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
![]() |
நான் அமிதாப் ஜியை கூட்டிட்டு வாறேன் ஓகே |
இதை சுவாரசியமான திரைகதையின் மூலம் அழகு சேர்த்துள்ளேன். அதையும் இங்கே பகிர்ந்தால் என்னன்னு கேக்குறீங்களா ? ஆசை தோசை அப்பள வடை .ஓகே ஓகே படத்துக்கு ட்ரைலர் மாதிரி ஒரு வசனத்தை உங்களுடன் பகிர்ந்துக்குறேன் ..
ரஜினி:என்ன என்ன என்ன நடக்குது. பல உயிர்களை காக்க தான் இந்த ஆபரேஷன்ல நாம இருக்கோம் ஆனா இதில நம்ம எத்தன உயிர்களை இழந்துட்டோம். யார் இதை செய்யுறது அவங்க அரசியல் பணத்தாசை இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா.இவனுங்களை நிர்வாணமா நிக்க வைச்சு பப்ளிக் முன்னாடி சுட்டு கொல்லனும்
கமல்: ம்ம் அப்படி செஞ்சா அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
ரஜினி:என்ன சொல்ற நீ.இவங்க எல்லாம் மிருகங்கள் வேட்டையாடினா தப்பு இல்லை .
கமல்:மிருகங்களை வேட்டை ஆடுவதும் தப்புன்னு சொல்ற காலத்தில இருக்கோம். நம்ம இவனுகளை தேடி பிடிச்சு கைது பண்ணினாலோ இல்ல என்கவுண்டர் பண்ணினாலோ.நாளைக்கு இவனுகளை தலைவன்னும் தியாகின்னும் ஒரு கூட்டம் நம்பி மறுபடியும் இதே வழியில் இதே தப்பை செய்வாங்க.நம்மள மாதிரி அவனுங்களை தேடிகிட்டு நாளைக்கு நம்ம பேரன்களும் வருவாங்க .இது தொடர்கதை!.இதுக்கு தீர்வு, நான் இல்லைன்னு சொல்ற நீ இருக்குன்னு நம்புற கடவுள் தான் சொல்லணும்
இதுக்கு பதிலாக ரஜினி சார் சொல்லுற டயலாக் ரொம்ப புரட்சிகரமா இருக்கும் .
![]() |
உங்ககிட்டயாவது சம்பளம் பத்தி ஏதும் சொன்னானா ? |
இதுக்கு இன்ஸ்பிரேசன் எதுன்னு கேட்டா.நான் பார்த்த படங்கள் எல்லாமேன்னு சொல்லுவேன்.சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் கூப்புட்டா போய் திரைகதையை காட்டி ஒரு பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைக்கலாம்... சரி கதை சரியா வருமா ? உங்கள் கருத்தையும் வாக்குகளையும் எதிர்பார்கிறேன் ..
Tweet |
8.07.2011
ர ஜி னி VS ஷாருக்கான் &A.R. ரஹ்மான்
சில பல வருடங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் தனது திருமணம் பற்றி அறிவிக்க ஒரு ப்ரெஸ் மீட் வைத்தார்.அதில் யாரும் தனது திருமணதிற்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.அப்போது கோபம் கொண்ட பத்திரிக்கையாளர் ஒருவர் மீறி வந்தால் என்ன செய்விர்கள் என்றார்.அதற்கு
ரஜினி "I WILL SHOOT YOU" என்று பதில் அளித்தார் .இது அப்போ பெரிய சர்ச்சை ஆனது பின்பு ரஜினி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.
இப்படி புகழின் உச்சியில் இருந்த போது சறுக்கிய ரஜினி பின்னாளில் பக்குவம் அடைந்து இன்று பலருக்கு உதாரணமாக வாழ்த்து வருகிறார்.
அதே போல் சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கான் மலேசியாவில் ஒரு ப்ரெஸ் மீட்டிற்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார்.வந்தவர் நாகரிகமாக மன்னிப்பு கூட கேட்க்காமல் அமர்ந்தார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிருபர்களிடம் "YOU ARE PAID FOR IT ,WHY SHOULD I " என்றார். பின்பு சர்ச்சையாகி அவரும் மன்னிப்பு கேட்டார்.
ஷாருக் இன்று வரை தொடர்ந்து இந்த மாதிரி பிரச்சனைகளில் சிக்கி வருகிறார் .
இத சொல்லுற நான் மாட்டும் ஒழுங்கா ரெண்டு நாள் முன்னாடி ஹிட்ஸ்க்கு ஆசைப்பட்டு ஒரு பொல்லாத தலைப்பு வைத்து குட்டு வாங்கினேன்.
புகழ் என்னும் போதை படுத்தும் பாடு தான் இது.வெற்றிகள் வரும் போது நாம் செய்வது எல்லாம் சரியாக தான் இருக்கும் என நினைத்து நாம் எல்லோருமே பாதாளத்தில் விழுந்து விட கூடிய அபாயம் இருக்கிறது. இதற்க்கு உதாரணங்கள் பல உலக வரலாற்றில் உண்டு. அதே போல விதிவிலக்கும் உண்டு .
உதாரணமாக நம்ம ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் . தன் முதல் படத்திற்கே தேசிய விருது வாங்கிய போதும் சரி இப்போ ஆஸ்கர் வாங்கிய போதும் சரி அவர் சொன்னது " எல்லா புகழும் இறைவனுக்கே " என்பது தான். இதை பற்றி
டைரக்டர் ஷங்கர் ஒரு பேட்டியில் "ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியதை விட ,அதை ஏற்று கொண்ட பக்குவம் தான் ஆச்சிரியம் அளிக்கிறது" என்றார்.
இந்த நிலையை நாம் அனைவரும் பெற என்ன செய்யணும். வெற்றி எனக்கு இறைவனால் நாடப்பட்ட ஒன்று எனவும் என் முயற்சிக்கு இறைவன் தந்த பரிசு என்றும் எண்ணம் கொள்ளுதல் வேண்டும்.அப்படி நினைத்தால் நான் கர்வம், பெருமை, திமிர் போன்ற குணங்களில் தீங்கில் இருந்து தப்பிக்கலாம் . இதை நம் மனதில் நிறுத்தி கொள்ளவே இறைவன் விதியை படைத்தான் என கூறுகிறது இறைவனின் வேதம்
" உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தி உள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்."
அல்குர்ஆன் 57:23எனவே நண்பர்களே சகோதர சகோதரிகளே வாங்க உழைப்போம் உயர்வோம்
பிறருக்கு உதவுவோம் ஆனால் தற்பெருமை புகழ் என்னும் போதைகளை விட்டு விடுவோம்.இந்த பதிவை உங்களோடு பகிர்வதன் மூலம் நான் பயன் பெறுவேன் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.நன்றி
குறிப்பு:
மேலே குறிப்பிட்ட பிரபலங்களும் அவர்கள் சம்பந்தப்பட்ட உண்மை சம்பவங்களும் பிரச்சார நெடி இல்லாமல் சுவாரசியமாக எழுதுவதற்காக மட்டுமே. அவர்களின் தனிப்பட்ட அல்லது ஆன்மீக வாழ்க்கை சரி என்றோ தவறு என்றோ கூறுவது எமது நோக்கம் அல்ல.
Tweet |
8.06.2011
சாக்லேட்டு கேட்டு உண்ணாவிரதம் இருக்கும் மீனா !!
சீ லைப் லண்டன் அக்வாரியம் (Sea Life London Aquarium ) என்னும் மீன் பண்ணையில் கௌரமி என்னும் மீன் வகையை சேர்ந்த நான்கு கிலோ நாற்ப்பது செண்டி மீட்டர் நீலமும் உள்ள மீன் ஒன்று அதற்கு கொடுத்த உணவு எதையும் உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்தது , ஏன் என்று தெரியாமல் மீன் பண்ணையில் குழம்பினார்கள்.
சாக்லேட்டுகள் தவிர வேறு எதையும் அந்த மீனின் முன்னாள் சொந்தக்காரர்கள் அதற்க்கு கொடுத்ததில்லை என விசாரணையில் தெரிந்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த மீன் இப்போ ஆரோக்கியமா தான் இருக்கு ஆனா தொடர்ந்து இப்படியே சாக்லேட்டே கொடுத்தால் அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் இப்போ அந்த மீனுக்கு கிட் காட் சாக்லேட்டுடன் திராட்ச்சை பழம் கொடுத்து வருகிறாகள்.ஆம் இந்த வகை மீன்கள் பழங்கள் மட்டுமே உண்ணும்.
இதற்கு முன்பு மீனுக்கு சாக்லேட்டு கொடுத்த கதை நாங்கள் எங்குமே கேள்விப்பட்டது இல்லை தவிர இந்த மாதிரி உணவளிப்பது வரவேற்க்கதக்கதும் இல்லை என்கிறார் இந்த மீன் பண்ணையின் நிர்வாகி .
Tweet |
8.05.2011
மேயர் டு முதல்வர்!! சரிதான் கணக்கு
பிம்ப்ரி -சிஞ்ச்வாத் என்னும் நகரத்தின் (புனே மாநிலம் )மேயர் யோகேஷ் பெஹ்ல் ஆஷி பாசலி நான்சி என்னும் மராத்தி படத்தில் முதலமைச்சராக நடித்து வருகிறார்.நேற்று அவர் நடித்த காட்சிகள் படமாக்க பட்டது.முதல்வர் ஒரு பொது கூட்டத்தில் பேசுவது போன்ற காட்சியில் நடித்தார்.
மேயரின் கதாப்பாத்திரத்தின் பெயர் யோகேஷ் டாடா பவர்.இது தனது அரசியல்
வாழ்க்கையின் குருவான புனேயின் துணை முதல்வர் அஜீத் டாடா பவரின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது.
மேயர் நடித்த காட்சிகள் பெரும்பாலும் இரவில் படம்பிடிக்க பட்டது.அவர் இப்படி ஒரு கண்ணியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க சிரமப்பட்டேன்.ஆனால் இருபது வருடமாக பொது வாழ்கையில் இருப்பதால் பெரும் கூட்டத்தின் முன்பு பேசி நடிக்க பெரிய சிரமம் படவில்லை என்கிறார் பெஹ்ல்.
இந்த படத்தின் டைரக்டர் மேயர் புகழ்த்து தள்ளுறார்.எல்லா காட்சியும் ஒரே டேக்குல ஓகே பண்ணினாராம்.
தமிழ் நாட்டு கனவு படி மேயர் டு முதல்வர் சரியான கணக்கு தான் என்கிறேன் நான் ...நீங்க என்ன சொல்லுரிங்க ....
Tweet |
8.04.2011
பிரபல நடிகர் கார் விபத்தில் காயம்
MR.BEAN புகழ் நடிகர் ரோவன் அட்கின்சன் நேற்று இரவு காரில் சென்றுகொண்டு இருக்கும் பொது நிலை தடுமாறி விபத்துக்குள்ளானார்.அவருக்கு தோல் பட்டையில் சிறிய காயம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவர் கார் ரேஸ் பிரியர் என்பது குறிபிடத்தக்கது.தனது ரேஸ் காரில் அதி வேகத்தில் சென்றபோது நிலை தடுமாறி விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பலரை சிரிக்க வாய்த்த நடிகர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறோம்.
சாலையில் மிதமான வேகமே சிறந்தது நமக்கும் மற்றவர்களுக்கும்.
குறிப்பு :::
நேற்றைய பதிவு பலரின் மனதை காயபடுத்தி இருப்பதை அறிந்து வருந்தி அதை நீக்கி விட்டேன் .... இனி இந்த தவறு நடக்காது ...தங்கள் பின்னூட்டங்கள் மூலமும் மைனஸ் வோட்டுகள் மூலமும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தவர்களுக்கு நன்றி.
பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் தனது தவறான புரிதலை கொண்டு சாடியிருந்தது மட்டும் வருத்தம் அளிக்கிறது.
Tweet |
8.02.2011
அதுக்கு பயிற்சியா எதுக்கு ?
நண்பர்களே
சகோதர சகோதரிகளே
உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் இந்த மாதம் விரதம் இருப்பது உங்கள் நண்பர்கள் அண்டை வீட்டார்கள் மூலம் அறிந்து இருப்பீர்கள்.
அவங்க ஏன் இப்படி பட்டினி கிடக்கனும்?
ராத்திரி பூரா FULL கட்டு கட்டிட்டு காலையில விரதமா நல்ல கதை ?
இப்படி பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம் அதை எடுத்து சொல்லி
நன்மையை கொள்ளை அடிக்க சித்தம் இன்று ...
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறைவனின் கட்டளையின் அடிபடையில தான் முஸ்லிம்கள் விரதம் இருக்கிறார்கலாம் .அதாவது சூரியன் உதயாமாகியது முதல் (அட தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு எல்லாம் வரலை நல்லா படிங்க ) உண்ணாமல் பருகாமல் இருப்பார்கள் சூரியன் அஸ்தமனம் ஆகும் வரை.சரி அப்ப ராத்திரியில FULL கட்டு கட்டிட்டு கவுந்து படுத்துருவாங்கலான்னா ? இல்லையாம் .. இந்த மாதம் முடிந்த வரை தூங்காமல் விழித்து இருந்து தொழுகையில் ஈடுபடுவான்கலாம் .
ஏன் ?
இந்த மனித வாழ்க்கை ஒரு பரிட்ச்சை என்றும் அதில் பாஸ் பண்ணுனா சுவர்க்கம் பெயில் ஆனா நரகம் என்றும் முஸ்லிம்கள் நம்புறாங்க.பாஸ் பண்ணுறதுக்கு நம்மை படைத்த இறைவன் ஒருவனே என்றும் அவனோட வேதம் உண்மைன்னும் நம்பி தன் விருப்பங்களை இறைவனிடம் சமர்பிக்கணும் நல்லவனா வாழனும் பொய் சொல்லாம , திருடாமல், அளவு நிறுவைகளில் வியாபாரத்தில் நேர்மையா இருந்து ,அடுத்தவுங்க சொத்தை அபகரிக்காமல்,எந்த அப்பாவி உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழனும்.இறைவனை தொழுது வணங்கி வரணும் அப்ப தான் நீங்க பாஸ்
இப்படி செய்ய சொல்லுறதுல அவங்க அல்லாவுக்கு என்ன பயன் ?
நம்முடைய வணக்கங்கள் விரதங்கள் மூலம் இறைவனுக்கு ஒரு பயனும் இல்லையாம் .ஆனா இது மனிதனுக்கு ஒரு பயிற்சியாம் ஒரு வருடத்திற்கு ஒழுக்கமாய் இறைவனின் கட்டளைகளை பின்பற்றி வாழ ஒரு மாத பயிற்சியாம்,அதுக்கும் நமக்கு அதிகமான பலன்களை அள்ளி தருகிறானாம் இறைவன்.
நம்முடைய வணக்கங்கள் விரதங்கள் மூலம் இறைவனுக்கு ஒரு பயனும் இல்லையாம் .ஆனா இது மனிதனுக்கு ஒரு பயிற்சியாம் ஒரு வருடத்திற்கு ஒழுக்கமாய் இறைவனின் கட்டளைகளை பின்பற்றி வாழ ஒரு மாத பயிற்சியாம்,அதுக்கும் நமக்கு அதிகமான பலன்களை அள்ளி தருகிறானாம் இறைவன்.
ஒரு நாளின் ஒழுக்கத்திற்கு ஐந்து வேலை தொழுகையும்,அடுத்து வரும் ஒரு வருட ஒழுக்கமான வாழ்வுக்கு இந்த நோன்பும் மனிதனுக்கு பெரிய உதவி செய்யுறதா மனோத்தத்துவ ஆய்வுகள் கூறுதாம்.
இப்படி நல்லதே போதிக்குற மார்க்கத்துக்கு சில கருப்பு ஆடுகளால் கெட்ட பேர் ,அவங்க கூட இந்த ரமலான் மாசத்தை பயன் படுத்தி திருந்தி வாழ இது ஒரு வாய்ப்பாம்.
எப்படி ?
இப்போ சில புகை பிடிக்கும் நபர்கள் கூட இந்த ஒரு மாத நேரத்தில் பக்தி முத்தி புகை பிடிபிப்பதை நிறுத்திடு வாங்க ,அதை அப்படியே தொடர்ந்தால் யாருக்கு நல்லது யோசிச்சு பாருங்க. இப்படி எல்லா கெட்ட பழக்கத்துக்கும் குட் பை சொல்லாமாம் ..
பொதுவா ஒரு மொபைல் போன் சார்ஜ் இல்லாமல் போறமாதிரி மனுசனுக்கும் தன் ஆன்மிகத்தில் சார்ஜ் குறைய வாய்ப்பு உண்டு அதில் இருந்து மீண்டு கொஞ்சம் சார்ஜ் இப்படி வருசா வருஷம் எத்திக்கலாமாம் ...
பொதுவா ஒரு மொபைல் போன் சார்ஜ் இல்லாமல் போறமாதிரி மனுசனுக்கும் தன் ஆன்மிகத்தில் சார்ஜ் குறைய வாய்ப்பு உண்டு அதில் இருந்து மீண்டு கொஞ்சம் சார்ஜ் இப்படி வருசா வருஷம் எத்திக்கலாமாம் ...
அப்படின்னா இந்த பயிற்சி காலத்தில இருக்குற எல்லா நண்பர்களும் நோன்பு நோற்று அதன் பயனை முழுமையா பெறுவதற்கு வாழ்த்துக்கள் கூறிட்டு ஆபீட்டு ஆயிடுவோம் சரியா
கடைசியா ஒரு பிட்டு :
உங்களுக்கு இந்த இனிய மார்க்கம் பற்றிய சந்தேகங்கள் ஏதும் இருந்தால் என்னை மாதிரி அரைவேக்காடு கிட்ட கேக்காம , நீங்க வேணும்னா இந்த வலைப்பக்கம் போய் உங்கள் எல்லா சந்தேக்களையும் தெரிந்து கொள்ளலாம்,ஏன் பட்டமே கூட வாங்கலாம் எல்லாம் இலவசமே.
உலகத்துலேயே அதிகமான மக்கள் தப்பா புரிந்து கொண்ட ஒரு மார்க்கம் இஸ்லாம் அதை மாற்றுவோம் வாங்க
Tweet |
8.01.2011
சச்சின் 100 வருமா வராதா + ஓர் அதிர்ச்சி
ஒவ்வொரு போட்டியிலும் எதாவது ஒரு சாதனை படைக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு நேற்று இங்கிலாந்தில் தோல்வியில் முடிந்த டெஸ்ட் போட்டி நூறாவது டெஸ்ட் போட்டி.தப்பா சொல்லவில்லை அதாவது இந்தியாவுக்கு வெளியில விளையாடும் நூறாவது டெஸ்ட் போட்டி.சரியா இப்போ.....இந்தியாவுக்கு வெளியில ஆடிய நூறு போட்டிகளில் சச்சினின் சராசரி 56.52 ஆகும்.டெஸ்ட் போட்டியில் அதிக பட்சமாக 248 ஓட்டங்களை பங்களாதேஷுக்கு எதிராக தாக்காவில் அடித்த சச்சின் ,தனது 51 டெஸ்ட் சதங்களில் 29தை வெளிநாடுகளில் தான் அடித்துள்ளார்.
மொத்தமா 179 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளதும் கூட சாதனை தான்...
சச்சின் 100 அடிப்பாரா மாட்டாரா என்பது தான் இன்னைக்கு மில்லியன் டாலர் கேள்வி? உங்களுக்கு ஒன்னு தெரியுமா? 453 ஒருநாள் போட்டிகளில் 48 சதங்கள் அடித்த சச்சின் தனது முதல் 79 ஆட்டங்கள் வரை சதம் அடிக்கவில்லை.அதேசமயம் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.அது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ,வாகர் யூனுஸின் பந்துவீச்சில் ஒரு பந்து சச்சினின் வாயில் பட்டு ரத்தம் வழிந்தது. அதை பொருட்படுத்தாமல் பதினாறு வயதான இளம் கன்று சதம் அடித்ததை யார் மறக்க முடியும்.
சச்சின் இந்த போட்டியிலே சதம் அடிப்பார் என்று நம்பி ஏமாந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். நான் கொஞ்சம் அதிகமாவே ஏமாந்தேன் ஏன்னா சச்சினின் சதத்தோடு எனது நூறாவது பதிவையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு தயார் செய்த பதிவு இது ....ஏங்க நானே 100 அடித்துவிட்டேன் சச்சின் அடிக்க மாட்டாரா .நிச்சயம் அந்த சாதனை சச்சின் மட்டுமே செய்வார் விரைவில் செய்ய வாழ்த்துக்கள் ...
அப்படியா நீ என்ன உருப்படியா எழுதி கிழித்தாய்ன்னு கேட்டா பதில் ஒன்னுமில்லைன்னு தான் வருது. என்னைக்காவது நல்லா எழுத ஒரு பயிற்சி , ஒரு தேடல் என எல்லாமே உங்களோட பகிந்து வருகிறேன்னு சொல்ல ஆசைபடுகிறேன். என்னை தொடரும் 57 நண்பர்களுக்கும், இந்த நூறு பதிவில் ஒரு லட்சம் ஹிட்சுக்கு காரணமான திரட்டிகளுக்கும் நன்றி ...
என் எழுத்தால் யார் மனமாவது புண்பட்டு இருந்தால் இந்த வேளையில் மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன் ....
நூறுல பல பேர் பாராட்டியதும் ,கொஞ்சம் மன நிறைவு அளித்தவையும்
ம்ம்கும் இவளவுதான் தேருது இதுவும் உங்கள் அன்பும் ஆதரவினாலும் மட்டுமே சாத்தியம் ஆனது ....நன்றி நன்றி ...
Tweet |
இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை எம்பிக்கள்:பரபரப்பு வீடியோ
மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமன் ராஜபக்சே உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இலங்கை எம்பிக்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தம்பிதுரை எம்பி தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், போர்க்குற்றம் சாட்சியில் சிக்கியிருக்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.
உறுப்பினர்களின் எதிர்ப்பால் சபாநாயகர் மீராகுமாரால் உரையை வாசிக்க முடியவில்லை. விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாச்சாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.
Tweet |
Subscribe to:
Posts (Atom)