
அழகுக்கு அர்த்தம் தந்தவள்
அறிவுக்கு மோட்சம் கொடுத்தவள்
சிரிப்பொலியை கவிதையாக்கினாள்
அழுகையை இசையாக்கினாள்
சேட்டைகளையும் ரசிக்க வைக்கிறாள்
நடை பயில என் கைகோர்கிறாள்
உன் சின்ன மடியில் தலைவைத்து
படுக்கும் போதெல்லாம் செத்துவிட
தோணுதடி செல்ல மகளே !
இந்த கவிதையில் புதுமைகள் ஏதுமில்லை
நீ கருபொருளானதை தவிர !
இப்படி நாங்கள் கொட்டும் அன்பை
திருப்பி தருவது என்பது மட்டும்
மகளே உன் சமத்து !
| Tweet |
