கதை :
சர்வைவல்க்காக பாதிரியாராக நினைக்கும் ஒருவன் (அர்ஜுன்), ஆத்மார்த்தமாக பாதிரியாராக விரும்பும் ஒருவன் (அரவிந்த் சாமி). அர்ஜுன் சோக்காளி கெட்டிக்காரன் ஒரு தவறு செய்ய ,அதை அரவிந்த்சாமி தெரிந்து போட்டு கொடுக்க அர்ஜுன் அவமானத்துடன் அங்கிருந்து வெளியேறும் போது அரவிந்தசாமியை பழிவாங்குவாதாக சபதம் ஏற்கிறார் .
பாதிரியாராக வேலை செய்யும் அரவிந்த் சாமி ஒரு அனாதை சிறுவனை நல்வழிபடுத்தி அவனுக்கு கார்டியானாகிறார்,அர்ஜுன் அரவிந்த்சாமியை நினைத்த படி பழிவாங்க அனாதை சிறுவன் அர்ஜுன் பக்கம் தலை சாய்ந்து கெட்ட வழியில் செல்கிறார்.அவனுக்கும் காதல் வர மீண்டும் நல்ல வழியை தேர்ந்து எடுக்கிறார் ,அவனின் காதல் அரவிந்த் சாமியின் நேர்வழி இரண்டும் வென்றதா என்பதே கதை ............................ ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ முடிஞ்சிடுச்சு ...
திரைகதை :
மணிரத்தினம் ஒரு பேட்டியில் கதையை சுவாரசியமாய் சொல்லுவது தான் திரைகதை என்று சொன்னார்.மூணு மணி நேரத்திற்கும் குறைவாகவே படம் ஓடுது ஆனா நாலு மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடுவது போல நினைக்க வைத்தது தான் சுவாரசியமா ?
வசனங்களில் மணிரத்னத்தின் சாயல் அதிகம் இல்லை ஆனால் யூகிக்க முடிந்த வழமையான மணிரத்ன காட்சி அமைப்புகள் இருந்தன...
காதல் காட்சிகலில் அழுத்தம் இல்லை. பார்வையாளர்களையும் துளசி என்ற கதாபாத்திரத்தின் மனநிலையிலேயே நினைத்து விட்டாரோ ........
நடிகர்கள் & தொழில்நுட்பம் :
அனைவரும் மிக சிறப்பாக நடித்து இருக்காங்க .அரவிந்த் சாமி,கெளதம் காத்திக் வாங்க வாங்க ன்னு சொல்ல வைத்து விட்டார்கள் ...மேடம் துளசி மட்டும் தான் திருஷ்டி மாதிரி ,,,,,
வசனம் பல இடங்களில் மனதை தொடுது !
ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவு அருமை . படத்தில் கொஞ்சமாவது ஜீவன் இருந்திருந்தால் இவருக்காகவே மீண்டும் போயி பார்த்திருப்பேன் கண்ணில் ஒத்திக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் அருமை ...
கலை இயக்குனர் யார் தெரியலை அவரும் சிறப்பான உழைப்பு தந்து இருக்கார் .
Facebook,Twitter,I-tunes,Youtube புழங்கும் மேல்தட்டு மக்கள் அனைவரையும் சென்றடைந்து விட்ட ரஹ்மானின் இசையை படத்தின் வெற்றிதான் பாமர மக்களிடமும் கொண்டு சேர்க்கும் ஆனால் ரஹ்மானுக்கு அந்த கொடுப்பினை இந்த படத்திலும் இல்லை .........பின்னணி இசை சில இடங்களில் தான் மனதை தொட்டது ......
வழமை போல அருமையான தொழில்நுட்ப குழுவின் உழைப்பு வீணே .......
முடுவுரை :
அன்புள்ள மணி சார் உங்களுக்கு ரெண்டு ஆப்சன் தருகிறோம் அதில் ஒன்றை தேர்வு செய்யவும் ......
1. மெட்ராஸ் டாகீஸ் மூலம் நல்ல இளைஞர்களை வைத்து படமெடுக்கலாம் (கதை,திரைகதை என்ற எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது )......
2. ரஹ்மானின் நல்ல பாடல்கள் வாங்கி அதை வீடியோ ஆல்பம் மட்டும் டைரக்ட் செய்யலாம் .........
Tweet |
அடம் பிடித்து பார்த்துவிட்டு அவஸ்தைபட்டீர்களா ஜி!
ReplyDeleteamaaam ji...... rahman paatu veenaa pochey
Deleteநான் பார்க்கவா வேனாமா அதை சொல்லு
ReplyDeleteவிமசனத்திற்கு நன்றி
ReplyDeleteமொத்த திரையுலகமும்,
ReplyDeleteஎங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.
>>>>>> Click to Read
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர விபசாரங்களும்.
.
mokka padam
ReplyDelete