10.20.2013

ஒளி காட்டும் வழி ...........நிறம் அறியாதவன் நான் !
தமிழும் தொட்டு பார்த்து படித்தவன் !
முள்ளையும் ரோஜாவையும் பிரித்து
பார்த்ததில்லை ,ஆகையால் ரோஜாவை
முழுமையாக ரசித்த முதல் ரசிகன் நான் !

நானும் அம்மலர் போன்றவளே
என்னையும் அவ்வாறே ரசிப்பாயா ?!
என்ற கேள்வியோடு காதல் சொன்னாள்
அவளே பின்னாளில் என் மனைவியானாள் !

தாயின் நிராகரிப்பை கடந்துவந்த எனக்கு
தன் கண்மூடித்தனமான காதலால்
என் பாதைகளை அழகாக்கினாள் !

சாலையை கடக்க பல கைகள் உதவியதுண்டு
அவற்றில் பலரிடம் கருணையுடன்
சங்கடமும் ஒளிந்திருக்கும் -அவளால்
மட்டும் எப்படி எனக்கு காதலை
கலப்படமின்றி பரிசாக தரமுடிந்ததோ ?!

அழகின் வடிவும், அன்பின் உருவும் அவளே!
அவள் மட்டுமே !என்னுள் நிறைந்திருப்பதால்
ஆண்களில் இராமன் இல்லை என்ற
நம்பிக்கையையும் பொய்யாக்கிவிட்டேன் !-

ரோஜா மலர் போன்றதே எம் வாழ்க்கையும்
அதை முழுமையாக ரசிக்க வழிகாட்டும்
காதலே என்றும் எங்களுக்கு
 ஒளி காட்டும் வழி .!!

-ரியாஸ்22 comments:

 1. Replies
  1. மிக்க நன்றி ..ஐயா

   Delete
 2. ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளலாமே...

  போட்டிக்கான தலைப்பு :

  1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
  2. ஒளி காட்டும் வழி
  3. நாம் சிரித்தால் தீபாவளி

  மேலும் விவரங்களுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

  ReplyDelete
  Replies
  1. அதில் பங்குபெற தான் இந்த தலைப்பில் எழுதி இருக்கிறேன் ஐயா !
   உங்களுக்கும் ரூபனுக்கும் மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறேன் . அடியேன் பங்கு பெறுவதே மகிழ்ச்சி

   Delete
  2. நீங்கள் பதிவில் குறிப்பிடவில்லை என்பதால் ஒரு சந்தேகம்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

   Delete
  3. நன்றி நன்றி

   Delete
 3. //அழகின் வடிவும், அன்பின் உருவும் அவளே!
  அவள் மட்டுமே !என்னுள் நிறைந்திருப்பதால்
  ஆண்களில் இராமன் இல்லை என்ற
  நம்பிக்கையையும் பொய்யாக்கிவிட்டேன் !-//

  அழகான கவிதை. மிகவும் ரஸித்தேன்.

  இதைப்போல உணரும் நாம் ஒவ்வொருவருமே ஸ்ரீராமனே தான்.

  ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என ஒழுக்கத்துடன் வாழ்ந்தவராயிற்றே !

  பகிர்வுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றிகள். நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உடன் வருகையும் .. கருத்தும் மகிழ்ச்சி கடலில் முழ்கினேன் .நன்றி ஐயா

   Delete
 4. அருமையான கவிதை
  கருவும் சொல்லிச் சென்றவிதமும் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ..ஐயா

   Delete
 5. ஆண்களில் இராமன் இல்லை என்ற
  நம்பிக்கையையும் பொய்யாக்கிவிட்டேன் !-

  இனிய வாழ்த்துகள்...பரிசு பெறவும்....!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுக்கள் தான் மிக சிறந்த பரிசு .மிக்க நன்றி

   Delete
 6. வார்த்தைகளில் வழிந்தோடுகிறது காதலும் அது கொண்டு வந்த மாசற்ற அன்பும்........ அமர்க்களம் நண்பா

  போட்டியில் வெற்றி பெற மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுக்கள் தான் மிக சிறந்த பரிசு .மிக்க நன்றி

   Delete
 7. Replies
  1. மிக்க நன்றி ..ஐயா

   Delete
 8. உங்கள் காதலையே ஒளிகாட்டும் வழியாக கவிதையை முடித்திருந்தது நன்றாக இருக்கிறது ரியாஸ்.
  வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. வணக்கம்
  ரியாஸ்(அண்ணா)

  தங்களின் மின்னஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

  போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி நண்பா . நன்றி நன்றி

   Delete