தந்தை
கலவிக்கு பின் கருவாகி
கருவறையில் சிசுவாகி
மகளாக பிறந்ததும்
எப்படி தாயானாய் !
தாய்
கணிக்க முடியாத இறைவனின் அன்பை
நினைத்து போற்ற தாய்மை தந்தவளிடம்
என்னவரின் முத்தங்களை குத்தகைக்கு
கொடுத்ததில் பொறாமை துளியும் இல்லை !
மகள்
திணிக்கப்பட்ட தாய்பால் நிறுத்தியதும்
மனதில் பதிந்தது முதல்ஏக்கம்,
இதை சொல்லவோ பாடவோ
இன்னும் தமிழ் உதவவில்லை !
அதற்குள் என் ஏக்கம் மறந்தும் மறத்தும்
போய்விடும் -அதுவரை உங்கள்
தவறுகளுக்கும் சரிகளுக்கும் மத்தியில்
சிறகடித்துக்கொண்டு இருக்கிறேன் !
சந்திக்க போகும் ஏக்கங்கள் என்
சிறகுகள் அனைத்தையும் ஓடிக்கும்வரை !
முற்றும் -------------------------
நன்றி ... இதுவும் மீள் பதிவு .
Tweet |
இதை விட சிறப்பு ஏது...? அருமை... பாராட்டுக்கள்....
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்... நன்றி...
நன்றி நன்றி
Deleteசந்திக்க போகும் ஏக்கங்கள் என்
ReplyDeleteசிறகுகள் அனைத்தையும் ஓடிக்கும்வரை
>>
பெண்ணாய் பிறந்தன் பலன்
இது எனக்கும் பிடித்த வரி சகோ . அதை சொல்லி பாராட்டியது மகிழ்ச்சி . நன்றி நன்றி
Deleteஅருமை....
ReplyDeleteமேலும் தங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...
நன்றி சகோ .. தீபாவளி பலகாரம் கிடைக்குமா ??? உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Delete//திணிக்கப்பட்ட தாய்பால் நிறுத்தியதும் மனதில் பதிந்தது முதல்ஏக்கம்,
ReplyDeleteஇதை சொல்லவோ பாடவோ இன்னும் தமிழ் உதவவில்லை !//
அருமையான வரிகளுடன் அழகிய ஆக்கம். பாராட்டுக்கள்.
அன்பு ஐயா ,
Deleteசென்ற முறையும் இந்த வரிகளை குறிபிட்டு பலர் பாராட்டினார்கள் . இந்த முறை அது உங்களை மனதை கொள்ளை கொண்டதில் மகிழ்ச்சி . நன்றி நன்றி