4.30.2011

என்னிலை விளக்கம்

நான் என்னை பற்றி (about me ) இவ்வாறாக குறிபிட்டுள்ளேன் "வேர்கள் அறுந்து வெளிநாட்டில் வாழும் நான் , வலை பதிவு எனும் விழுதின் துணையுடன் மண்மணம் தேடுகிறேன் ..." இதை படித்த என் நண்பர் (பெயரை சொன்ன திட்டுராறுங்கோ)  இதை பொய் என்றார் . 

           பொய் என்று நண்பர் சொனதற்கு காரணம்  நான் வெளிநாட்டில்  இருந்தாலும் மனைவியுடன் இருப்பதால் வேரருந்துவிடவில்லை என்பதே ஆகும் ."ஊரை  விட்டு  எங்கயோ   வேர்  அறுந்து  நிக்கிறேன்
கூடு தந்த  கிழி  பெண்ணே  உன்னால  தான்  வாழுறேன்" என்ற
பாடல் எனக்கு பொருத்தமான பாடல் .சரி விஷயத்திற்கு வருவோம் .

  "வீடு என்பது ஓர்  அஃறினை பொருள் தான் " அதில் வாழ்தல் மனிதர்கள் மட்டுமே   புரிந்துகொள்ள கூடிய ஓர் உணர்வு .மனித உணர்வுகளை வார்த்தைகளுக்குள் அடைக்க இயலாது . நாட்டுபற்றும் மொழிபற்றும்   கூட அவ்வகையானதே. 
 உலகில் எங்கு போய் நாம் திரவியம் (பணம் தாங்கோ ) தேடினாலும் செல்வசெழிபுடன்   வாழ்ந்தாலும்   பிறந்த நாட்டை பிரிந்து இருக்கும் போது சட்டென்று தோன்றி மறையும் வெறுமையை மறைக்கவும் மறுக்கவும் இயலாது .வெறுமை என்று ஓர் வார்த்தைக்குள் அடைக்க முடியாத உணர்வு .

இதோ நான் படித்த கல்லூரியில் இருந்து அலுமினி association அழைப்பு வந்திருக்கு என்னை தவிர எல்லா நண்பர்களும் அங்கு வருவார்கள் .பிறந்த நாட்டில் வாழும் போது பஸ் பயணத்திலோ ,கோவிலிலோ ,பாங்கிலோ யாராவது ஓர் நண்பனையோ உறவையோ பார்த்து உற்காகமஅடைய வாயிப்பு அதிகம் உள்ளது .  இவையெல்லாம் நான் இழந்தவை .
 
மேலும் ,நடந்து முடிந்த தேர்தல்  ,ஓட்டிற்கு கிடைத்த துட்டு ,IPL கிரிக்கெட், ARரஹ்மான் கச்சேரி ,டி கடை (வடை பஜ்ஜி ப்ளாக் அல்ல ), முட்டை மாஸ் ,குண்டும் குழியுமான ரோடு ,பஸ்ஸில் ஜன்னலோர பயணம் ,வாட்டும் வெயில் ,விரட்டும் மழை , தூசு காற்று ,அக்கம் பக்கத்தார் , நண்பர்கள் , எத்துனை எத்துனை இழப்புகள் . தாயின்  அன்பு ,தந்தையின் திட்டு , சொந்தங்களின் விமர்சனம் போனில் கேட்டாலும் நிஜம் போல் இனித்திடுமா ?

இந்நாட்டவர் "நீ இந்தியானா " என்று கேட்கும்போதெல்லாம் நான் அன்னியபடுகிரேன் ? பிழைபிற்காக திணிக்கப்பட்ட  மொழியை அரைகுறையாக பேசித்திரியும் போதெல்லாம் அன்னியபடுகிரேன் ?
 கூழோ கஞ்சியோ சொந்தமண்ணில் குடிப்பவன் தான் ராஜா . நானெல்லாம் கோழைத்தனமாக வெறும் கூடாக வாழும் புழுக்கள் தான் .
 
எனவே இப்ப சொலுங்க நான் சொன்னது பொய்யா ? ( ஒரு வழியா முடிச்சுட்டேன் )

                                   


No comments:

Post a Comment