4.30.2011

ஹையோ ஹையோ நானும் எழுதறேன்

  நண்பர்களே ......
                     என்னத்த நம்மல்லாம் எழுதபோறோம் என்ற கேள்வியோடு தொடங்குகிறேன் . நான் அரசியல்,இலக்கியம் இரண்டிலும் நுனிப்புல் மேன்தவனே (ஒத்துக்குறேன் அரைகுறை தான்  கொஞ்சம் decent  ஆக சொன்னேன் ) . அதே சமயம் நிறைய படிக்க விருப்பம் உள்ளவன் . 

கட் ,காப்பி ,பேஸ்ட்  என்கிற தாரக மந்திரத்தோடு தான் பதிவை  சுடதோனுதே என்று பேர்  வைத்தேன் . ஆனால் நண்பர் கசாலி காப்பி ,பேஸ்ட் பதிவர் ஒரு பதிவை போட்டு , என் திட்டத்தை டூமில் ஆகிட்டார் .காப்பி அடிப்பது தப்புன்னா கம்பராமயணமே காப்பி தான் . ஆனால் கம்பனிடம் ஓர் நேர்மையும் தனித்துவமும் இருந்தது. அது மிஸ்ஸிங் அதான் நண்பர் கசாலி அவர்களின் வருத்தம் .நான் கொஞ்சம் நேர்மையா காப்பி அடிக்கபோறேன்.(எப்படி என் வில்லத்தனம் )
              நான் ரசித்தவை, நெகிழ்ந்தவை ,பாதித்தவை இப்படியாக எங்கிருந்தாலும் சுடுவேன் உங்களோடு பகிர்வேன் .சொந்த சரக்கும் இருக்கு அதை நல்ல  மெருகேற்றி ஒப்படைகுறேன்."வாசகா  ஓ வாசகா நீ வாசி நாளை உன் எழுத்தில் நான் தெரிவேன் " என்னும்  கமலஹாசன் கவிதை கூற்றுப்படி  நாளை என் எழுத்தில் நான் படித்த எல்லா பதிவர்களும் தெரிவார்கள் .
     
        என் பதிவுகளில் அரசியல் கம்மியாகவும் கலை கொஞ்சம் தூக்கலாகவும் இருக்கும்.
 

 


1 comment:

  1. ஆஹா என்ன புத்திசாலித்தனம்.சமத்து
    அருமையாய் யோசிக்கிறீர்கள் நடக்கட்டும் நடக்கட்டும் வாழ்த்துக்கள் சகோ.....ஆனா கொஞ்சம் கவனம் பதிவர்கள் பாவம் சார்.....

    ReplyDelete