10.18.2012

என் கழுத்தை அறுத்த கத்தி!!

என் கழுத்தை  அறுத்த கத்தி
அதை வாங்கி தந்த பெரியோர் 
அதற்க்கு சானை பிடித்த சான்றோர் 

என் கழுத்து அறுப்படும் போது தோள்கொடுத்தோர் !
யாரையும் மன்னிக்கும் பக்குவம் 
மரணிக்கும் வரை இல்லை!

அவர்கள் முயற்சியில் உயிர் பிரிந்து இருந்தால் 
அடங்கி அடக்கம்மாகி இருப்பேன் ,
ஆனால் இருவருக்குமே தோல்வி !
வலியுடன் நான், வேறு வழி தேடி அவர்கள் !

இரத்தம் வழிந்தால் தான் வன்முறை 
என்று எவன் சொன்னது ?!
உறவு சங்கிலியால் தூக்கிலடப்பட்டவர்கள் பலர் !

துரத்தும் காலம் விரட்டும் நாள் வரும் 
அன்று ஏமாற்றியோருக்கு தண்டனை நிச்சயம் உண்டு !
ஏமாந்த என்போன்றோருக்கு 
பரிசுயேதும் உண்டோ பரம்பொருளே !

--------------------------------------ரியாஸ்

12 comments:

  1. யாரையும் மன்னிக்கும் பக்குவம்
    மரணிக்கும் வரை இல்லை!

    முகத்தில் அறையும் உண்மையான வார்த்தைகள்
    முதுமை வரையும் உரைக்கும் வார்புகள்

    அருமை சகோ.........

    ReplyDelete
  2. ஹய்யோ.... கத்திய பார்த்தாலே பயமா இருக்கு. ஆனால், கவிநடை அருமை.

    ReplyDelete
  3. மிக்க நன்றி .. முதல் வருகை .. வாங்கோ அடிக்கடி

    ReplyDelete
  4. இது என்னுடைய முதல் வருகை, மகிழ்ச்சி...

    உறவு முறிந்தால் துயரம் தான், அதுவும் ஏமாற்றினால் மனம் கலங்கும் துயரம் தான், காலம் பதிலும் சொல்லும் காயமும் ஆற்றும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ . ஆறுதல் அளிக்கும் வார்தகைகள் முதல் வருகையிலே மிக்க நன்றி ..மீண்டும் வாங்க

      Delete
  5. ரத்தம் வழிந்தால்தான் வன்முறை என்று எவன் சொன்னது? உறவு சங்கிலியால் இங்கு தூக்கிலிடப்பட்டோர் பலர்//

    அருமையான வரிகள். அனுபவித்து எழுதிருக்கே ரியாஸ். வாழ்த்துக்கள் நண்பனே.

    ReplyDelete
    Replies
    1. கெட்ட வார்த்தைகளால் நிரப்பவேண்டிய பக்கங்கள் .. ஏதோ இங்கே வந்து கொட்டி தீர்த்தத்தில் கொஞ்சம் நல்ல தமிழ் வந்து விட்டது .. நன்றி சகோ

      Delete
  6. உறவு சங்கிலியால் தூக்கிலடப்பட்டவர்கள் பலர் !

    அனுபவ வரிகள். வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  7. அன்பின் ரியாஸ் அஹமது - பதிவுலக அரசியல் துறந்து! கவிதைகள் மூலம் பறந்து திரிய ஆவல்! நிறைவேறி விட்டது போலும் - சில கவிதைகள் வாசித்தேன் - இரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete