10.24.2013

கட்டிலுக்கு கூட பொம்மைகள் போதும்


அழைப்பிதழ் -அவளுக்கு மறுமணம்!!!



கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரென்றால் 
விவாகரத்து தான் அறுவடை நாளோ ?
நம் அறுவடை நாளில் உனக்கு 
தீபாவளி கொண்டாட்டம் !- நான் 
நரகாசுரன் ஆனதை எண்ணித்தான்  நொந்தேன் !



நமக்குள் ஒத்து போகாததால் 
நம் காலம் ஒத்திகையாகிவிட்டது !
போகிற போக்கில் இன்று 
உன் திருமண அழைப்பிதழ் கண்டு 
கண்கள் ஏனோ பனித்தன 
இறுதியாய் ஒருமுறை மன்னித்து விடு !



அழைப்பிதழ் தருவாய் என எதிர்பார்ப்பு ஏதுமில்லை !
தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே  !
ஆம் இனி உன் நினைவுகளை அசை 
போடுவது கூட அநாகரிகம் அல்லவா !


உன் காதில் விழாது என்றாலும் 
நம் அத்தியாயத்தின் முடிவுரை 
எழுதுகிறேன் இருவரும் பயன்பெற 
கேளடி தோழியே !

நீயும் நானும் சரிநிகர் சமானம் 
என்பதை நம் தவறுகள் தானே உணர்த்தியது !
உணர்ந்தாயா என் பார்வையில் நீயும் 
உன் பார்வையில் நானும் குற்றவாளிகள் என்பதை !

புதிய பாதையில் நீ செல்லும் போது 
கவனிக்க வேண்டிய பலகைகள் உண்டு !
முற்று புள்ளிக்கு முன் அதில் சில இதோ ....

எதிர்வாதத்திற்கு அணை போடு 
பிடிவாதத்தை களையெடு 
அன்பு கலை கணக்கின்றி பழகு !
நித்தமும் காதலை நிருபணம் செய் !

தொட்டதும் துலங்கிடும் வரம் 
யாருக்கும் கிடைத்ததில்லை 
தோல்விகளில் சிறகடித்தால் தான் 
சிகரம் தொடமுடியும் !
எனவே பொறுமையும் பழகு!


கட்டிலுக்கு கூட பொம்மைகள் போதும் 
என்னும் காலம் இது -எனவே அவனுக்கு 
புது கவிதையாக பொக்கிஷமாக இரு !
பாதுகாக்க அல்ல ஆராதிக்கவே அழகு  !



என்னால் உனக்கு ஏற்பட்ட 
காயங்களுக்கு இனி மன்னிப்பு எதற்கு ?
ஆயினும் நான் அதில் பாடம் கற்கிறேன் 
இனி எனக்கும் ஒருத்தி விளக்காய் வரலாம் 
அவளுக்கு எரிபொருளாய் இதயம் தந்திடவே !
எனவே நன்றிகளோடும் வாழ்த்துகளோடும் 
உன் திசை மறந்து ,புதிய திசை நோக்கி ........!


இது ஒரு மீள் பதிவு நன்றி 


22 comments:

  1. அருமை... நல்லது... அனுபவ பாடம் அனைத்தும் கற்றுக் கொடுக்கும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பரே இது ஒரு மீள் பதிவு ... சென்ற முறை நீங்கள் மட்டும் தான் பாராட்டி பின்னூட்டம் தந்து சந்தோஷம் அளித்தீர்கள். அன்றும் மகிழ்தேன் இன்றும் மகிழ்ந்தேன் . நன்றி நன்றி

      Delete
  2. மனமுதிர்ச்சி கொண்ட காதல்
    இப்படித்தான் இருக்குமோ
    எங்கிருந்தாலும் வாழ்க என்பதாய்....
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம் தொடர்ந்து பாராட்டு பெறுவதில் பெரும்மகிழ்ச்சி ஐயா ! நன்றி

      Delete
  3. ஒரு தோல்வி எப்பேற்பட்ட முதிர்ச்சியை தந்திரூக்கு. கவிதை அருமை. நான்லாம் ஏன் கவிதை எழுதுறேன்னு தோணுது. இதை படிக்கும்போது...,
    எல்லாம் சரி!! அதென்ன பொண்ணுங்க எதிர்வாதம் செய்யக்கூடாதா!? செய்யலாம் நல்லதுக்கு..., அவசியம் தவிர்த்து எதிர்வாதம் செய்யாதேன்னு போட்டிருந்தா உங்க மனமுதிர்ச்சி இன்னும் அழகா வெளிவந்திருக்குமோ!

    ReplyDelete
    Replies
    1. உங்களை தாழ்த்தி கொண்டு என்னை பாராட்டி மகிழ்ந்த சகோதரியே ..... நன்றிகள் கோடி ..
      இதில் இருந்தே உங்கள் படைப்பு திறன் அலாதி என்று புலப்படுகிறது .. வாழ்த்துக்கள் நன்றி நன்றி ...

      //நீயும் நானும் சரிநிகர் சமானம்
      என்பதை நம் தவறுகள் தானே உணர்த்தியது !///
      என்று சொல்லிய பின்பு தான் நான்

      //எதிர்வாதத்திற்கு அணை போடு /// என்று சொல்லி இருக்கிறேன் எனவே அதில் தவறில்லை என்று அடியேன் நினைக்கிறன் ...
      அவசியம் தவிர்த்து எதிர்வாதம் செய்யாதே என்றே பொருள் கொள்ள வேண்டும்

      நன்றி நன்றி

      Delete
  4. வித்யாசமான சிந்தனைகளுடன் வியப்பளிக்கும் ஆக்கம்.

    பாராட்டுக்கள் நண்பரே !

    எதிலும் ஒரு புதிய பாடம் நாமும் கற்றுக்கொள்ளலாம், அதிலும் ஒரு சிறப்பான நல்லதோர் அனுபவப்பாடம் பிறருக்கு போதிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்.

    இருவரும் நல்லவர்களே, சரியான புரிதல் இல்லாமல் பிரிந்துள்ளனர், போல.

    எனினும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஐயா ...
      உங்கள் வருகையை எதிர்பார்க்கும் எங்கும் நண்பன் நான் . வந்து சிறப்பு செய்ததற்கு முதற்கண் நன்றி ..

      இது என் அனுபவம் அல்ல , வித்தியாசமான கரு பொருளில் எழுத நினைத்த ஆர்வத்தில் உருவாக்கிய படைப்பு .

      தவறுகளில் பாடம் கற்ற ஒரு ஒருவனின் பார்வையில் புனைந்து இருக்கிறேன் அதை மிகவும் அழமாக உள்வாங்கி பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி ...

      நன்றி .. ஆஸ்கரின் எண்ணிக்கை கணக்கில் இல்லை ஐயா .... நன்றி நன்றி நன்றி

      Delete
  5. மிக்க நன்றி

    ReplyDelete
  6. //கட்டிலுக்கு கூட பொம்மைகள் போதும்//

    இந்தத்தங்களின் தலைப்பில் எவ்வளவோ உள் அர்த்தங்கள் பொதிந்துள்ளன.

    ’கட்டிலுக்கு .... பொம்மைகள் கூட போதும்’

    என்று மாற்றி வைத்திருக்கலாமோ என்றும் நினைத்தேன்.

    ஆனால், பொம்மைகள் கூடத் தேவையில்லை என்பேன்.

    இன்று நெட்டிலே போனால் ஆயிரம் வசதிகள் VARIETIES அள்ளி அள்ளிக் கொடுக்கப் படுகின்றன தானே! அது போதுமே !!

    உடைந்த இதயப்படம் நல்லதோர் தேர்வு.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறியது வேதனையான உண்மை ஐயா .....

      ஆனால், பொம்மைகள் கூடத் தேவையில்லை என்பேன்.

      //இன்று நெட்டிலே போனால் ஆயிரம் வசதிகள் VARIETIES அள்ளி அள்ளிக் கொடுக்கப் படுகின்றன தானே! அது போதுமே !!/////
      அதுவும் கூட நிழல் பொம்மைகள் தானே

      மீண்டும் வந்து மேன்மையான கருத்து பதிந்து சென்றது மேலும் சிறப்பு சேர்த்துள்ளது ..

      நன்றி

      Delete
  7. நெஞ்சத் நெகிழ வைத்த கவிதை! அருமை! நீண்ட நாள் ஆயிற்று! நலமா!
    நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா ... நீண்ட நாட்கள் எழுத வில்லை .. நலம் .நாடுவதும் நலமே . உங்கள் வருகை மேலும் சந்தோசத்தையும் உற்சாகத்தையும் தந்தது ..நன்றி ஐயா

      Delete
  8. ரியாஸ்..

    ரொம்ப நல்லா இருக்கு.... மனப்பூர்வமான பாராட்டுக்கள்...
    எக்ஸலன்ட்....

    ReplyDelete
  9. எதிலுமே பாடம் பற்றுக் கொள்ளலாம். அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம் தொடர்ந்து பாராட்டு பெறுவதில் பெரும்மகிழ்ச்சி ஐயா ! நன்றி

      Delete
  10. இனி உன் நினைவுகளை அசைபோடுவது கூட அநாகரீகம் அல்லவா அருமையான வரிகள்--- இதுதான் உண்மையான நேசம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அருமை.. முதுமை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete