11.27.2012

மகளே உன் சமத்து !



அழகுக்கு அர்த்தம் தந்தவள்
அறிவுக்கு மோட்சம் கொடுத்தவள்
சிரிப்பொலியை கவிதையாக்கினாள்
அழுகையை  இசையாக்கினாள்
சேட்டைகளையும் ரசிக்க வைக்கிறாள்
நடை பயில என் கைகோர்கிறாள்
உன் சின்ன மடியில் தலைவைத்து
படுக்கும் போதெல்லாம் செத்துவிட
தோணுதடி செல்ல மகளே !


இந்த கவிதையில் புதுமைகள் ஏதுமில்லை
 நீ கருபொருளானதை தவிர !
இப்படி நாங்கள் கொட்டும் அன்பை
திருப்பி தருவது என்பது மட்டும்
 மகளே உன் சமத்து !



5 comments:

  1. அழகு... அருமை... விளக்கமும் கவிதை வரிகளோ...?

    வாழ்த்துக்கள்...
    tm4

    ReplyDelete
  2. ஒவ்வொரு தந்தையின் தலையாய கடமை
    தன் மகளின்
    அழகை ரசித்தல்
    அன்பாய் நேசித்தல்
    சுட்டியை புசித்தல் - கூடவே
    கவிதை வரைதல்
    என்பதையும் சொன்ன
    கவிதை ஓவியரே வாழ்த்துக்கள்

    ஒவ்வொரு வார்த்தையிலும் வழிந்தோடுகிறது
    பெருமையும் பெருமிதமும்
    ஆனந்தமான கவிதை.

    ReplyDelete
  3. மிக அருமையான கவிதை சகோ வாழ்த்துகள்

    ReplyDelete