1.06.2013

வலைச்சரத்தில் நான் !


நண்பர்களே சகோதர சகோதரிகளே ...
இன்று முதல் வலைச்சரத்தில் ஆசிரியர் பணி எனக்கு (அட நம்புங்க )..எனவே இந்த வாரம் மீள்பதிவு வாரம் ...ஆம் ஆசிரியர் பணியை (அதையாவது ) சரியா செய்ய நம்ம பக்கத்துக்கு விடுமுறை கொடுத்து அதே சமயம் . நல்ல கவிதைகளை இந்த வாரத்தில் மீள் பதிவுகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல் ....நன்றி 

ஆணின் வக்கிரமும் பெண் மனமும் !

அலங்காரம் அதிகமானால்
விலை வைத்துவிடுகிறார்கள்
அலங்காரமே இல்லை என்றால்
விலைபோவதில்லை நான்!


வியர்வை துடைத்து,அளவாய் சிரித்து
ஆண்களை எதிர்கொள்ளும் போதெல்லாம்
என் ஐம்புலனும் தன்னிச்சையாய்
உடையை சரிசெய்து கொள்ள பழகிவிட்டது
நிச்சயமாய் கவனம் ஈர்ப்பதற்கு அல்ல!


பெண்ணியம் பேசும் பல
கண்ணியவான்கள் கண்கள் கூட
மத்தியில் நிலைத்து விடுகிறது .
தடுமாறும் வக்கிரத்தால்
நான் தடம் மாறாமல் இருக்க உதவும்
தலையங்கி,துப்பட்டா மட்டுமல்ல 
ரசம் போன கண்ணாடிகள் கூட
எங்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷமே !

------------------------
இது முகநூளில் நான் கண்ட காணொளி இது இந்த கவிதையோடும் , மேலும் நாட்டு நடப்புகளோடும் ஒத்து போவதால் இதை இங்கே பகிர்ந்து உள்ளேன் .அவசியம் பார்க்க வேண்டிய காணொளி .....


4 comments:

  1. கண்டிப்பாக காலத்திற்கேற்ற கவிதைதான். காணொளியை ஏற்கெனவே பார்த்திருக்கிறேன் ..

    ReplyDelete
  2. நன்றி சகோ.. உங்களது ரெண்டாவது வருகை இது மிக்க நன்றி ..நீங்கள் என் தளத்தின் நூறாவது உறுபினர் நன்றி நன்றி

    ReplyDelete
  3. பெண்ணின் மனதை புரியவைக்கும் கவிதை அருமை

    ReplyDelete
  4. அன்பின் ரியாஸ் அஹமது - ஆணின் வக்ல்கிரமும் பெண்ணின் மனமும் - தலைப்புக்கேற்ற பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete