1.07.2013

மீண்டும் ஒரு காதல் Take Off!



பேருந்தில் பயணிக்கும் போதெல்லாம்
ஜன்னல் ஓர இருக்கைக்காக பிராத்தனைகள் செய்ததுண்டு !
இன்று முதல் விமான பயணம்
சற்றே கூடுதலான பிராத்தனையுடன்
இருக்கை தேடின  கண்கள் ,ஏமாற்றமே !
ஆனால் கொஞ்சமும் வருத்தமில்லை !
ஆம் ஜன்னல் ஓரத்தில் அழகிய இளம் பெண்
அவள் அருகில் நிலவில் கால்பதித்த சந்தோசத்துடன் நான் !

பொய் சொல்லி வர்ணிக்க வேண்டிய அவசியமில்லா அழகு !
கண்ணியமான உடையில் புத்தக புழுவாய் அவள் !
என் குளியலை நானே சந்தேகத்துடன் நினைத்துபார்க்க வைத்தது
அவள் கூந்தல்,காற்றில் தெளித்த வாசனை !

இறுக்கமாக மூடப்பட்டுள்ள ஜன்னல் வழியே
காற்று வர வழியே இல்லை !
யாரின் பாடலுக்கு உன் கூந்தல் நடனமாடுதோ !
ஓ .. தலைக்கு மேலே குளிறுட்டி !!

முதல் விமான பயணத்தின் நடுக்கம்  மறைத்து
கதாநாயகனாய் முயற்சிக்கும் எனக்கு,
ஒவ்வொரு கணமும் பரிட்சையாகி விட்டதே!
ஆமாம் எந்த பரீட்சைக்கு நீ  இப்படி படிக்கிறாய்!!



உணவு வருகிறது வேண்டாம் என்கிறாய்
உன் குரலும் இனிமை ! உணவை
வாங்கி உண்ணாமல் தவிக்கையில்
என்னை அன்புடன் சாப்பிடுங்கள் என்று அனுமதி தருகிறாய் !
வரபோகும் மனைவி ஊட்டிவிடவேண்டும் என கனவுகள் உண்டு ,
அது நிறைவேறியாதகவே தோன்றுதடி!



உண்ட நான் தெளிவாய் இருக்க
மயக்கத்தில் அவள் புத்தகத்தில்
முகம் புதைத்து தூங்கிபோனாள்!
இதுவரை ஓரக்கண்ணில் பார்த்துவந்த எனக்கு
முழுதாய் முகம் பார்க்க ஆவல்!
அந்த புத்தகத்தை என்னை போல்,
வேறு எவரும் சபித்திருக்க மாட்டார்கள் !!

பயணம் இனிதே நிறைவடந்தாம்!!!
விமானம் தரை இறங்கியது .
என் பயனதட்டுமுட்டுகளை சேகரித்த பின்
அவள் பக்கம் திரும்பினேன்!
யாருக்கோ காத்திருக்கிறாள்
பணிப்பெண் நான்கு சக்கரநாற்காலியுடன் வர
அதில் நன்றியுடன் அமர்கிறாள் என்னவள் !


பின்பு ஒரு நாள் ...,
விழி ஈரத்தோடு நல்ல துணையின்றி
என்னால் நகரக்கூட முடியாது என்கிறாய் ?!
நானும் நல்ல துணையே என வாக்களித்தேன் .

உன்னிடம் காதல் சொன்ன
அந்த கணம் மட்டுமே
நானும் வீரன் என சொல்லிக்கொள்ள  உதவும் !


ஈர்ப்பு தான் காதலா?
பரிதாபம் தான் காதலா?
அவள் நிலைதெரியாமல் அணுஅணுவாய்
ரசித்த குற்றஉணர்வு தான் காதலா?
என்ற கேள்விகளுடன் நான் இருக்கையில்
என் தியாகமே காதல் என்று நன்றியுடன்  அவள் !

என் கேள்விகளோடு காதலும்
நிலைதிருப்ப்பதால் இன்றும்
வானிலேயே மிதக்கிறோம் !

இன்றைய வலைச்சரத்தில் :

13 comments:

  1. கவிதை நல்லா இருக்கு.......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. இயல்பான கவிதை இதயத்தைக்கவர்ந்தது அழகு!

    ReplyDelete
  3. ஆரம்பத்திலிருந்து மிகவும் அருமையான வர்ணனைகள். நடுவில் சற்றே சோகம். சோகமே சுகம் என நினைத்த முடிவு. எல்லாமே அழகோ அழகு தான். மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா , இங்கும் கருதுத்திட்டு வலைச்சர பக்கத்திலும் விளக்கமாக கருத்திட்டு எனக்கு விருந்தே தந்து விட்டர்கள் நான் நன்றி என்ற மூன்று எழுத்தில் எப்படி என் உள்ளதின் மகிழ்ச்சியை பதிவு செய்வேன் ... கோடான கோடி நன்றிகள் .. என்றும் இந்த அன்பை எதிர்பார்க்கும் அன்பன் ரியாஸ்

      Delete
  4. ஒரு உண்மை நிகழ்வை கண்ட பரவசத்தை கொடுகிறது இந்த கவிதை.


    " நிலவில் கால்பதித்த சந்தோசத்துடன் நான் !"

    "என் குளியலை நானே சந்தேகத்துடன் நினைத்துபார்க்க வைத்தது
    அவள் கூந்தல்,காற்றில் தெளித்த வாசனை !"
    அருமை


    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ நானும் மிகவும் ரசித்து எழுதிய வரிகள் இவை நன்றி நன்றி

      Delete
  5. Good one!

    But onnu sollava,

    I liked the Title more than the Kavithai :))

    ReplyDelete
    Replies
    1. THANK U SISTER..
      come again and again u may also like the poem(kavithai) one day ..

      Delete
  6. அன்பின் ரியாஸ் அஹமது - கவிதை அருமை - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ஐயா .....ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

      Delete
  7. அழகிய வர்ணனைகள் நிறைந்த இளம் மனதை காட்டும் வரிகள் சிறப்பு.

    ReplyDelete