1.14.2013

தலைவா -ரெண்டு சொட்டு கண்ணீர் !



உறவுகள் முட்கள் என்றான பின்பும்
கொண்டாட்டங்கள் குறைந்திடவில்லை!
சிக்கனமின்றி சிரிக்கும் போதும்
மகிழ்ச்சி மட்டும் எட்டாக்கனி !

பிராத்தனைகள் போதும் பரிசேதும் வேண்டாம்
என்றனர் முட்களுக்கு நடுவிலும் பூக்களாய்
பூத்து குலுங்கும் உறவினர் சிலர்....

உன் பிராத்தனைகளையும் எதிர்பார்க்கவில்லை
என் ஆசிகள் உனக்கு என்றும் என
வாழ்த்தினர் வசதியுள்ள மனம்கொண்ட சிலர் ....

மெய்யும் பொய்,நான் என்கிற
நானும் பொய்,நிலையில்லா உலகில்
அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்
நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்
போதும் என்றனர் புத்தனை மிஞ்சிய
நண்பர்கள் சிலர் !

முட்கள் தந்த வலியையும் மறக்கடித்த
மலர்கள் வாடிட காண வலிமையில்லாத
நானோ கஞ்சன் ! ரெண்டு சொட்டு
கண்ணீரையும் எனக்காகவே சேமியுங்கள்
முந்தி செல்ல போவது நானே என்றேன் !


23 comments:

  1. //மெய்யும் பொய்,நான் என்கிற
    நானும் பொய்,நிலையில்லா உலகில்
    அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்
    நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்
    போதும் என்றனர் புத்தனை மிஞ்சிய
    நண்பர்கள் சிலர்
    //

    அருமையான வரிகள் நண்பா

    ReplyDelete
  2. Replies
    1. சென்றேன் ரசித்தேன் .நல்ல பயன் உள்ள தகவல் நண்பா

      Delete
  3. //மெய்யும் பொய்,நான் என்கிற
    நானும் பொய்,நிலையில்லா உலகில்
    அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்
    நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்
    போதும் என்றனர் புத்தனை மிஞ்சிய
    நண்பர்கள் சிலர் !
    //

    அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா

      Delete
  4. மெய்யும் பொய்,நான் என்கிற
    நானும் பொய்,நிலையில்லா உலகில்
    அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்
    நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்
    போதும் என்றனர் புத்தனை மிஞ்சிய
    நண்பர்கள் சிலர் !

    டச்சிங்க் வரிகள் பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க புத்தம் புது புந்தளிரே ...நன்றி நன்றி நன்றி

      Delete
  5. "தலைவா - ரெண்டு சொட்டு கண்ணீர் !"

    என்ற இந்தக்கவிதையை நன்றாகவே எழுதியுள்ளீர்கள்.

    இந்தக்கவிதை ’ஆக்கத்திற்கான தாக்கம்’ என்னிடமிருந்தே என் உணர்ச்சிகரமான மெயிலிலிருந்தே தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தான் இதன் சிறப்பு.

    இதை என்னாலும் உங்களாலும் ரஸித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்குப் பிறரால் புரிந்து கொள்ள முடியாமலும் கூடப்போகலாம் தான்.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா ! விதையும் தந்து அறுவடையும் செய்து மனம் மகிழ செய்த உங்களுக்கு நன்றிகள் கோடி ஐயா

      Delete
  6. //
    உறவுகள் முட்கள் என்றான பின்பும்
    கொண்டாட்டங்கள் குறைந்திடவில்லை!

    **சிக்கனமின்றி சிரிக்கும் போதும்
    மகிழ்ச்சி மட்டும் எட்டாக்கனி !**//

    **அருமையான சிந்தனை.

    இந்த எட்டாகனி என்ற வார்த்தையைப்படித்ததும் நான் எழுதிய குட்டியூண்டு நகைச்சுவைக்கதை தான் ஞாபகம் வருகிறது. படியுங்கள். சிரியுங்கள். முடிந்தால் கருத்தும் அளியுங்கள். காதல் கதை தான் அதுவும்.

    இதோ இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html

    தலைப்பு: எட்டாக் க[ன்]னிகள்.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. நேற்றே எழுதி முடித்து விட்டேன் இந்த கவிதையை ! இன்று பதிவிடும் முன் தான் இந்த வரிகளை சேர்த்தேன் ..அதற்க்கு நட்சதிர அந்தஸ்த்து கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி .....

      எட்டாக்கனியையும் எட்டி பிடித்துவிட்டேன் ! கண்டு ரசித்தேன் !

      Delete
  7. //பிராத்தனைகள் போதும் பரிசேதும் வேண்டாம்
    என்றனர் முட்களுக்கு நடுவிலும் பூக்களாய்
    பூத்து குலுங்கும் உறவினர் சிலர்....

    உன் பிராத்தனைகளையும் எதிர்பார்க்கவில்லை
    என் ஆசிகள் உனக்கு என்றும் என
    வாழ்த்தினர் வசதியுள்ள மனம்கொண்ட சிலர் ....//

    **முட்களுக்கு நடுவிலும் பூக்களாய்
    பூத்து குலுங்கும் உறவினர் சிலர்**

    அசத்தலான சொல்லாடல் அழகோ அழகு! ;)))))

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உண்மைகள் அழகு தானே ஐயா !உண்மையை சொன்னேன் ரசித்து ருசித்து விட்டீர்கள் நன்றி நன்றி

      Delete
  8. //மெய்யும் பொய்,நான் என்கிற
    நானும் பொய், நிலையில்லா உலகில்
    அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்
    நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்
    போதும் என்றனர், புத்தனை மிஞ்சிய
    நண்பர்கள் சிலர் !//

    புத்தனை மிஞ்சிய நண்பர்கள் சிலரில் நானுமா?

    This is TOO MUCH! டூஊஊஊஊஊ மச் நண்பா!

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. Nooooooo this is not tooooo much! u r da only one ! only one such

      Delete
  9. //முட்கள் தந்த வலியையும் மறக்கடித்த
    மலர்கள் வாடிட காண வலிமையில்லாத
    நானோ கஞ்சன் ! ரெண்டு சொட்டு
    கண்ணீரையும் எனக்காகவே சேமியுங்கள்
    முந்தி செல்ல போவது நானே என்றேன்!//

    எங்கே சேமிப்பது? எப்படிச்சேமிப்பது? இந்த வரிகளைப் படித்ததும் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டேன் நண்பா. கண்கள் வரண்டு போகும் வரை அழவைத்து விட்டீர்களே, இப்படி.

    தங்களின் அன்பு தான் என்னுடையதை விட தலைசிறந்த அன்பு என்று சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். அதற்கு நான் தலை வணங்குகிறேன்.

    நல்லதொரு படைப்பு. எதையும் எப்படியும் அழகாக உங்களால் கவிதையாகத் தந்துவிட முடிகிறது.

    பிரியமுள்ள
    VGK

    [ஓர் சிறிய வேண்டுகோள்: எங்கள் கருத்துக்கள் கருப்பாகவும், உங்கள் பதில்கள் வெள்ளையாகவும் தெரிகின்றன.

    உங்கள் வெள்ளையுள்ளத்தினை நாங்கள் உணர்ந்து கொள்ளத்தான் இப்படி என்று புரிந்து கொள்ள என்னால் முடிந்தாலும், பிறரின் கருத்துக்களை ... ஏன் என்னுடைய கருத்துக்களையே கூட .. என்னால் தெளிவாகப்படிக்க முடியாமல் அல்லவா உள்ளது.

    எங்கள் கருத்துக்களுக்கும் வெள்ளை அடியுங்கள். அல்லது வெளிர் மஞ்சள் Background கொடுத்து உதவுங்கள். நன்றி.]

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்கு அளவேது ஐயா !நீங்கள் கொடுத்து பழக்கி விட்டர்கள் ! என் குருவே பெற்றுக்கொள்ள தயக்கம் ஏன் ! இன்னும் நிறையா படிக்க வேண்டும் உங்களிடம் , வருவேன் உங்கள் பக்கம் தினமும் என் எழுத்தும் சாகாவரம் பெற ! நன்றி நன்றி !

      உங்கள் சிறிய வேண்டுகோள் எனக்கு பெரிய வேலை ஆம் ! அதை சரி செய்ய வழி ஏதும் அறியேன் ஐயா !நிச்சயம் சரி செய்கிறேன் விரைவில் ! நண்பர்களிடம் தான் கேட்க்க வேண்டும் .எனக்கு இதை செய்து தந்தது நண்பர் ரஹீம் கசாலி அவர்கள் தான் ! பாவம் அவர் மாட்டினாரு என்கிட்டே இனி அவர் ஓய்வு நேரத்தில் என் தொந்தரவு தாங்காமல் ஒரு நாள் சரி செய்து தருவார் ! ஹி ஹி அதுவரை பொருத்து அருளுங்கள் ஐயா !

      நன்றி ஐயா ! விதையும் தந்து அறுவடையும் செய்து மனம் மகிழ செய்த உங்களுக்கு நன்றிகள் கோடி ஐயா

      Delete
  10. நல்ல அர்த்தமுள்ள பதிவு
    மிக்க நன்றி.

    Indian Sri Lanka Tamil Newspaper

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .. நன்றி

      Delete
  11. வணக்கம்
    ரியாஸ்(அண்ணா)

    எங்கேயோ போயிட்டிங்க அருமையான கவிதை

    மெய்யும் பொய்,நான் என்கிற
    நானும் பொய்,நிலையில்லா உலகில்
    அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்
    நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்
    போதும்

    இதை விட வேறு வரிகள் என்னதான் இருக்கு அண்ணா பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எங்கேயும் போகலை சகோ உங்களுடன் தான் இருக்கேன் ...
      உங்கள் அன்பிற்கு நன்றி ...தொடர்ந்து வாங்க

      Delete
  12. பிராத்தனைகள் போதும் பரிசேதும் வேண்டாம்
    என்றனர் முட்களுக்கு நடுவிலும் பூக்களாய்
    பூத்து குலுங்கும் உறவினர் சிலர்....//

    மெய்யும் பொய்,நான் என்கிற
    நானும் பொய்,நிலையில்லா உலகில்
    அன்பை நிலைநாட்டியதற்கு சான்றாய்
    நீ சிந்தும் ரெண்டு சொட்டு கண்ணீர்
    போதும் என்றனர் புத்தனை மிஞ்சிய
    நண்பர்கள் சிலர் !//

    இந்த இரு உறவுகள் இருந்து விட்டால் போதும் வாழ்க்கை வாழ்வதற்கு.
    கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி ! இதோ உங்களின் அன்பு எனக்கு கிடைத்து விட்டதே அதை போல் என் அன்பும் உங்களுக்கு ...நன்றி நன்றி நன்றி

      Delete