7.16.2012

பதிவர் சென்னை பித்தன் ஐயாவுக்கு சவால்

சென்னை பித்தன் ஐயாவுடன் புலவர் ஐயா, 

சில நாட்களுக்கு முன்னாள் சென்னை பித்தன் ஐயா அவர்கள்.
மீண்டும் ஒரு காதல் கதை! என்று ஒரு பதிவு எழுதி இருந்தார்கள். மிக நல்ல பதிவு அந்த பதிவின் கருத்துரைகளை படிக்கும் போது ஸ்ரீராம். என்னும் பதிவர் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்வி தான் இந்த கிறுக்கலுக்கு inspiration. நண்பர்களே மற்றபடி என்றுமே முதலிடம் வகிக்கும் ஐயாவுக்கு சவால் விடும் அளவுக்கு நான் வோர்த்து (WORTH) கிடையாது ஹி ஹி  ...

படிங்க பிடித்தால் வாக்களிக்கவும் பிடிக்கலை என்றால் திருத்தங்களை கமென்ட்டில் சொல்லவும் ...

மீண்டும்  காதலி  சினேகிதி 


அன்று அக்னி நட்சத்திரம்
சாலையில் தீடிர் மழை
கணவனுடன் நீ
என்னை கடக்கிறாய் .
கோடை மழை என்பதால்
மழை  அதிசயம்!  சந்தோசம்!
உன்னை பார்ப்பதும் அப்படியே !


மழைக்கு குடையாய்
உன் கணவனின் அக்கறை
கண்டு என் இதயம் லேசானது.

அந்த கணப்பொழுதில் உன்
பார்வை என் மீது இப்போது.
சிரிக்க மறுத்த உதடுகள்
உன் கண்ணியம் சொன்னது
இருத்தும் வலித்தது.
கலங்கிய விழிகள்
ஆறுதல் அளித்தன.

உன் கலக்கம் ஆறுதல் அளித்தாலும்
எனக்குள் கேள்விகள் எழுந்தன.
அது தவறோ என குழம்பினேன்
இன்றும் சுயநலமே தெளிவளித்தது !
என் மனைவி எந்நிலையிலும்
கலங்காதிருக்கும் வண்ணம்  காதல்
செய்ய சூளுரைத்தது மனம்.


-முற்றும்


ஒரு flashback 

இதுவும் கூட இதே கருபோருளில் தான் இங்கே போயி பாருங்களேன்



11 comments:

  1. சரிதான்.......ஒரு முடிவோடுதான் திரியுறே?

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகை ..ரொம்ப சந்தோசம் அண்ணே ...ஹி ஹி சும்மா திராப்ட்ல எழுதி வச்சுருந்தேன் அதுதான் இப்படி ..நன்றி

      Delete
  2. என் மனைவி எந்நிலையிலும்
    கலங்காதிருக்கும் வண்ணம் காதல்
    செய்ய சூளுரைத்தது மனம்//.


    உண்மைக் காதல் இப்படித்தான் முடிவெடுக்கும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நட்ச்சத்திர வாழ்த்து double சந்தோசம் ..நன்றி சகோ

      Delete
  3. சிறிது தவறி இருந்தாலும் விரசமாகி இருக்ககூடிய கவிதை .ஆனால் அழகாய் திசை திருப்பி மனைவியின் மேல் வரும் காதலில் முடித்து உள்ளாய் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி அண்ணன் நன்றி

      Delete
  4. எனது பின்னூட்டம் என்னவாச்சு?ஏன் வெளிவரவில்லை?உங்கள் கவிதையை ரசித்து,காதலைச் சொல்ல கவிதையே சிறந்த களம் என்பதால்,சவாலில் நீங்கள் ஜெயிக்கிறீர்கள் என சொல்லியிருந்தேன்..அதைக் காணவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஐயா நன்றி !! உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி

      Delete
  5. அன்பின் ரியாஸ் அஹமது - இறுதி முடிவு அருமை - மனைவி எந்நிலையிலும் கலங்காதிருக்கக் காதல் செய்ய வேண்டும் - அதுதான் அருமையான முடிவு - சிந்தனை அருமை - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete