8.19.2011

இன்றைய சூழ்நிலையில் தி.மு.க-வுக்கு நண்பன் யார் !!

எங்கெங்கோ படித்ததில் என் நெஞ்சை சுட்டவை ,அதனால் நான் சுட்டவை....

ஒரு கணிப்பு!

இந்தியாவில் இருக்கும் முக்கியமான தலித் சிந்தனையாளர்களில் ஒருவரான ஆனந்த் டெல்டும்ப்டே, 'அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்’ என்ற புத்தகம் எழுதி உள்ளார்.
ஆளும் வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி, தலித் இயக்கத்தில் ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்குவதில் ஏற்பட்ட குறைபாடு, தலைவர்களிடம் உருவான குட்டி முதலாளித்துவ உணர்வுகள் ஆகிய மூன்றைத்தான் முக்கியமான காரணங்களாக அவர் சொல்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை...  மூன்றாவதாகச் சொன்ன காரணத்தை முதலாவதாகச் சொல்லலாம்!
'சுரண்டலற்ற, அநீதியற்ற, மோசடியில்லாத மனித சமூகத்தை உருவாக்குவதற்கு வழிவகை காணவேண்டும் என்ற அம்பேத்கரின் கனவு தற்போதைய தலித் இயக்கங்களில் அபூர்வமாகவே பிரதிபலிக்கிறது’ என்பதும் அவரது கணிப்பு!


ஷீலா மசூத்!ஓர் அதிர்ச்சி!


சுதந்திர தினத்துக்கு அடுத்த நாள் அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப் புறப்பட்ட சமூகப் போராளி ஷீலாவை, அவரது காரில் வைத்தே சுட்டுக் கொன்றுவிட்டார்கள். மத்திய பிரதேசத்தில் சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் சுரங்​கத்தை எதிர்த்துப் போராடிய காரணத்​தால் இவர் கொலை செய்யப்பட்டார் என்பது வெளிப்படையாகவே தெரிந்தாலும், 'கொலைக்கான காரணம் தெரியவில்லை’ என்று கை விரிக்கிறது, போலீஸ். இத்தனைக்கும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸில் ஏற்கெனவே புகார் தெரிவித்து இருக்கிறார். காடு, நீர்நிலைகளையும் லஞ்சத்தில் இருந்து நாட்டையும் காப்பாற்றப் புறப்பட்ட ஷீலாவைக் காப்பாற்ற நம் ஜனநாயகத்தால் முடியவில்லை. இந்தியாவெங்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு அநியாயத்தை எதிர்த்துப் போராடியவர்களில், 12-வது மரணம் ஷீலாவுடையது என்பது மேலும் அதிர்ச்சி!

வேதனையான நகைச்சுவை ..



வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை எப்போது பார்த்தாலும் சிரிப்பாகத்தான் இருக்​கிறது. ஐ.நா. சபைக்கு பேசப் போனவர் தான் படிக்க வேண்டியதை விட்டுவிட்டு இன்னொரு நாட்டு அமைச்சரது பேச்சைப் படித்தார். கடந்தவாரத்திலும் இலங்கை தொடர்பாக ஒரு அறிக்கையை இவர் தாக்கல் செய்ய வேண்டும். சபாநாயர் அழைத்தபிறகும் ரொம்ம்ம்ப நேரத்துக்கு அதையே தேடிக் கொண்டிருந்தார். 'சபையை அமைச்சர் அவமரியாதை செய்கிறார்’ என்று எதிர்க்​கட்சிகள் முழக்கமிடும் அளவுக்கு தேடிக் கொண்டே இருந்தார். இதேமாதிரி அடுத்த சம்பவம்...
'பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஒருவர் ராஜஸ்தான் சிறையில் இருக்கிறார். 80 வயதான அவரை விடுவிக்க வேண்டும்’ என்று ஒரு உறுப்பினர் கேட்டார். 'பாகிஸ்தான் சிறையில் இருக்கும் அவரை...’ என்று கிருஷ்ணா எதையோ சொல்ல ... குழம்பிப் போனார் கேள்வி கேட்டவர். மறுபடியும் அவர் கேட்க... இவர் சொன்னதையே திருப்பிச் சொல்ல கிடுகிடுத்துப் போனது சபை. மன்மோகன்தான் தலையிட்டு கிருஷ்ணா தலை​யைக் காப்பாற்றினார்.



இன்றைய சூழ்நிலையில் தி.மு.க-வுக்கு நண்பன் யார் !!
நல்ல வக்கீல்கள்!

49 comments:

  1. நல்ல என்றால் நல்ல அல்ல! (குழப்புகிறேனோ).வாதத் திறமை மிக்க--அப்படித்தானே!:)

    ReplyDelete
  2. ஷீலா வின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது!

    ReplyDelete
  3. உயிருக்கு உத்திரவாதம் இல்லை போராடுபவர்களுக்கு வேதனையான விசயம்

    ReplyDelete
  4. இதுக்கு தான் அந்த தகவலரியும் உரிமை சட்டத்தை யூஸ் பண்ண பலரும் தயங்குகிறார்கள்.

    ReplyDelete
  5. நல்ல வக்கில்???????

    ஹி....ஹி...ஹி.....

    ஏழர சனி தலைல உக்கார்ந்து கேரம் போர்ட் விளையாடும் போது என்ன பண்ணி என்ன பண்ண? ;))

    ReplyDelete
  6. தலைப்புக்கு விளக்கம்

    இரண்டு வார்த்தையில்...

    ReplyDelete
  7. தங்களுக்கு பிடித்தது எனக்கும் பிடித்திருக்கிறது...

    ReplyDelete
  8. ரியாஸ் அண்ணா...உங்கலுக்கு கஜினி சூர்யாவுக்கு போல் மெம்மரி லாஸ் வியாதியா?....காலையில வந்த ஜூனியர் விகடன் செய்தியையே சுட்டு போட்டுவிட்டு அதுக்கிடையில் எங்கே படிச்சீங்கன்னு மறந்துட்டீங்களே?...அப்படியே நம்ம கடைக்கும் வந்து பாருங்க...
    http://suttavan.blogspot.com/

    ReplyDelete
  9. கடைசி பன்ச் சூப்பர்

    ReplyDelete
  10. தமிழ்மணம் 7 போட்டசு

    ReplyDelete
  11. படித்துச் சுவைத்த தகவல்களைத் தலைப்பில் சுவாரஸ்யம் வைத்துப் பகிர்ந்திருக்கிறீங்க. ரசித்தேன்.

    ReplyDelete
  12. சூடான தலைப்பு மட்டும் வைக்காமல் இருந்திருந்தால் ஷீலா மசூத் பற்றி யாரும் பொருட்படுத்தியே இருக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  13. //Blogger சென்னை பித்தன் said...

    நல்ல என்றால் நல்ல அல்ல! (குழப்புகிறேனோ).வாதத் திறமை மிக்க--அப்படித்தானே!:)//

    சிலேடை அருமை சென்னை பித்தன் சார்:)

    ReplyDelete
  14. உண்மையாக போராடுபவர்களுக்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பது நம் நாடு பொருத்தவரை தலை குனிய வேண்டிய வெக்ககேடான விசயம் தான் நண்பரே!

    ReplyDelete
  15. to சென்னை பித்தன் said...

    thank you aiyaa

    ReplyDelete
  16. to சென்னை பித்தன் said...

    மிக சரியா சொனீங்க ஐயா ...நன்றி நன்றி அருமை

    ReplyDelete
  17. to M.R said...


    ஆமாம் சகோ ,அதுனால தான் இதை பகிர்ந்தேன் ..இந்த செய்தி கொஞ்சம் பரவட்டுமே

    ReplyDelete
  18. to M.R said...
    வேதனை சகோ வேதனை

    ReplyDelete
  19. to !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    tq

    ReplyDelete
  20. to ஆமினா said...

    அப்படியா எதுக்கு ..மீ tubelight

    ReplyDelete
  21. to ஆமினா said...

    he he ..yes u r right...tq

    ReplyDelete
  22. to # கவிதை வீதி # சௌந்தர் said...

    இன்று எதுவும் சொந்த சரக்கு இல்லை ..நன்றி

    ReplyDelete
  23. # கவிதை வீதி # சௌந்தர் said...
    tq bro

    ReplyDelete
  24. to சுட்டவன் said...
    சரி சரி ...ஆனா அது ஜூவி யா ? ரேபோர்ட்டர் என்று ஒரு பைலில் படித்தேன் ஹி ஹி ..முதல் வருகை தொடர்ந்து வாங்க நம்மக்கிட்ட சொந்த சரக்கும் இருக்கு சகோ

    ReplyDelete
  25. to "என் ராஜபாட்டை"- ராஜா said...


    இன்று எதுவும் சொந்த சரக்கு இல்லை ..நன்றி

    ReplyDelete
  26. to "என் ராஜபாட்டை"- ராஜா said...

    tq

    ReplyDelete
  27. to "என் ராஜபாட்டை"- ராஜா said...

    tq

    ReplyDelete
  28. to நிரூபன் said...

    மனிக்கவும் சகோ ...கொஞ்சம் வேலை அதுனால தான்

    ReplyDelete
  29. to ராஜ நடராஜன் said...

    உண்மைதான் சகோ ..ஒரு இருட்டடிப்பு செய்தியை பலரிடம் கொண்டு போய் சேர்த்த திருப்பதி ...அதனை சுட்டி காட்டியதற்கு நன்றி ...முதல் வருகை தொடர்ந்து வாங்க சகோ

    ReplyDelete
  30. to ராஜ நடராஜன் said...

    எங்கள் சென்னை பித்தன் ஐயா சார்ப்பாகவும் நன்றி சகோ ..

    ReplyDelete
  31. to ராஜ நடராஜன் said...

    எங்கள் சென்னை பித்தன் ஐயா சார்ப்பாகவும் நன்றி சகோ ..

    ReplyDelete
  32. to மாய உலகம் said...
    tq very much

    ReplyDelete
  33. to மாய உலகம் said...

    உண்மைதான் நண்பா. அந்த போராளியின் கதை பலருக்கு தெரிய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம் ..நன்றி நன்றி

    ReplyDelete
  34. சினிமாவுலதான் பஞ்ச்
    வலைத் தலைப்பிலும் பஞ்சா
    அருமை!

    ReplyDelete
  35. வேதனையான நகைச்சுவை இதைப் படித்ததில் எனக்கும் குழப்பம்

    வந்திச்சு .இப்புடிகூட நடக்குமா சகோ!.......நன்றி அருமையான பகிர்வு.....

    ReplyDelete
  36. வாய் விட்டுசிரிதேன் தனிமையில்

    ReplyDelete
  37. சட்ட சபையிலும். சட்ட ஒழுங்கிலும். . .இது தான் இந்தியா. . .

    ReplyDelete
  38. போராளிகளின் உயிருக்கு ஆபத்து
    இலங்கையில் மட்டும் இல்லை
    எங்கும்தான்
    கொள்ளைக்காரனுக்கு வாழ்வு
    சோமாலியாவில் மட்டும் இல்லை
    உலகம் எங்கும்தான்
    சிந்தனையை தூண்டிச் செல்லும்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. படித்ததை பகிர்ந்த தன்மை நல்லாயிருக்குங்க..
    வாழ்த்துக்கள் பகிர்வுக்கு..

    ReplyDelete
  40. முதல் இரண்டு விசயங்கள் நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டியது. மூன்றாவது அரசியல்வாதிகள் மேம்போக்கான நடத்தைகளை சொல்லி விட்டீர்கள். இப்படி
    பட்டவருக்கு ஒரு மந்திரி பதவி..வாழ்க ஜன நாயகம்.

    ReplyDelete
  41. அவருக்கு 80 ஆனா இன்னும் பணியில் இருந்து ஓய்வு குடுக்கல என்ன கொடும சார் இது

    ReplyDelete
  42. எங்க சகோ போய்விட்டீங்க ?...என் தளத்தில் உங்களைக் காணாமல்
    என் கவிதைகள் காத்திருக்கின்றது .விரைந்து வந்து உங்கள் கருத்தினைச் சொல்லுங்கள் .
    நன்றி ..........

    ReplyDelete
  43. சோகம் ,சோதனை , சிரிப்பு என்று மூன்றும் ஒன்றாய் நன்றி

    ReplyDelete