5.23.2011

கல்யாணம் கல்யா.............ண........................ம்!!

                             டைம் பத்திரிக்கையில இந்த வாரம் இந்திய ஆடம்பர திருமணங்களை பிரிட்டிஷ் அரசகுடும்ப திருமணத்தோடு ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்காங்க.அட பெருமையான விஷயம்னு தோனுதா ..வீண் விரயம்ன்னு எனக்கு தோணுது ,தோனுனதை புலம்பிட்டு போறேன்..

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இத்தகைய ஆடம்பர திருமணங்கள் தேவையான்னு பெரிய விவாதமே நடத்தலாம் . ராயபதி  சாம்பசிவ  ராவ் அப்படிங்குற ஒரு எம்.பி "இத்தகைய திருமணங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதை தவிர்கனும் மேலும் அந்த பணத்தை தர்மச்தலதிற்கு செலவு செய்யலாம் "ன்னு கருத்து சொல்லிருக்கார்.

                             இது யார் பெரியவன் என்னும் போட்டி மனப்பான்மையின் வெளிபாடே அப்படீன்னு மனோதத்துவ நிபுணர்கள் சொல்றாங்க . ஏன் பாஸ் இதே போட்டியை தர்மம் செய்யுறதுல காட்டலாமே ..சரி பதுக்கல் பணக்காரங்க தான் இப்படீன்னா மிடில் கிளாஸ் மக்களும் வட்டிக்கி கடன்வாங்கி இதே ஆடம்பர மயித்துக்கு (மன்னிக்கவும் ) அடிமையயிடுறாங்க.அந்த கடனில் இருந்து மீள்வதற்குள் மன உளைச்சலுக்கு ஆளாகி எல்லா வாயில நுழையாத பேருள்ள நோய்களை வாங்கி மடிகிறோம். 

                    மற்றவர்களையும் ,ஊழல் அரசியல்வாதிகளும் மட்டும் விலைவாசி ஏற்றத்திற்கு பொறுப்பு கிடையாது,நாமும் கூட  இந்த மாதிரி வீண்விரயங்களை தவிர்க்க வேண்டும்.திருமண நாள் அப்படிங்குற ஒரு நாள் கூத்துல நூறு பேர் வந்தா அதுல எதுன்னை பேர் நல்ல மனசோட வாழ்த்திட்டு போறாங்க யோசிச்சு பாருங்க .குறை கூரிகிட்டும் சவுடால் செய்துகொண்டும் திரியும் இம்சை அரசர்களே அதிகம் .எனவே நண்பர்களே அந்த நல்ல நாளிலே எத்துனை பேர் வர்றாங்க ,பக்கத்து வீடுக்காரனைவிட சிறப்பா செய்யணும் அப்படிங்குற எண்ணத்தை வீசி விட்டு ,விரல் விட்டு எண்ணகுடியவர்கள் வந்தாலும் அந்நாளை அர்த்தமுள்ள விஷேசமாக மாற்றும் எண்ணம் கொள்ளுங்கள் ப்ளீஸ் ..
               நீ யார் இதை சொல்லன்னு கேகுறீங்களா?நானும் எளிமையா கல்யாணம் செய்யணும் விரும்பினேன் ,ஆனால் சொந்தபந்தங்கள் நிர்பந்தம் செய்து ஆடம்பர வழியில் வீழ்ந்து இன்று கடன்பட்டு கஷ்டப்படும் முட்டாள் .நான் படும் வேதனை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் ,என் பதிவு அடுத்த தலைமுறை மாற்றத்திற்கு ஒரு தூசலவாவது உதவட்டுமே ..

8 comments:

  1. மிகவும் யோசிக்க வேண்டிய கருத்து நண்பரே அதுவும் இல்லாமல் இந்தியா ஏழை நாடல்ல ஏழைகள் அதிகம் இருக்கும் நாடு அதனால்தான் இது மாதிரியான ஆடம்பரங்கள் அதை பார்த்து நம் மிடில் கிளாஸ் மனமும் பாழவதுதான் கொடுமை

    ReplyDelete
  2. கருத்திற்கு நன்றி,இந்திய ஏழை நாடுன்னு நான் இந்த பதிவில் சொல்லவில்லை . வளரும் நாடுன்னு தான் சொல்லி இருக்கேன்

    ReplyDelete
  3. திருமணங்களில் செய்யப்படும் ஆடம்பரச் செலவு அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்!

    ReplyDelete
  4. நல்ல கருத்துதான்...

    ReplyDelete
  5. கண்டிப்பாக இது போன்ற ஆடம்பரசெலவுகளை குறைத்து, மற்றவர்களுக்கு பயன்படும் படி, பணத்தை நல்ல விசயங்களுக்கு செலவு செய்தால் நல்லது தான்..ஆனா யாரு சகோ அப்படி பண்ணுறாங்க?... சிந்திக்க கூடிய பதிவு தான்....

    என் பதிவு அடுத்த தலைமுறை மாற்றத்திற்கு ஒரு தூசலவாவது உதவட்டுமே ..

    மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து வரவேண்டும்..

    சோ நான் என் கல்யாண சமயம் அடம்பர செலவுகளை குறைச்சுக்கிறேன்...ஓகே யா...நல்ல பதிவு...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சென்னை பித்தன் said...//திருமணங்களில் செய்யப்படும் ஆடம்பரச் செலவு அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்!//நீங்க இங்க வந்தது ரொம்ப சந்தோசம் ..நன்றி

    ReplyDelete
  7. ரேவா said...////மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து வரவேண்டும்..சோ நான் என் கல்யாண சமயம் அடம்பர செலவுகளை குறைச்சுக்கிறேன்...ஓகே யா...நல்ல பதிவு...வாழ்த்துக்கள்///////நன்றி சகோ ! நான் தோற்றுவிட்டேன் ,நீங்க எல்லோறோம் வெற்றி பெற இறைவனை பிராதிகுரேன்

    ReplyDelete
  8. NKS.ஹாஜா மைதீன் said...///நல்ல கருத்துதான்...////நன்றி நண்பரே

    ReplyDelete