5.27.2011

இவன் எவன் ?

 ஒரு அழகிய கிராமம் , ரியல் எஸ்டேட் காரர்களின் கண்களின் இருந்து தப்பித்து இன்றும் மழை பொய்க்காததால் பச்சை பசேல் என காட்சி அளிக்கும் வயல்வெளிகள் .காலை பனி,சாரல் மழை,தங்க கீற்றாய் மின்னி மறையும்  மிதமான வெயில் என அனைத்தையும் இங்கு காணலாம் .இந்த இயற்க்கை அழகை ரசிப்பதற்காகவே தோட்டத்துடன் ஒரு பண்ணைவீடு கட்டி விடுமுறைகளுக்கு மட்டும் வந்து போகும் ஒரு செல்வந்தர்  இன்று காலையில்தான் வந்துசேர்ந்தார்.அவருடன் " தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்வுஇலாள் பெண்" என்ற குறளுக்கு ஏற்ற அவர் மனைவியும் ஆஜர்.

இங்கு அவர் வந்துவிட்டால் இளமை திரும்பியது போல்  உணர்வார். கை தொலைபேசியை கூட உபயோக்கிகாமல் இயற்க்கை அழகை கண்டுகழிப்பார். இவர் சினிமா பிரபலமோ அல்லது அரசியல் புள்ளியோ அல்ல.விளம்பர பிரியரும் அல்ல மாறாக கூச்ச சுபாவம் கொண்ட உழைத்து முன்னுக்கு வந்த நல்ல மனிதர்.பல நல்ல காரியங்களையும் நன்மைகளையும் சத்தமின்றி செய்பவர் .


         அவர் வீட்டு எதிர்புறத்தில் உள்ள டீ கடையில் நாள்தோறும் அன்றைய செய்திதாளுடன் அர்த்தமற்ற  பட்டிமன்றம் நடக்கும், ஆனா நம்ம பெரியவர் கிராமத்திற்கு வந்துவிட்டால் அவர் புராணம் தான் பேச்சே.அள்ளி அள்ளி கொடுக்குறான் மனுஷன், வேலை ஆளுகளுக்கு நல்ல சம்பளம் ,இவர் கிட்ட வேலை செய்தவன் பல பேர் இன்னைக்கு இவரை விட பணக்காரான இருக்காங்களாம் ,அப்படி இப்படீன்னு எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் இவர் புகழ் பாடுவார்கள்.ஆனா இந்த வெட்டி அரட்டையில சிலர் இவர் நம்மவர் தான் என்று அவரின் அடையாளம் தேடுவதிலேயே குறியாக இருந்தனர்.சிலசமயம் இந்த வாக்குவாதம் முற்றி சண்டையில் கூட முடிந்து இருக்கிறது .இன்று காலையிலதான் பெரியவர் வந்தார் அதற்குள்ள மூன்று நான்கு முறை கைகலப்பே வந்துவிட்டது.


           இதையெல்லாம் பார்த்து பார்த்து பொறுமை இழந்த அதே டீ கடையில் வேலை செய்யும் சிறுவன் இதற்கு முற்றிபுள்ளி வைக்க முடிவுசெய்தான் .அதற்காக அந்த வீட்டு தோட்டகாரர்களிடம் கேட்டுபார்தான் "அய்யா எங்களோட சேர்ந்து ஒண்ணா வேலைசெய்வார் சிலசமயம் சடுகுடு கூட விளையாடுவார் என்ன ஜாதி என்ன மதம்ன்னு அவரு சொன்னதும் இல்ல நாங்க கேட்டதும் இல்ல " என்றனர் .

அடுப்படி சென்று பணிப்பெண்களிடம் கேட்டான் "இந்த அம்மா கிட்ட தாலியும் இல்ல பொட்டும் இல்ல பர்தாவும் இல்ல ஆனா நல்ல சிறுச்ச முகம் கொண்ட சீதேவியான மனுசி ஆள் யாரும் வேலைக்கு வரைலேன்னா எங்ககூட சேர்ந்து பாத்திரம் கூட கழுவுவாக , இந்த மாதிரி கேள்வி கேட்டா  சிருச்சுகிட்டே மலுப்பிடும் " என்றனர் .எங்கும் சிறுவனுக்கு பதில் இல்லை.இந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டால் டீ கடையில் நடக்கும் அடிபுடி சலசலப்புகள் நீன்றுவிடும் என உறுதியாக எண்ணினான் .

                 இளம் கன்று பயம் அறியாது என்பதற்கு இணங்க அந்த  சிறுவன் நேராக அந்த பெரியவரிடமே டீ கடையில் நடப்பதை சொல்லி அய்யா நீங்க யாருன்னும் உங்கள் மதம் என்னன்னும் கேட்டான் . அந்த பெரியவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக வாழ நினைத்து கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்துவரும் நமக்கு இது சோதனையோ என நினைத்து வருந்தினார்.

பின்பு ஒரு முடிவுக்கு வந்தவர் ,அந்த சிறுவனிடம் இறைவனின் பத்து கட்டளைகள் நிரம்பிய ஒரு தாளை கொடுத்து ,"இறைவன் நம்மிடம் வணக்க வ்ழிபாடுகளையோ ,அராதனைகளையோ எதிர்ப்பார்பதில்லை.நல்ல பண்பையும் அவன் இட்ட கட்டளைகளுக்கு பணிந்து நடப்பதையும் தான் விரும்புகிறான்.இதைதான் நான் பின்பற்றுகிறேன்" என்றார்.சிறுவனை  கூட நன்றாக உபசரித்தே அனுப்பினார் , நன்றியுடன் விடைபெற்றான் சிறுவன்.
மறுநாள் டீக்கடையில் இந்த தலைப்பில் பேசியவர்கள் அனைவரிடமும் பெரியவர் கொடுத்த தாளை நீட்டினான் ,படித்த அனைவரும் சொல்லிவைத்தது போல  காலரை தூக்கி விட்டுகொண்டு " சொன்னேன்ல இவர் நம்ம ஆளுன்னு " என்று சொன்னார்கள்.இந்த பெருமை விரும்பும் வெட்டி கூட்டம் பெரியவர் சொன்ன செய்தியை காதில் வாங்கவே இல்லை.

பதில் கிடைத்தும் முடிவு பிறக்காததால் குழம்பிய சிறுவன் ,அனைவரின் மத கோட்பாடுகளுக்குள் பெரியவர் கொடுத்த பத்து கட்டளைகள் பொருந்தி போவதை கண்டு வியந்தான் . அடையாளத்தை மட்டும் தேடி திருப்தி கொண்ட அந்த மனிதர்களை கண்டு நொந்த சிறுவன்,இவர்கள் திருந்த போவதில்லை என்று எண்ணி  இறைவனின் கட்டளைகளை கவனிக்க தொடங்கினான்.

                                                                                            ரியாஸ் 


குறிப்பு :
            இது என் கன்னி முயற்சி.அமெச்சூர் தனமாக தான்   இருக்கும் உங்கள் கருத்துக்களும், விமர்சன்களும்,குட்டுகள் என் எழுத்துக்கு வலு சேர்க்கும். பொறுமையா படித்ததற்கு நன்றி . 

15 comments:

  1. சிறுகதை அருமையாக வந்திருக்கிறது. முதியவர்களினைத் தண்டிக்கும் சிறுவனின் முயற்சிகள் கதைக்குப் பக்க பலமாக உள்ளன சகோ. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  2. நிரூபன் said.../////சிறுகதை அருமையாக வந்திருக்கிறது. முதியவர்களினைத் தண்டிக்கும் சிறுவனின் முயற்சிகள் கதைக்குப் பக்க பலமாக உள்ளன சகோ. வாழ்த்துக்கள் சகோ.////நன்றி சகோ .என் மனம் நோக கூடாதுன்னு தானே சொன்னீங்க

    ReplyDelete
  3. உங்க கன்னி முயற்சி நல்லா தான் இருக்கு.. ஹி ஹி ஹி

    ReplyDelete
  4. பேராவை சின்னதா பிரிச்சு போடவும்.. நம்ம ஆளுங்களுக்கு சிறுசு எளசுன்னா பிடிக்கும் ஹி ஹி

    ReplyDelete
  5. நன்றாக இருந்தது...கடைசி வரை கதையில் யாருக்கும் பெயரை குறிப்பிடாமல் எழுதி இருக்குறீர்கள்....வித்தியாசமான முயற்சி..தொடருங்கள்..

    ReplyDelete
  6. NKS.ஹாஜா மைதீன் said...//நன்றாக இருந்தது...கடைசி வரை கதையில் யாருக்கும் பெயரை குறிப்பிடாமல் எழுதி இருக்குறீர்கள்....வித்தியாசமான முயற்சி..தொடருங்கள்..///நன்றி .தொடர சொல்லும் உங்க மன தைரியத்தை பாராட்டுகிறேன்

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...//பேராவை சின்னதா பிரிச்சு போடவும்.. நம்ம ஆளுங்களுக்கு சிறுசு எளசுன்னா பிடிக்கும் ஹி // உங்கள் குசும்பு அளவே இல்லை ,நன்றி குருவே .பிரிச்சாச்சு இளசா புதுசா ..நன்றி

    ReplyDelete
  8. ரியாஸ்... ஒரு நல்ல நாட்டை(Knot) பிடித்து அதை சிறுகதையாக சொல்ல முயற்சித்துள்ளீர்கள். முதல் முயற்சியான இது பரவாயில்லை ரகம். நிச்சயமாக உங்களால் அடுத்த கதையை இன்னும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.நட்புடன்,சிராஜ்

    ReplyDelete
  9. சிராஜ் said...
    ///.....//
    பரவாயில்லை என்பதே உங்கள் அன்பும் பெருந்தன்மையும் தான் ,நன்றி நன்றி ...

    ReplyDelete
  10. பொறுமையா படிச்சேனா ?? உங்க எழுத்தை பாத்து பொறாமையா படிச்சேன் , எந்த மொழியிலும் அம்மா அழகுதான் , அதுபோல நல்ல மொழி சொல்லும் எந்த வடிவமும் சிறப்புதான்.வாழ்த்துக்கள் சகோதரரே

    ReplyDelete
  11. A.R.ராஜகோபாலன் said...//--------------////நன்றி நண்பரே . உற்ச்சாகம் அளிக்கும் வார்த்தைகள் .நன்றி ஆனால் அதற்கு தகுதியான எழுத்தை விரைவில் எழுதுகிறேன்

    ReplyDelete
  12. ரியாஸ் வலைசரத்தில் நீங்கள் எனக்கு இப்போது அறிமுகம் ...இந்த கவிதை கூறும் கருத்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயம் அருமையாக சொன்ன உங்கள நடை அழகுக்கு ஒரு பாராட்டு

    ReplyDelete
  13. அன்பின் ரியாஸ் - கதையின் போகு இயல்பாக இருக்கிறது - அனைத்து மதங்களூம் போதிக்கும் கொள்கை அடிப்படையில் ஒன்று தான் - அது நன்றாகவே விளக்கப் பட்டிருக்கிறது - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  14. அனைத்து மதங்களும் போதிக்கும் கொள்கை அடிப்படையில் ஒன்று தான் என்பதை நன்றாகவே விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete